AATHMA VIDHYA VILASAM 55-60 – J K SIVAN

ஆத்ம வித்யா விலாசம் 56-60 – நங்கநல்லூர் J K SIVAN
ஸதாசிவ ப்ரம்மேந்திரா

आचार्यापाङ्गदृशा समवाप्तापारसंविदाकारः ।प्रशमितसकलविभेदः परहंसः कश्चिदाभाति ॥ ५६॥
AchAryApA~NgadR^ishA samavAptApArasaMvidAkAraH |prashamitasakalavibhedaH parahaMsaH kashchidAbhAti || 56||
ஆசார்யாபாங்க³த்³ரு’ஶா ஸமவாப்தாபாரஸம்விதா³கார: । ப்ரஶமிதஸகலவிபே⁴த:³ பரஹம்ஸ: கஶ்சிதா³பா⁴தி ॥ 56॥

56. ஒருவன் மேன்மை அடைய எது அவசியம் என்பதை சதாசிவ ப்ரம்மேந்திரா இந்த ஸ்லோகத்தில் விளக்குகிறார். குருவிடம் பக்தி ரொம்ப ரொம்ப முக்கியமானது. குருவின் கடைக்கண் பார்வை ஒன்றே போதும். பக்தனை மிக உயர்ந்த நிலையில் வைத்து விடும். அப்படி தானே ப்ரம்மேந்திரா தனது குரு பரமஹம்சரின் அருளாசியைப் பெற்றவர். ஞானி குருவருளால் ஞானம் பெற்று பேதம் ஒழித்து, எவ்வுயிரிடத்தும் செந்தண்மை பூண்டு ப்ரம்ம ஸ்வரூபமாக வாழ்கிறவன்.

57. वर्णाश्रमव्यवस्थामुत्तीर्य विधूय विद्यादीन् ।परिशिष्यते यतीन्द्रः परिपूर्णानन्दबोधमात्रेण ॥ ५७॥
varNAshramavyavasthAmuttIrya vidhUya vidyAdIn |parishiShyate yatIndraH paripUrNAnandabodhamAtreNa || 57||
வர்ணாஶ்ரமவ்யவஸ்தா²முத்தீர்ய விதூ⁴ய வித்³யாதீ³ந் । பரிஶிஷ்யதே யதீந்த்³ர: பரிபூர்ணாநந்த³போ³த⁴மாத்ரேண ॥ 57॥\

57. முக்தி அடைந்த ஞானிக்கு வர்ணம் பேதம், வித்யாசம் எதுவும் எவ்வுயிரிடத்திலும் இல்லை. சம்சார நிலைகளான பிரம்மச்சாரி, க்ரஹஸ்தன், வானப்ரஸ்தன் சந்நியாசி என்ற பாகுபாடு எதுவும் இல்லை. பிராமணன் க்ஷத்திரியன் வைசியன் சூத்ரன் என்ற வகுப்பு பிரிவு, வாதமும் எதுவும் கிடையாது. எல்லாமும், எல்லாரும் ஒன்றே என அறிந்து உணர்ந்து நடந்து கொள்பவன். சகலமும் துறந்து இச்சை விருப்பு வெறுப்பு ஆசை பாசம் எதுவும் இல்லாத துறவி. சதா சர்வகாலமும் ப்ரம்மத்தையே நாடி அதில் லயித்து இருப்பவன்.

क्षयमुपनीय समस्तं कर्म प्रारब्धमुपभुज्य ।प्रविगलितदेहबन्धः प्राज्ञो ब्रह्मैव केवलं भवति ॥ 58॥
kShayamupanIya samastaM karma prArabdhamupabhujya |pravigalitadehabandhaH prAj~no brahmaiva kevalaM bhavati || 58||
க்ஷயமுபநீய ஸமஸ்தம் கர்ம ப்ராரப்³த⁴முபபு⁴ஜ்ய । ப்ரவிக³லிததே³ஹப³ந்த:⁴ ப்ராஜ்ஞோ ப்³ரஹ்மைவ கேவலம் ப⁴வதி ॥ 58॥

58 ப்ரம்ம ஞானிக்கு கர்மம் எதுவும் இல்லை. காற்றில் பறக்கும் பஞ்சு போல எங்கும் ஸ்வதந்த்ரமாக உலவுபவன் . அவனுக்கென்று எதுவுமே உலகில் கிடையாது. இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் அதில் ஒட்டாதவன். தேகம் இருப்பதையே மறந்தவன். சித்தானந்தன் .

स्तिमितमनन्तमनाद्यं सन्ततमानन्दबोधघनम् । अविकल्पमाद्यमेकं सन्मात्रं विद्यते किमपि ॥ 59॥
stimitamanantamanAdyaM santatamAnandabodhaghanam |avikalpamAdyamekaM sanmAtraM vidyate kimapi || 59||
ஸ்திமிதமநந்தமநாத்³யம் ஸந்ததமாநந்த³போ³த⁴க⁴நம் । அவிகல்பமாத்³யமேகம் ஸந்மாத்ரம் வித்³யதே கிமபி ॥ 59॥

59. பாரபக்ஷமற்ற நடுநிலையில் என்றும் எப்போதும் உள்ளவன் ஞானி. விவரிக்கமுடியாத ஆனந்தத்தை ஆத்ம விசாரத்தில் அடைந்தவன். அமைதியானவன். முக்காலங்களையும் (இறந்த, நிகழ், எதிர்) வென்றவன். ஆத்மாவை அறிந்தவன் புரிந்து கொண்டவன் இன்பத்தில் திளைப்பதைல் என்ன ஆச்சர்யம்? அதனால் தான் அவன் அமைதியாக, அத்வைத ஸ்வரூபமாக இருப்பவன். ஜனனம் மரணம் மூப்பு வியாதி எதைப் பற்றியும் கவலை இல்லாதவன்.

अक्षरमजरमजातं सूक्ष्मतरापूर्वशुद्धविज्ञानम् । प्रगलितसर्वक्लेशं परतत्त्वं वर्तते किमपि ॥ 60॥
aksharamajaramajaatham sookshmatharaa poorva suththa vignanam. prgalithasarvaklesam parathathvam varthathe kimapi. 60
அக்ஷரமஜரமஜாதம் ஸூக்ஷ்மதராபூர்வஶுத்³த⁴விஜ்ஞாநம் । ப்ரக³லிதஸர்வக்லேஶம் பரதத்த்வம் வர்ததே கிமபி ॥ 60॥

அழிவில்லாததும், மூப்பில்லாததும், பிறப்பில்லாததும், அதிசூட்சுமமானதும், முன்பறிந்திராத, காண இயலாத தூய ஆத்ம ஞானம் அறிந்தவனுக்கு எந்தவித துன்பக் கிலேசங்களும் இல்லை. ஸர்வம் ப்ரம்ம மயம் என்று உணர்ந்து இன்புறுபவன்.
நிச்சிந்தையாக பிரம்மத்தில் தன்னை இழந்தவன். அதுவே ஸாஸ்வதம் என்று அறிந்தவன். காணும் யாவும் மாயை என்று புரிந்தவன். பிரம்மத்தில் லயித்தவனுக்கு எந்த உணர்ச்சிவசமும் கிடையாது. சுக துக்கங்கள், இன்ப துன்பங்கள் பற்று எதுவுமே இல்லாத ஆனந்தமயமானவன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *