ATHMA VIDHYA VILASAM 61-65 J K SIVAN

ஆத்ம வித்யா விலாசம் 61-65 – நங்கநல்லூர் J K SIVAN
ஸதாசிவ ப்ரம்மேந்திரா

இந்த பதிவோடு ஸதாசிவ ப்ரம்மேந்திராளின் ஆத்ம வித்யா விலாசம் நிறைவு பெறுகிறது. மொத்தம் 65 ஸ்லோகங்கள். இதை புத்தகமாக்கி இலவசமாக விநியோகம் செய்ய விருப்பமுடையவர்கள் அணுகவும். ஜே கே சிவன் 9840279080

सुखतरममरमदूरं सारं संसारवारिधेस्तीरम् ।समरसमभयमपारं तत्किञ्चन विद्यते तत्त्वम् ॥ ६१॥
sukhataramamaramadUraM sAraM saMsAravAridhestIram |samarasamabhayamapAraM tatki~nchana vidyate tattvam || 61||
ஸுக²தரமமரமதூ³ரம் ஸாரம் ஸம்ஸாரவாரிதே⁴ஸ்தீரம் । ஸமரஸமப⁴யமபாரம் தத்கிஞ்சந வித்³யதே தத்த்வம் ॥ 61॥

ஆத்ம வித்யா விலாசம் ஸ்லோகங்கள் உண்மையில் ஸதாசிவ ப்ரம்மேந்த்ரரின் வாழ்க்கையின் பிரதி பிம்பம். அதில் வரும் ஞானியின் தன்மை குணம் எல்லாம் அவர் வாழ்ந்த வாழ்க்கை. ஆத்ம ஞானம் பெற்றவனுக்கு ஆனந்தத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லை. பிறப்பு இறப்பு முதுமை பசி தாகம் எல்லாம் கடந்த பட்ட கட்டை அவன். சம்சார சாகரத்தை எளிதில் கடந்தவன். த்ரிகாலமும் உணர்ந்தவன். பயம் பந்தம் பாசம் பற்று அற்றவன். சத்தியத்தை ஸாஸ்வதமாக உணர்ந்தவன். . சிறந்த மேலான சுகத்தை அறிந்தவன். தானே ஸத்யமாக வாழ்பவன். பிரம்மத்தில் காலத்தவன்.

अरसमगन्धमरूपं विरजस्कमसत्त्वमतमस्कम् ।निरुपमनिर्भयतत्त्वं तत्किमपि द्योतते नित्यम् ॥62॥
arasamagandhamarUpaM virajaskamasattvamatamaskam |nirupamanirbhayatattvaM tatkimapi dyotate nityam || 62||
அரஸமக³ந்த⁴மரூபம் விரஜஸ்கமஸத்த்வமதமஸ்கம் । நிருபமநிர்ப⁴யதத்த்வம் தத்கிமபி த்³யோததே நித்யம் ॥ 62॥

ஐம்புலன்களால் உணரப்படும் சுவை, மணம், ரூபம், இல்லாததும், ரஜஸ், சத்வ, தமஸ் குணங்களற்றதும், ஒப்புமையற்றதும் பயம் அறியாததுமான ஸத்யம் , நித்யம், எப்போதும் ஞான ஒளியாக பிரகாசித்துக்கொண்டே உள்ளது. விவரிக்க இயலாதது. சத்வ ரஜோ தமோ குணங்களுக்கு அப்பாற்பட்டது. எதனோடும் ஒப்பிடமுடியாதது.

ति गुरुकरुणापाङ्गादार्याभिर्द्व्यधिकषष्टिसङ्ख्याभिः ।निरवद्याभिरवोचं निगमशिरस्तन्त्रसारभूतार्थम् ॥ 63॥
iti gurukaruNApA~NgAdAryAbhirdvyadhikaShaShTisa~NkhyAbhiH |niravadyAbhiravochaM nigamashirastantrasArabhUtArtham || 63||
இதி கு³ருகருணாபாங்கா³தா³ர்யாபி⁴ர்த்³வ்யதி⁴கஷஷ்டிஸங்க்²யாபி:⁴ । நிரவத்³யாபி⁴ரவோசம் நிக³மஶிரஸ்தந்த்ர ஸாரபூ⁴தார்த²ம் ॥ 63॥

குருவின் கடைக்கண் பார்வைக்கருணையினால், வேதத்தின் சிகரமான உபநிஷத தத்துவார்த்த சாரம் உள்ளடங்கிய இந்த 62 ஸ்லோகங்களை ‘ஆர்யா’ எனும் சந்தஸில், அதாவது செய்யுள் உருவத்தில், ஒரு வித குறையும் இன்றி சதாசிவ பிரம்மேந்திரர் அளித்திருக்கிறார். இதை அனுபவித்து அப்படியே உச்சரிப்பவன் மேன்மை பெறுபவன். சதாசிவ ப்ரம்மேந்த்ரர் தான் இந்த ஸ்லோகங்களை குரு அருளால் அவர் கருணையால் அறிந்ததாக செப்புகிறார்.

गदितमिममात्मविद्याविलासमनुवासरं स्मरन्विबुधः ।परिणतपरात्मविद्यः प्रपद्यते सपदि परमार्थम् ॥ 64 gaditamimamAtmavidyAvilAsamanuvAsaraM smaranvibudhaH |pariNataparAtmavidyaH prapadyate sapadi paramArtham || 64||
க³தி³தமிமமாத்மவித்³யாவிலாஸமநுவாஸரம் ஸ்மரந்விபு³த:⁴ । பரிணதபராத்மவித்³ய: ப்ரபத்³யதே ஸபதி³ பரமார்த²ம் ॥ 64॥

இந்த ஆத்ம வித்யா விலாச ஸ்லோகங்களை ஞான தாகம் கொண்டவர் தினந்தோறும் ஸ்மரணம் செய்தால், அவர் மேலான ஆத்மவித்யையில் வளர்ச்சிபெற்று, விரைவில் பரம்பொருளை அடைவார் என்று சதாசிவ ப்ரம்மேந்திரா உணர்த்துகிறார்.

परमशिवेन्द्रश्रीगुरुशिष्येणेत्थं सदाशिवेन्द्रेण ।रचितेयमात्मविद्याविलासनाम्नी कृतिः पूर्णा ॥ 65॥
paramashivendrashrIgurushiShyeNetthaM sadAshivendreNa |rachiteyamAtmavidyAvilAsanAmnI kR^itiH pUrNA || 65||
பரமஶிவேந்த்³ரஶ்ரீகு³ருஶிஷ்யேணேத்த²ம் ஸதா³ஶிவேந்த்³ரேண । ஆத்மவித்³யாவிலாஸ: ரசிதேயமாத்ம வித்³யாவிலாஸ நாம்நீ க்ரு’தி: பூர்ணா ॥

ஸ்ரீ குரு பரமசிவேந்திரரின் சிஷ்யரான ஸதாசிவேந்திரரால் இயற்றப்பட்ட இந்த ஆத்மவித்யா விலாஸம் என்ற பெயர் கொண்ட ஸ்லோகங்கள் இத்துடன் சம்பூரணமாகின்றது, .நிறைவு பெறுகிறது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *