WHO IS RAMA?

ராமனைப் பற்றி அறிவோம் – நங்கநல்லூர் J K SIVAN

திரேதாயுகத்தில் ஒருநாள் நாரத முனி வால்மீகி ஆஸ்ரமத்துக்கு செல்கிறார். பேச்சு வாக்கில் வால்மீகி நாரதரை கேட்கிறார்:
”மகரிஷி நாரதரே, உங்ளை சந்திக்கும்போது சில விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணம். பகவான் உங்களை அனுப்பியது நல்லதாக போய்விட்டது.
” மகரிஷி வால்மீகி, ஆஹா என்னிடம் தங்களுக்கு கேட்க விரும்பியது எதுவோ கேளுங்களேன்.முடிந்ததை சொல்கிறேன்.’

”நாரதரே, நீங்கள் தான் திரிகால ஞானி, திரிலோக சஞ்சாரி , உமக்கு தெரிந்து எங்காவது ஒரு தனிமனிதன் சகல நல்ல குணங்களும் வாய்ந்தவனாக இருக்கிறானா?’
”ஆஹா இருக்கிறானே ஒருவன். அவன் தான் ஸ்ரீ ராமன்.
‘அப்படி அவனிடம் என்ன விசேஷம்?
”சொல்கிறேன் கேளும்’
आत्मवान्को जितक्रोधो द्युतिमान्कोऽनसूयक: ।कस्य बिभ्यति देवाश्च जातरोषस्य संयुगे ।।1.1.4।।
”ஆத்மவாந்கோ ஜிதக்ரோதோ த்யுதிமாந்கோநஸூயக: கஸ்ய பிப்யதி தேவாஷ்ச ஜாதரோஷஸ்ய ஸஂயுகே ৷৷1.1.4৷৷

”ராமனிடம் கம்பீரம், அழகு, எல்லோரிடமும் பிரியம், எதற்கும், எவரிடமும் பயமின்மை, எங்கும் எதிலும் வெற்றி. புத்தி கூர்மை, சாதுர்யம்,பொறுமை, பொறாமை இன்மை இதெல்லாம் எதேஷ்டமாக இருக்கிறது.”

एतदिच्छाम्यहं श्रोतुं परं कौतूहलं हि मे । महर्षे त्वं समर्थोऽसि ज्ञातुमेवंविधं नरम् ।।1.1.5।.
ஏததிச்சாம்யஹஂ ஷ்ரோதுஂ பரஂ கௌதூஹலஂ ஹி மே .மஹர்ஷே த்வஂ ஸமர்தோஸி ஜ்ஞாதுமேவஂவிதஂ நரம்

इक्ष्वाकुवंशप्रभवो रामो नाम जनैश्श्रुत: ।नियतात्मा महावीर्यो द्युतिमान्धृतिमान् वशी ।।1.1.8।।
இக்ஷ்வாகுவஂஷப்ரபவோ ராமோ நாம ஜநைஷ்ஷ்ருத: .நியதாத்மா மஹாவீர்யோ த்யுதிமாந்தரிதிமாந் வஷீ ৷৷1.1.8৷৷

இக்ஷ்வாகு குல திலகன் ராமன் புலன்களை வென்ற புத்திமான்.

மஹோரஸ்கோ மஹேஷ்வாஸோ கூடஜத்ருரரிந்தமஃ ஆஜாநுபாஹுஸ்ஸுஷிராஸ்ஸு லலாடஸ்ஸுவிக்ரமஃ ৷৷1.1.10৷৷

எல்லோரையும் வசீகரிக்கும் தோற்றம் கொண்டவன்.

ஸமஸ்ஸமவிபக்தாங்கஸ்ஸ்நிக்தவர்ண: ப்ரதாபவாந் .பீநவக்ஷா விஷாலாக்ஷோ லக்ஷ்மீவாந் ஷுபலக்ஷணஃ ৷৷ 1.1.11৷৷

”பரந்த மார்பு, விரிந்த தோள் , பலமிக்க அங்கங்கள்,விசாலமான கண்கள், லக்ஷ்மிகடாக்ஷம் நிறைந்தவன்.

தர்மஜ்ஞஸ்ஸத்யஸந்தஷ்ச ப்ரஜாநாஂ ச ஹிதே ரதஃ .யஷஸ்வீ ஜ்ஞாநஸம்பந்நஷ்ஷுசிர்வஷ்யஸ்ஸமாதிமாந் ৷৷1.1.12৷৷

தானம் தர்மம் புரியும் மனம் கொண்டவன். ஸத்யஸந்தன். ஞானி. அடைக்கலம் புகுந்தோரை ரக்ஷிப்பவன்.

ப்ரஜாபதி ஸமஷ்ஷ்ரீமாந் தாதா ரிபுநிஷூதநஃ . ரக்ஷிதா ஜீவலோகஸ்ய தர்மஸ்ய பரி ரக்ஷிதா ৷৷1.1.13৷৷

தர்ம பரிபாலனம் புரிபவன்.லோக சம்ரக்ஷகன்.

வேதவேதாங்கதத்த்வஜ்ஞோ தநுர்வேதே ச நிஷ்டிதஃ ৷৷1.1.14৷৷
சர்வ வேத சாரம் ஆனவன். தனுர் வித்தை நிபுணன். கோதண்டபாணி.

ஸர்வஷாஸ்த்ரார்ததத்த்வஜ்ஞஸ்ஸ்மரிதிமாந்ப்ரதிபாநவாந் .ஸர்வலோகப்ரியஸ்ஸாதுரதீநாத்மா விசக்ஷணஃ ৷৷1.1.15৷৷

நடுநிலையான மனது கொண்டவன். பாரபக்ஷமற்றவன்.

ஸர்வதாபிகதஸ்ஸத்பிஸ்ஸமுத்ர இவ ஸிந்துபிஃ .ஆர்யஸ்ஸர்வஸமஷ்சைவ ஸதைகப்ரியதர்ஷநஃ ৷৷1.1.16৷৷

நதிகளுக்கு சமுத்ரம் அடைக்கலம் அளிப்பது போல சகல ஜீவராசிகளுக்கும் க்ஷேமம் புரிபவன்.

ஸ ச ஸர்வகுணோபேத: கௌஸல்யாநந்தவர்தந: .ஸமுத்ர இவ காம்பீர்யே தைர்யேண ஹிமவாநிவ ৷৷1.1.17৷৷

”கௌசல்யை எனும் தாய்க்கு ஆனந்தமளிப்பவன். சமுத்ரத்தைப் போல கம்பீரமானவன். தைரியத்தில் மன உறுதியில் ஹிமாசலத்தைப் போல அசைக்க முடியாதவன்.

விஷ்ணுநா ஸதரிஷோ வீர்யே ஸோமவத்ப்ரியதர்ஷந: .காலாக்நிஸதரிஷ: க்ரோதே க்ஷமயா பரிதிவீஸம: ৷৷1.1.18৷৷
தநதேந ஸமஸ்த்யாகே ஸத்யே தர்ம இவாபர: .

”வீரத்தில் விஷ்ணு. மோகன வடிவில் சந்திரன் போன்றவன். இன்றெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க அலுக்காத ராம் லல்லா . கோபமே வராது. வந்தால் அவ்வளவு தான். காலாக்னி. ஊழித்தீ அவன் தான். பொறுமைக்கு பூஷணம். பூமாதேவி அவன் தான். தர்மத்தில் நீதி தேவன். தியாகத்தில் அவனுக்கு அவனே நிகர். செல்வத்தில் அவன் குபேரன். நேரம் தவ்ராத்தில், PUNCTUALITY யில் அவன் சூர்யன்.

தமேவஂ குணஸம்பந்நஂ ராமஂ ஸத்யபராக்ரமம் ৷৷1.1.19৷৷
ஜ்யேஷ்டஂ ஷ்ரேஷ்டகுணைர்யுக்தஂ ப்ரியஂ தஷரதஸ்ஸுதம் . 1-1-19-
ப்ரகரிதீநாஂ ஹிதைர்யுக்தஂ ப்ரகரிதிப்ரியகாம்யயா ৷৷1.1.20৷৷
யௌவராஜ்யேந ஸஂயோக்துமைச்சத்ப்ரீத்யா மஹீபதி: . 1-1-20-

அப்பா தசரதனுக்கு தெரியும் இப்படிப்பட்ட சற்குணம் ராமன் தான் அயோத்திக்கு ராஜாவாக ஜனோபகாரியாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்தான். .

தஸ்யாபிஷேகஸம்பாராந்தரிஷ்ட்வா பார்யாத கைகயீ ৷৷1.1.21৷৷பூர்வஂ தத்தவரா தேவீ வரமேநமயாசத .
விவாஸநஂ ச ராமஸ்ய பரதஸ்யாபிஷேசநம் ৷৷1.1.22৷৷

அப்பா தசரதன் அம்மா சின்னம்மா கைகேயிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற ராமன் 14 வருஷம் கானகம் சந்தோஷமாக சென்றான். அப்பாவின் வாக்கை நிறைவேற்ற முடிந்ததில் பரம சந்தோஷம் அவனுக்கு. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. பித்ரு வாக்ய பரிபாலனம் அவனைப்போல் எவரும் நிறைவேற்றியதாக இன்றுவரை சரித்ரம் கிடையாது.
ராமன் ம்ருது பாஷிணி. தேன் சொட்ட பண்போடு அன்போடு பேசுபவன். அதிக வித்தை கற்றவனுக்கு அடக்கம் தான் ஆபரணம். ”வித்யா விநய ஸம்பன்ன” என்று இதை சொல்வார்கள்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *