SURDAS – J K SIVAN

ஸூர்தாஸ்    –    நங்கநல்லூர்   J K  SIVAN
யாரடி  நீ மோஹினி….

அடே  கிருஷ்ணா, உனக்கும்  எட்டுக்கும்  எவ்வளவு  நெருங்கிய  சம்பந்தம் என்று யோசித்து பார்த்தேன். ரொம்ப ஆச்சர்யம் டா கண்ணா.
நீ பிறந்தது  எட்டாவது நாள். அஷ்டமி. நீ கிருஷ்ணனாக  எடுத்தது எட்டாவது அவதாரம்.தேவகிக்கும்  வாசுதேவருக்கும் நீ  எட்டாவது குழந்தை.கம்சன் தேவகி வசுதேவரை  அடைத்து வைத்த சிறை க்கும் எட்டு கதவுகள் என்று அறிந்தேன்.அதெல்லாம் விடு.நீ மணந்ததும் எட்டு பேரை. எட்டு பட்டத்து ராணிகள். நரகாசுரனிடமிருந்து நீ காப்பாற்றி மீட்ட இளவரசிகள் 16100 பேர்களாமே.அட  எண்ணைக்  கூட்டினால் அதுவும்  எட்டு தான்.  1+6+1+0+0
நீ வாழ்ந்ததும் 125 வருஷங்கள். இந்த நம்பரைக் கூட்டினாலும் 8. 1+2+5எவருக்கும் எட்டாத  உயர்ந்த கருத்துக்களை கீதை என்று சொன்னாயே அது தான் கிட்டு ரொம்ப  விசேஷம். 

துவாரகையில்  ருக்மணிக்கு  ரொம்ப நாளாக  ஒரு  ஆசை. ஆர்வம். ஆவல். எதுவேண்டுமானாலும் இருக்கட்டுமே. அது என்ன?அரண்மனை நந்தவனத்தில்  ஒரு சாயங்காலம் கிருஷ்ணனோடு சந்தோஷமாக  பேசிக்கொண்டிருக்கும்போது  மனதில் இருந்ததை வெளிப்படுத்தினாள் .

”கிருஷ்ணா எனக்கு ரொம்ப நாளா  ஒரு ஆசை”

”சொல்லு ருக்கு”’

‘எல்லோரும் சொல்கிறார்கள், நீயும் எப்போதாவது அவள் பேரை சொல்லிக்கொண்டே  இருக்கிறாய்.  யார்  அந்த ராதா?”

”ஓ அவளா..  கிருஷ்ணன் முகத்தில்  சந்தோஷம். ஒளி வீசியது. அவள் வ்ருஷபானு எனும் சிற்றரசன் மகள். வ்ரஜபூமியில்வசிப்பவள்.அற்புதமானவள்”’

‘கிருஷ்ணா, எனக்கு அவளைப்  பார்க்கவேண்டும் ”ஆஹா அவள் ரொம்ப ரொம்ப கெட்டிக்காரி. என்னோடு  பால்ய வயதில் விளையாடி யவள் ” ”கேள்விப்பட்டேன். எல்லோரையும் மயக்கிய உன்னையே மயக்கியவள்”

”அவள்  முகத்தைக் காட்டிலும் அவள் மனது, இதயம் அழகானது. அது தான் என்னை வசியப்படுத்தி யது.”

”கிருஷ்ணா, அதனால் தான் அவளை உன்னால் மறக்க முடியவில்லையா?

”பிரிந்தாவனத்திலேயே அவள் ஒருவள் தான் ஈடிணையற்றவள்.  ‘

‘ஓஹோ’

”’மற்றவரிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவள். அன்பினால்  உலகையே காந்த சக்திபோல்  கட்டிப்போடுபவள்’

”உனக்கு  பிடித்த  நீல புடவைக்காரியா?”

”அன்பு பார்வையால், என் மனதை கட்டிப் போட்ட வள்”’

‘உன் இதயத்தை திருடியவள் இல்லையா?’ ”’ம்ம்ம்ம்”’

‘கிருஷ்ணா, இதென்ன ஆச்சர்யம், அவளை பற்றி நீ நினைத்ததுமே உன் முகத்தில் மாறுதலைப்  பார்’

ருக்மணி கண்ணாடியை  கண்ணனுக்கு காட்டி னாள்.கண்ணன் கன்னங்களில் ராதை இட்ட  சந்தன பூச்சு.  அவள் கண் மை  உன் நெற்றியில்.  கன்னங்களில்..”

கிருஷ்ணன் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த் தான். கன்ணாடியில் தொடர்ந்து பார்க்கமுடியாமல் கண்ணை நீர்த்துளிகள் மறைத்தன .

ஸூர் தாஸ் எழுதிய  ஒரு  பாடலுடன் என் மனதில் இருந்து வெளிப்பாடே ஒரு சில  வார்த்தைகளும் ….

Rukmini asks, O Shyam, my husband,
who is the daughter of Brishbhanu amongst these women of Braj?
Show her to me the love of your childhood.
That clever one who, in a very young age,
charmed the Charmer.  The rosary of her qualities,
you’re always counted not letting her go
from your heart.  You keep her memory and her beauty in your mind.
See her, she stands amongst the women of Brindavan
in blue clothes, the very fair one. my heart was stolen
by her arch glances.’  The looks at the face of her lover.
His lips are smudged black, Sandalpaste on cheeks
from some other woman.
She got up quickly, took the mirror in hand,
*Look at yourself, and clean your f ace*
Krishna hesitated.
He saw the kohl, the sandalpaste on his lips and cheeks.
The Sophisticated, Patient One looks at his face
not uttering a word.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *