AATHMA VIDHYA VILASAM -41/45 – J K SIVAN

ஆத்ம வித்யா விலாசம் 41-45 – நங்கநல்லூர் J K SIVAN
ஸதாசிவ ப்ரம்மேந்திரா

निन्दति किमपि न योगी नन्दति नैवापरं किमप्यन्तः ।चन्दनशीतलहृदयः कन्दलितानन्दमन्थरः स्वास्ते ॥ ४१॥
nindati kimapi na yogI nandati naivAparaM kimapyantaH | chandanashItalahR^idayaH kandalitAnandamantharaH svAste || 41||
நிந்த³தி கிமபி ந யோகீ³ நந்த³தி நைவாபரம் கிமப்யந்த: । சந்த³நஶீதலஹ்ரு’த³ய: கந்த³லிதாநந்த³மந்த²ர: ஸ்வாஸ்தே ॥ 41॥

ஞான மார்கத்தில் நான்கு படிகள். ,விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம், துரீயம் , இந்தஉயர்ந்த நான்காவது நிலையில் எப்போதும் இருப்பவன் .ப்ரம்ம ஞானி யோகத்தில் ஆழ்ந்து மூழ்கிய நிலை துரீயம். ப்ரம்மத்துடன் கலந்த நிலையில் எதற்கும் பிரம்மத்தை நினைக்கக்கூட தேவையில்லை அவனுக்கு. அவனுக்கு எவரையும் தூற்றவோ,போற்றவோ அவசியமே இல்லை. அவன் ஹ்ருதயம் குளிர்ந்த சந்தனம் மாதிரி. சதானந்தன் அவன். சதாசிவ ப்ரம்மேந்திரா அப்படி வாழ்ந்தவர்.

सन्त्यज्य शास्त्रजालं संव्यवहारं च सर्वतस्त्यक्त्वा ।आश्रित्य पूर्णपदवीमास्ते निष्कम्पदीपवद्योगी ॥ ४२॥
santyajya shAstrajAlaM saMvyavahAraM cha sarvatastyaktvA | Ashritya pUrNapadavImAste niShkampadIpavadyogI || 42|
ஸந்த்யஜ்ய ஶாஸ்த்ரஜாலம் ஸம்வ்யவஹாரம் ச ஸர்வதஸ்த்யக்த்வா । ஆஶ்ரித்ய பூர்ணபத³வீமாஸ்தே நிஷ்கம்பதீ³பவத்³யோகீ³ 42.

நதியைக்கடந்தவனுக்கு படகின் உபயோகம் தேவையில்லை அல்லவா? அது போலவே ப்ரம்ம ஞானிக்கு, வேதம் சாஸ்திரம் புராணம் நூல்கள்மூலம் பெரும் ஞானம் அவசியமில்லை. அவை கூறுவது அனைத்தையும் அவன் அடைந்தாயிற்று. எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் ஒளிவீசும் தீபம் அவன்.

ङ्कचर्चिताङ्गस्तृणमिव विश्वं विलोकयन्योगी ।विहरति रहसि वनान्ते विजरामरभूम्नि विश्रान्तः ॥ 43॥
tR^iNapa~NkacharchitA~NgastR^iNamiva vishvaM vilokayanyogI |viharati rahasi vanAnte vijarAmarabhUmni vishrAntaH || 43||
த்ரு’ணபங்கசர்சிதாங்க³ஸ்த்ரு’ணமிவ விஶ்வம் விலோகயந்யோகீ³ । விஹரதி ரஹஸி வநாந்தே விஜராமரபூ⁴ம்நி விஶ்ராந்த: ॥ 43॥ ॥

ப்ரம்ம ஞானி உடலை மறந்தவன்.மறந்தவன். காடு மலை பள்ளம் மேடு எல்லாம் ஒன்றே அவனுக்கு. அவன் மண், அழுக்கு, சிக்கு, சேறு எதால் நிரம்பி இருந்தாலும் அந்த ஸ்மரணையே இல்லாதவன். உலகை ஒரு புல்லாக மதிப்பவன். அவனுக்கு களைப்போ, விருத்தாப்பியமோ, மரண பயமோ எதுவுமில்லை. சித்தர்கள் அப்படித்தான் பித்தர்கள் போல் காணப்படுபவர்கள். .சேஷாத்ரி ஸ்வாமிகள் அப்படித்தான் திருவண்ணாமலையில் வாழ்ந்து பைத்தியம் எனும் பட்டம் பெற்றவர் இப்படிப்பட்ட உன்மத்த நிலைக்கு அபரோக்ஷ ஞானம் என்று பெயர்.ப்ரம்ம ஞானியின் குணம். சகல ஜீவராசிகளையும் வித்தியாசமின்றி ஒன்றாக பரம அன்போடு பார்ப்பவன்.

पश्यति किमपि न रूपं न वदति न श‍ृणोति किञ्चिदपि वचनम् ।तिष्ठति निरुपमभूमनि निष्ठामवलम्ब्य काष्ठवद्योगी ॥ 44॥
pashyati kimapi na rUpaM na vadati na shR^iNoti ki~nchidapi vachanam | tiShThati nirupamabhUmani niShThAmavalambya kAShThavadyogI ||
பஶ்யதி கிமபி ந ரூபம் ந வத³தி ந ஶ்ரு’ணோதி கிஞ்சித³பி வசநம் । திஷ்ட²தி நிருபமபூ⁴மநி நிஷ்டா²மவலம்ப்³ய காஷ்ட²வத்³யோகீ³ ॥ 44॥

பரமஹம்ச ப்ரம்மஞானி யோக சித்தன். அவன் கண்கள், காதுகள், வாய்,போன்ற புலன்கள் நமது புலன்கள் போல் இல்லை. அவற்றின் உணர்வுகள், உணச்சிகளுக்கும் இடம் தராதவன். ஆத்ம ஞானிக்கு எந்த சடங்கும் நாளும் கிழமையும்
கிடையாது. பேச்சற்றவன். பேசினாலும் புரியாது. புயலில் கலங்காத மலைப்பாறை போல் உலகின் ஈர்ப்புகளால் பாதிக்கப்படாதவன். பட்ட கட்டை அவன்.

जात्यभिमानविहीनो जन्तुषु सर्वत्र पूर्णतां पश्यन् ।गूढं चरति यतीन्द्रो मूढवदखिलागमार्थतत्त्वज्ञः ॥ 45॥
jAtyabhimAnavihIno jantuShu sarvatra pUrNatAM pashyan | gUDhaM charati yatIndro mUDhavadakhilAgamArthatattvaj~naH || 45||
ஜாத்யபி⁴மாநவிஹீநோ ஜந்துஷு ஸர்வத்ர பூர்ணதாம் பஶ்யந் । கூ³ட⁴ம் சரதி யதீந்த்³ரோ மூட⁴வத³கி²லாக³மார்த²தத்த்வஜ்ஞ: ॥ 45
ஆத்ம ஞானிக்கு ஜாதி, மதம், உறவு, சொந்தம் எதுவும் அற்றவன். வீடு வாசல் மக்கள், அந்தஸ்து, ஊர் பேர் அடையாளம் எல்லாம் விலக்கியவன். ப்ரம்ம நிஷ்டன். நேரம் காலம், இன்று நேற்று நாளை எல்லாமே ஒன்றானவன்.
இதை படிக்கும்போது நமக்கு ஒன்று நிச்சயமாக புரியும். நாம் செல்ல வேண்டிய பாதை ரொம்பவே நீளமானது, தூரமானது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *