SRIMAD BHAGAVATHAM 12TH CANTO. 3 14-20 J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம் – 12வது காண்டம் 3வது அத்யாயம்.- நங்கநல்லூர் J K SIVAN
பூமி கீதை ஸ்லோகங்கள் 12.3. 14முதல் 20 வரை –

14. कथा इमास्ते कथिता महीयसां विताय लोकेषु यश: परेयुषाम् । विज्ञानवैराग्यविवक्षया विभो वचोविभूतीर्न तु पारमार्थ्यम् ॥ १४ ॥
kathā imās te kathitā mahīyasāṁ vitāya lokeṣu yaśaḥ pareyuṣām vijñāna-vairāgya-vivakṣayā vibho vaco-vibhūtīr na tu pāramārthyam

பரீக்ஷித் மஹாராஜா, இந்த தேசத்தை ஆண்ட மாமன்னர்களைப் பற்றி எல்லாம் உனக்கு எடுத்துச் சொன்னேன். முடி சார்ந்த அவர்கள் எல்லோரும் கடைசியில் பிடி சாம்பலாகவே போய்விட்டார்கள். நான் உனக்கு போதிக்க விரும்பியது எப்படி இந்த மாறும் அழியும் லோகத்தில் அழியாத வஸ்துவான த்யானம் தியானம் பற்றித்தான். அதை விவரிக்கும்போது அதை பின்பற்றிய ராஜாக்கள் அதை அவமதித்தவர்கள் கடைசியில் என்ன பலன் பெற்றார்கள் என்று உணர்த்தவே. ஞானம் எவ்வளவு முக்கியம் என்று சொல்ல.

15. यस्तूत्तम:श्लोकगुणानुवाद: सङ्गीयतेऽभीक्ष्णममङ्गलघ्न: । तमेव नित्यं श‍ृणुयादभीक्ष्णं कृष्णेऽमलां भक्तिमभीप्समान: ॥ १५ ॥
yas tūttamaḥ-śloka-guṇānuvādaḥ saṅgīyate ’bhīkṣṇam amaṅgala-ghnaḥ tam eva nityaṁ śṛṇuyād abhīkṣṇaṁ kṛṣṇe ’malāṁ bhaktim abhīpsamānaḥ

பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் மீது பற்று கொண்டவன் பகவானின் கருணை, தர்ம பரிபாலனம் , துஷ்ட நிக்ரஹம், சிஷ்ட பரிபாலனம் பற்றிய விஷயங்களை அறிவதில் ஆர்வத்தோடு ஈடுபடுத்திக் கொள்பவன். அவனை தீங்கு, தீமை, கெடுதல் எதுவும் நெருங்காது.

16. श्रीराजोवाच केनोपायेन भगवन् कलेर्दोषान् कलौ जना: ।विधमिष्यन्त्युपचितांस्तन्मे ब्रूहि यथा मुने ॥ १६ ॥
śrī-rājovāca kenopāyena bhagavan kaler doṣān kalau janāḥ vidhamiṣyanty upacitāṁs tan me brūhi yathā mune

குருநாதா எப்படி இந்த கலியுகத்தில் வாழ்பவர்கள் பாபங்களை போக்கிக் கொள்ள வழி தேடுவது என்று சொல்லுங்கள்?

17.युगानि युगधर्मांश्च मानं प्रलयकल्पयो: । कालस्येश्वररूपस्य गतिं विष्णोर्महात्मन: ॥ १७ ॥
yugāni yuga-dharmāṁś ca mānaṁ pralaya-kalpayoḥ kālasyeśvara-rūpasya gatiṁ viṣṇor mahātmanaḥ

சுகப்பிரம்ம ரிஷியே, இந்த பிரபஞ்சத்தில் பல யுக சரித்திரங்கள் உள்ளனவே. அவற்றின் விவரங்களை முழுதும் அறிய முடியாதல்லவா? திரிகால ஞானிகள் உங்களை போன்றவர்களே அவற்றை அறிந்தவர்கள். அறிபவர்கள்.

18. श्रीशुक उवाच: कृते प्रवर्तते धर्मश्चतुष्पात्तज्जनैर्धृत: । सत्यं दया तपो दानमिति पादा विभोर्नृप ॥ १८ ॥
śrī-śuka uvāca kṛte pravartate dharmaś catuṣ-pāt taj-janair dhṛtaḥ satyaṁ dayā tapo dānam iti pādā vibhor nṛpa

பரீக்ஷித், புரியும்படியாக உதாரணத்தோடு சொல்லவேண்டுமானால், சத்ய யுகம் தோன்றும் போது சனாதன தர்மம் நான்கு கால்களாலும் ஊன்றி நின்றது எனலாம். தர்மத்தை ரக்ஷித்தவர்கள் அதை போற்றி வளர்த்தனர், அதனால் பயனடைந்தனர். நான் சொன்ன நாலு கால்கள் சத்யம், கருணை, எளிமை, தானம்.

19. सन्तुष्टा: करुणा मैत्रा: शान्ता दान्तास्तितिक्षव: । आत्मारामा: समद‍ृश: प्रायश: श्रमणा जना: ॥ १९ ॥
santuṣṭāḥ karuṇā maitrāḥ śāntā dāntās titikṣavaḥ ātmārāmāḥ sama-dṛśaḥ prāyaśaḥ śramaṇā janāḥ

பரீக்ஷித்,உனக்குத் தெரியுமா, சத்ய யுகத்தில் மக்கள் சந்தோஷமாக திருப்தியோடு இருந்தார்கள். கருணை இரக்க குணம் மிக்கவர்கள், எல்லோருடனும் நட்பாக பழகினார்கள், அமைதியானவர்கள், பொறுமை மிக்கவர்கள். மனதில் அன்பு நிறைந்தவர்கள். எல்லோரையும் சமமாக பாவித்தவர்கள் ,தெய்வீக மக்கள். நேர்மையோடு வாழ்ந்தார்கள்.

20, त्रेतायां धर्मपादानां तुर्यांशो हीयते शनै: । अधर्मपादैरनृतहिंसासन्तोषविग्रहै: ॥ २० ॥
tretāyāṁ dharma-pādānāṁ turyāṁśo hīyate śanaiḥ adharma-pādair anṛta- hiṁṣāsantoṣa-vigrahaiḥ

அடுத்து வந்த த்ரேதா யுகத்தில், அதாவது ராமர் வாழ்ந்த யுகத்தில், மக்கள் எவ்வாறு இருந்தார்கள் என்று சொல்லட்டுமா?
தர்மத்தின் நாலு கால்களில் ஒன்று குறைந்து மூன்றுகால்களில் நின்றது. அந்த அளவுக்கு நேர்மை, நீதி, நியாயம் குறைந்து அக்கிரமம் கொஞ்சம் வளர ஆரம்பித்து விட்டது. சண்டை சச்சரவு மக்களிடையே சேர்ந்து விட்டதே.

தொடரும்

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *