CHANAKYA NEETHI J K SIVAN

சாணக்ய நீதி – நங்கநல்லூர் J .K. SIVAN

3.9 कोकिलानां स्वरो रूपं स्त्रीणां रूपं पतिव्रतम् ।विद्या रूपं कुरूपाणां क्षमा रूपं तपस्विनाम् ॥ ०३-०९
kokilānāṃ svaro rūpaṃ strīṇāṃ rūpaṃ pativratam ।vidyā rūpaṃ kurūpāṇāṃ kṣamā rūpaṃ tapasvinām ॥ 03-09
கோகிலாநாம் ஸ்வரோ ரூபம் ஸ்த்ரீணாம் ரூபம் பதிவ்ரதம் । வித்³யா ரூபம் குரூபாணாம் க்ஷமா ரூபம் தபஸ்விநா

குலத்தளவே ஆகுமாம் குணம் என்று இப்போதெல்லாம் சொல்வதற்கில்லை. குலங்கள் எல்லாம் அநேகமாக ஒன்று சேர்ந்தபின் தனித்தோ பிரித்தோ அடையாளம் காண்பது அவசியமில்லாதது. குணம் சிலரிடம் நன்றாக் மனதை கவர்கிறது, சிலரை வெறுக்க வைக்கிறது. எல்லாமே தானாகவே வெளிப்படுவது தான். குயிலுக்கு விளம்பரம் எதற்கு? கருப்பாகி காக்கையைப் போல் இருந்தாலும் அதன் குரல் இனிமை அதை தனிப்படுத்துகிறதே. எந்த பெண் பதிவ்ரதையாகி கணவன் மெச்ச நடந்துகொள்கிறாள், ஏழையோ, குரூபியோ அவனிடம் சிறந்த கல்வி, ஞானம் இருந்தால் அவன் உயர்ந்தவனாக மதிக்கப்படுகிறான். எளிமை,மௌனம், சாந்தம், தியானம், கருணை கொண்டவன் ஞானி என வணங்கப்படுகிறான்.

3.10. त्यजेदेकं कुलस्यार्थे ग्रामस्यार्थे कुलं त्यजेत् ।ग्रामं जनपदस्यार्थे आत्मार्थे पृथिवीं त्यजेत् ॥
tyajedekaṃ kulasyārthe grāmasyārthe kulaṃ tyajet ।grāmaṃ janapadasyārthe ātmārthe pṛthivīṃ tyajet ॥ 03-10
த்யஜேதே³கம் குலஸ்யார்தே² க்³ராமஸ்யார்தே² குலம் த்யஜேத் । க்³ராமம் ஜநபத³ஸ்யார்தே² ஆத்மார்தே² ப்ரு’தி²வீம் த்யஜேத்

ஒரு குடும்பத்தில் ஒருவன் மோசமானவன்,புல்லுருவியாக இருத்தால் குடும்பத்தைக் காக்க அவனை ஒதுக்கி விலக்க வேண்டும். ஒரு கிராமத்தில் ஒரு குடும்பம் மோசமான உதாரணமாக இருந்தால் அந்த குடும்பத்தை ஒழிப்பதன்மூலம் க்ரமத்தைக் காக்கவேண்டும். ஒரு தேசத்திற்கு ஒரு பிரதேசம் விஷமாக இருந்தால் அந்த பிரதேசத்தை அழிப்பதால் நாட்டுக்கு நன்மை. இதெல்லாம் என் கருத்தலா. சாணக்கியர் எனும் கௌடில்யர் வாக்கு.

3.11 उद्योगे नास्ति दारिद्र्यं जपतो नास्ति पातकम् । मौनेन कलहो नास्ति नास्ति जागरिते भयम् ॥
udyoge nāsti dāridryaṃ japato nāsti pātakam ।maunena kalaho nāsti nāsti jāgarite bhayam ॥ 03-11
உத்³யோகே³ நாஸ்தி தா³ரித்³ர்யம் ஜபதோ நாஸ்தி பாதகம் । மௌநேந கலஹோ நாஸ்தி நாஸ்தி ஜாக³ரிதே ப⁴யம்

உழைப்பவனுக்கு ஏழ்மை என்றும் கிடையாது. ஜபம் , தியானத்தில் ஈடுபடுபவனை பாபம் அணுகாது. மெளனமாக இருப்பவனால் எவருக்கும் தீங்கில்லை. அவனால் சண்டை வராதே. உஷாராக இருப்பவனுக்கு பயம் கிடையாது.

3.12 अतिरूपेण वा सीता अतिगर्वेण रावणः ।अतिदानाद्बलिर्बद्धो ह्यतिसर्वत्र वर्जयेत् ॥
atirūpeṇa vā sītā atigarveṇa rāvaṇaḥ ।atidānādbalirbaddho hyatisarvatra varjayet ॥ 03-12

அதிரூபேண வா ஸீதா அதிக³ர்வேண ராவண: । அதிதா³நாத்³ப³லிர்ப³த்³தோ⁴ ஹ்யதிஸர்வத்ர வர்ஜயேத்

அழகு ஆபத்தை அருகில் வரவழைக்கும். சீதா தேவியின் அழகு தான் அவளை ராமனிடமிருந்து பிரித்தது சிறைவாசம் செய்ய வைத்தது. ராம ராவண யுத்தத்தில் எண்ணற்ற உயிர்கள் பலியாகின. அளவுக்கு மீறினால் அம்ருதமும் விஷம். மஹாபலி தானம் கொடுத்து பெயர் சம்பாதிக்க, குரு தடுத்தும், மூன்றடி மண் தானம் அளித்து நரகத்தில் அமிழ்ந்து கிடக்கிறான்.

3.13 को हि भारः समर्थानां किं दूरं व्यवसायिनाम् ।को विदेशः सुविद्यानां कः परः प्रियवादिनाम् ॥
ko hi bhāraḥ samarthānāṃ kiṃ dūraṃ vyavasāyinām ।ko videśaḥ suvidyānāṃ kaḥ paraḥ priyavādinām ॥ 03-13
கோ ஹி பா⁴ர: ஸமர்தா²நாம் கிம் தூ³ரம் வ்யவஸாயிநாம் । கோ விதே³ஶ: ஸுவித்³யாநாம் க: பர: ப்ரியவாதி³நாம்

பலசாலிக்கு எது கனம்? சுறுசுறுப்பாக முயற்சியோடு நடப்பவனுக்கு எது தூரம்? மிக நன்றாக் கல்வி கேள்வி ஞானம் உள்ளவனுக்கு எது அயலூர்? யாதும் ஊரே யாவரும் கேளிர் தானே. அமைதியாக மிருதுவாக இனிய அன்போடு பண்போடு பேசுபவனுக்கு யார் எதிரி?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *