HANUMAN PANCHARATHNA SLOKAS J K SIVAN

ஸ்ரீ ஹனுமான் பஞ்சரத்னம் – நங்கநல்லூர் J K SIVAN
ஆதிசங்கரர்

முப்பத்திரெண்டு வயதில் நமக்கு மூச்சே நின்று விடும் அளவு பிரமிக்கும் வகையில் ஆதி சங்கரர் எத்தனையோ ஸ்தோத்திரங்கள், பாஷ்யங்கள், வேத சார நூல்களை, ஸ்துதிகளை தந்து விட்டு போய் இருக்கிறார். அவற்றை படிக்க முன்னூறு ஜன்மாக்கள் கூட நமக்கு போதாது. அதில்குட்டியாக ஒன்றை இன்று அளிக்கிறேன். அதற்கு ஹனுமத் பஞ்ச ரத்னம் என்று பெயர்.

ஹனுமான் ஸ்ரீ ராம தூதன். சிரஞ்சீவி. அன்றும் இன்றும் என்றும் அளித்துக் காப்பவன். எளிமையானவன். எங்கெங்கெல்லாம் ஸ்ரீ ராமன் நாமம் உச்சரிக்கப்படுகிறதோ,நினைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் சூக்ஷ்ம ஸரீரத்தோடு இன்றும் காணப்படுபவன். நவ வ்யாகர்ண பண்டிதன். ஞாநி, யோகி. மஹா பெரியவா அவனை புத்திமான் பலவான் என்று போற்றி நாம் அவனை வணங்கி புத்தி கூர்மை, பலம், தைர்யம், பயமின்மை, ஆரோக்கியம் என சகல நன்மைகளையும் பெறலாம் என்று அடிக்கடி சொல்வார். எங்கள் நங்கநல்லூரில் 32 அடி உயர ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயனை காணாத கண்கள் கண்ணல்ல.

1. वीताखिल-विषयेच्छं जातानन्दाश्र पुलकमत्यच्छम् ।सीतापति दूताद्यं वातात्मजमद्य भावये हृद्यम् ॥ १॥
vītākhila-viṣayecchaṃ jātānandāśra pulakamatyaccham ।sītāpati dūtādyaṃ vātātmajamadya bhāvaye hṛdyam ॥ 1॥

ஹனுமான் வாயுபுத்ரன். நினைத்தாலே இனிப்பவன். ஜிதேந்த்ரியன். ராமா என்ற சொல் காதில் விழுந்தாலே ஆனந்தக் கண்ணீர் வடிப்பவன். பரிசுத்தமானவன். ராமனின் ப்ரதம சேவகன். அவனைப் போற்றுவோம்.

2.तरुणारुण मुख-कमलं करुणा-रसपूर-पूरितापाङ्गम् । सञ्जीवनमाशासे मञ्जुल-महिमानमञ्जना-भाग्यम् ॥ २॥
taruṇāruṇa mukha-kamalaṃ karuṇā-rasapūra-pūritāpāṅgam । sañjīvanamāśāse mañjula-mahimānamañjanā-bhāgyam ॥ 2॥

ஹனுமான் சுந்தரன். அழகிய தாமரை மலர் போன்ற உள்ளமும் முக காந்தியும் உடைய யோகி. செந்நிற உதயகால சூர்யன் போன்ற பிரகாசமான வதனன் . கருணா சாகரன். நாம் ஜீவித்திருக்க காரணமான ப்ராணவாயு. அஞ்சனாபுத்ர ஆஞ்சநேயன். அவனுக்கு நமஸ்காரம்.

3. शम्बरवैरि-शरातिगमम्बुजदल-विपुल-लोचनोदारम् ।कम्बुगलमनिलदिष्टम् बिम्ब-ज्वलितोष्ठमेकमवलम्बे ॥ ३॥
śambaravairi-śarātigamambujadala-vipula-locanodāram । kambugalamaniladiṣṭam bimba-jvalitoṣṭhamekamavalambe ॥ 3॥

மாருதி, மனோவேகத்தை விட பன்மடங்கு வேகமாக பிரயாணிப்பவன். மதனின் அம்பை விட சக்தி வாய்ந்த அருளாளி. வெண்சங்கு போன்ற மென்மையான கழுத்தை உடையவன். வாக் சாதுர்யம் அளிப்பவன். நினைத்ததை நிறைவேற்றி அருள்பவன். அவனது கோவைப் பழத்தை போன்ற இளம்சிவப்பு வர்ண உதடுகள் சதா ராம ராமா என்று ஜபித்துக்கொண்டே இருப்பவை. அவனை வணங்குவோர் பாக்கியசாலிகள்.

4. दूरीकृत-सीतार्तिः प्रकटीकृत-रामवैभव-स्फूर्तिः । दारित-दशमुख-कीर्तिः पुरतो मम भातु हनुमतो मूर्तिः ॥ ४॥
dūrīkṛta-sītārtiḥ prakaṭīkṛta-rāmavaibhava-sphūrtiḥ । dārita-daśamukha-kīrtiḥ purato mama bhātu hanumato mūrtiḥ ॥ 4॥

ஹனுமா, உன் திவ்ய சுந்தர ரூப தர்சனம் பெற அருள்வாய். சீதையின் சோகத்தை அகற்றியவனே, ஸ்ரீ ராமனின் பராக்ரராமத்தை பறைசாற்றியவனே, ராவணேஸ்வரனின் புகழை பெருமையை ஒன்றுமில்லா மல் மங்கச்செய்தவனே, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

5. वानर-निकराध्यक्षं दानवकुल-कुमुद-रविकर-सदृशम् ।दीन-जनावन-दीक्षं पवन तपः पाकपुञ्जमद्राक्षम् ॥ ५॥
vānara-nikarādhyakṣaṃ dānavakula-kumuda-ravikara-sadṛśam । dīna-janāvana-dīkṣaṃ pavana tapaḥ pākapuñjamadrākṣam ॥ 5॥

ஆஞ்சநேயா , வானர ஸைன்ய முக்கியனே, சூர்ய கிரணங்கள் தாமரை மொட்டவிழசெய்வதைப் போல் உன் பக்தர்கள் வாழ்வை மலரச்செய்பவனே, அஞ்சேல் என முன் தோன்றுபவனே, துயரங்கள் துக்கங்களை அழிப்பவனே, ப்ராணன் எனும் ஜீவசக்தியே, உனக்கு நமஸ்காரம்.

6. एतत्-पवन-सुतस्य स्तोत्रं यः पठति पञ्चरत्नाख्यम् । चिरमिह-निखिलान् भोगान् भुङ्क्त्वा श्रीराम-भक्ति-भाग्-भवति ॥ ६॥
etat-pavana-sutasya stotraṃ yaḥ paṭhati pañcaratnākhyam । ciramiha-nikhilān bhogān bhuṅktvā śrīrāma-bhakti-bhāg-bhavati ॥

ஸ்ரீ ஹனுமானின் பஞ்சரத்ன ஸ்லோகங்கள் நாம் சகல சௌபாக்கியங்களும் ஆனந்தமும் பெற செய்பவை என்று ஆதி சங்கரர் பலஸ்ருதியாக இந்த ஆறாவது ஸ்லோகத்தை அளித்திருக்கிறார். ஸ்ரீ ராம நாமத்தை நாம் ஜபிக்க ராம பக்த ஆஞ்சநேயன் நிச்சயம் உதவுவான்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *