KUNTHI’S PRAYER – J K SIVAN

குந்தி தேவி – நங்கநல்லூர் J K SIVAN

23. कुन्त्युवाच नमस्ये पुरुषं त्वाद्यमीश्वरं प्रकृते: परम् । अलक्ष्यं सर्वभूतानामन्तर्बहिरवस्थितम् ॥ १८ ॥

kunty uvāca namasye puruṣaṁ tvādyam īśvaraṁ prakṛteḥ param alakṣyaṁ sarva-bhūtānām antar bahir avasthitam

கிருஷ்ணா, நீ சின்னவன் என் சகோதரன் மகன் என்று நான் நினைக்கவே இல்லை. நீ பெரியவன். எல்லாவற்றிலும், எல்லோரையும் விட நீ எனக்கு பெரியவன். முதன்மையானவன்.உனக்கு சந்தோஷமாக பக்தியோடு நமஸ்காரங்கள் அப்பா, நீ தான் அசல், ஆதிகாரணன் உலகத்தில் மற்றவர்கள் போல் உதவினாலும் நீ உலகியே வெல்லக்கூடியவன். உன்னை எந்த ஈர்ப்பும் நெருங்காது. என்னைப் பொறுத்தவரை நீ எங்கும் வ்யாபித்திருப் பவன். உள்ளும் புறமும் நிறைந்த பரமாத்மா. நீ மற்றவர்கள் கண்ணுக்கு அறியாதவன் புரியாதவன். எனக்கு அப்படியில்லை.எனக்கு எல்லாமே நீ நீ நீ நீயே தான் கிருஷ்ணா.இது என் அனுபவமடா.

24. विषान्महाग्ने: पुरुषाददर्शनादसत्सभाया वनवासकृच्छ्रत: । मृधे मृधे sनेकमहारथास्त्रतो द्रौण्यस्त्रतश्चास्म हरे sभिसक्षिता: ॥७॥8.24

viṣān mahāgneḥ puruṣāda-darśanād asat-sabhāyā vana-vāsa-kṛcchrataḥ mṛdhe mṛdhe ’neka-mahārathāstrato drauṇy-astrataś cāsma hare ’bhirakṣitāḥ

”கிருஷ்ணா, அப்பப்பா, இப்போது நினைத்துப் பார்த்தால் கூட என் உடல் நடுங்குகிறதே. ஒன்றா இரண்டா எங்களுக்கு வந்த சோதனைகள். சிறு வயதிலேயே என் பிள்ளைகளுக்கு விஷ உணவை கொடுத்தான் துரியோதனன். அரக்கு மாளிகையில் கூண்டோடு எங்களை தீயில் எரிக்க திட்டமிட்டான். எண்ணற்ற அசுரர்களை எங்கள் வாழ்வில் சந்தித்தோம். காட்டில் உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி அலைந்தோம், ஒருநாளா இரு நாளா, பன்னிரண்டு வருஷங்கள், படைகளை வேறு ஏவி எங்களை அழிக்க ப்ரயத்தனம் செய்தான். மஹாரதர்கள் எதிர்த்தார்கள். கடும் ஆயுதங்கள் அஸ்திரங்கள் என் குழந்தைகளை அழிக்க வந்தன. துரோணன் மகன் அஸ்வத்தாமன் எங்கள் வம்சத்தை நாசமாக்கினான். அவனது கொடிய பிரம்மாஸ்திரத்திலிருந்து உத்தரை வயிற்றில் பாண்டவ வம்சம் வளர பரீக்ஷித் உயிரை நீ தானேயப்பா காப்பாற்றினாய். எந்த துன்பம் வந்தபோதிலும் அவற்றிலிருந்தெல்லாம் அவ்வப்போது தக்க தருணத்தில் வந்து எங்களை காப்பாற்றினவன் நீதானே கிருஷ்ணா. தீன ரக்ஷகா. திக்கற்றோர்க்கு தெய்வமே துணை என்பதின் அர்த்தம் புரியவைத்தவனே கிருஷ்ணா.

25. विपद: सन्तु ता: शश्वत्तत्र तत्र जगद्गुरो । भवतो दर्शनं यत्स्यादपुनर्भवदर्शनम् ॥८॥ 8.25

vipadaḥ santu tāḥ śaśvat tatra tatra jagad-guro bhavato darśanaṁ yat syād apunar bhava-darśanam| 6 ||

எனக்கு துன்பம் தொடரட்டும், துயரம் நீடிக்கட்டும், உன்னை அப்போது இடைவிடாமல் நினைப்பேன் உன் அருள் பார்வை என்மீது படுமே என்ற நம்பிக்கையை .வளர்த்துக் கொள்வேன். அதுவே எனக்கு ஸ்வர்க்கம், மோக்ஷம், அழியாத செல்வம்.

என்னப்பா, கிருஷ்ணா,அவ்வளவு சீக்கிரம் மறந்து விடும்படியாகவா நீ எங்களுக்கு உதவியவன்! விஷத்தில் உணவை வைத்து என் குழந்தைகளை உண்ணவைத் தான் துரியோதனன். அவர்கள் இன்றும் உயிரோடு இருப்பதே உன்னால் தான்.

இருட்டில் ஒரு வீட்டில் அப்படியே தீ மூட்டி எங்களை கூண்டோடு கைலாசம் செல்ல துரியோதனன் திட்டம் போட்டான். அதுவும் ஏதோ ஒரு கெட்ட கனவு போல முடிந்தது உன்னால் தானே. எத்தனை ராக்ஷஸர்கள் — அப்பப்பா, அவர்கள் அத்தனை பேரையும் கொன்றுவிட முடிந்ததே உன்னால் தான். காட்டில் தான் எத்தனை வருஷங்கள் எத்தனை கஷ்டங்கள்.. எல்லாம் முடிந்து கொஞ்சமாவது வாழ்வோம் என்று நினைக்கும்போது ஒரு மஹா பாரத யுத்தம். உலகின் சிறந்த சக்திமான்கள் என் பிள்ளைகளை வெல்ல,கொல்ல முன்வந்தார்கள். எதிர்த்தார்கள். அவர்களை எல்லாம் என் பிழைகள் வென்று இன்று வாழ்வதே உன்னால் தானே கிருஷ்ணா..

கிருஷ்ணா, எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா? இது போல், மலை மலையாக நிறைய கஷ்டங்கள் தொடர்ந்து எனக்கும் என் மக்களுக்கும் மேலும் மேலும் வரவேண்டும். அப்போது தான் நீ எங்களோடு இருந்து எங்களை உய்விப்பாய். காப்பாற்றுவாய். கஷ்டங்க ளிலிருந்து தீரும் நிம்மதியை விட நீ எங்களோடு அருகில் இருக்கும் சுகம் இருக்கிறதே. அது அடாடா வார்த்தையில் விவரிக்கமுடியாத ஒரு இன்பம்.

சிறு குழந்தை பிரஹலாதன் படாத கஷ்டமா? அவனை எல்லாவித கஷ்டங்களிலும் இருந்து காப்பாற்றியவன் நரசிம்மராக வந்த நீ தானே. கஷ்டம் வர வர தான் பக்தன் உன்னை நினைக்கிறான். தேடுகிறான். நீயும் கருணை புரிய ஓடி வருபவன்.

இந்த உலகத்தில் ஏன் கஷ்டம் எங்களுக்கு என்றால் உலகமே கஷ்ட மயமானது. என்னதான் கஷ்டம் சூழ்ந்திருந்தாலும் ”கிருஷ்ணா” என்ற உன் பெயருக்கு தான் எவ்வளவு சக்தி அப்பா!! அத்தனை துன்பங்களும் சூரியன் முன் பனித்துளி தான். ஹரே கிருஷ்ணா என்ற வார்த்தையே பெரிய தபோபல சக்தி அல்லவா?

என் கஷ்டங்களை வரிசைப்படுத்தி சொன்னேனே. இனி அந்தமாதிரி துன்பங்கள், துயரங்கள் கஷ்டங்கள் என்னை அணுகக்கூடாது என்பதற்காகவா? இல்லவே இல்லவே, லோகநாயகா, லோக சம்ரக்ஷகா, என் அருமை கிருஷ்ணா, இதோ பார் உன்னிடம் என் பிரார்த்தனை விசேஷமானது. நான் எல்லோரையும் போல் இல்லை. எனக்கு இதைவிட இன்னும் அதிக துன்பங்கள் துயரங் கள் கஷ்டங்கள் மேன் மேலும் வரவேண்டும், தொடர வேண்டும். ஏன் தெரியுமா, அப்போது தான் என் மனம் எப்போதும் உன்னையே தேடும் உன்னை வேண்டும். நீயும் உடனே வருவாய். அப்படியாவது உன்னோடு இருக்க முடியும் இல்லையா கிருஷ்ணா? உன் முகம் தோன்றினவுடனேயே கதிரவனைக் கண்ட பனி போல் என் துன்பங்கள் என்னை விட்டு ஓடுமே.. உன் முகம் ஒன்றே எனக்கு சகல சந்தோஷங்க ளையும் வார்த்தை யில் வர்ணிக்க, விவரிக்கமுடியாத மகிழ்ச்சியை, ஆனந்தத்தை அளிக் குமே பரந்தாமா. அதற்கப்புறம் பிறப்பேது இறப்பேது?..

26 जन्मैश्वर्यश्रितश्रीभिरेधमानमद: पुमान् । नैवार्हत्यभिधातुं वै त्वामकिञ्चनगोचरम् ॥९॥ 8.26
Janmai aiswarya srutha sri bhiredhamana madha pumaan, Naivaar hathyabhidhaathum vai thwama kinchana gocharam.

ஒருவனிடம் அதிர்ஷ்டவசமாக, அவன் எதிர்பாராமல், அல்லது எதிர்பார்த்ததற்கு மேல், சேர்ந்துவிட்டால் ஆஹா, அடுத்த கணம் அவன் குணம் மாறிவிடும். அவன் கர்வம் தலைக் கேறி விடும். கடவுளா யார் அது?, என்னைவிடவா அவன் புத்திசாலி, சக்திமான்? என்ற அகம்பாவம் இவனுக்கு மட்டும் அல்ல இவனுக்கு முன்பே பல ராவணர்களுக்கு, கம்சர்களுக்கு, துரியோதனர் களுக்கும் இருந்தது தானே.

செல்வம் மட்டும் அல்ல, பக்தியற்ற கல்வி கூட ஒருவனை மண்டை பெருக்கச் செய்துவிடும். நாம் தான் பார்க்கிறோமே அன்றாடம் ஒவ்வொருவனும் பேசுவ தை. கிருஷ்ணா, உன் பேரைச் சொல்லும் பாக்யம் இழந்தவர்கள் அவர்கள். எதுவுமே தனதில்லை, தனக்கில்லை என்று உணர்ந்தவனிடம் தானே நீ இருப்பவன்.

27. ’नमोऽकिञ्चनवित्ताय निवृत्तगुणवृत्तये । आत्मारामाय शान्ताय कैवल्यपतये नम: ॥ २७ ॥
namo.kiñcana-vittāya nivṛtta-guṇa-vṛttaye ātmārāmāya śāntāya kaivalya-pataye namaḥ 8.27

”நமஸ்காரம் கிருஷ்ணா’. இதை ஒரு முறை, ரெண்டு முறை சொன்னால் போதாது. வாழ்நாள் பூரா, அடுத்து வரும் ஜென்மங்களில் எல்லாம் கூட நாங்கள் விடாமல் சொல்லவேண்டும். பரம தாரித்ரியத்தில் இருந்த எங்களை வாழவைத்த தெய்வமே. எங்கள் மீது அன்பு கொண்ட பக்த வத்சலா, பேரானந்த ஸ்வருபனே, சாந்த மூர்த்தி, ஆபத் பாந்தவா, உன்னை தாள் தொட்டு வணங்குகிறேன் அப்பா. ஏழை பங்காளா. இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டவனே, எதிலும் விருப்பு வெறுப்பற்றவனே, பரமானந்த மூர்த்தி உன்னை நமஸ்கரிக்கிறேன்.

தீனர்களுக்கு தானாகவே நேரே சென்று அருள் புரிந்து பாவம் தீர்த்து மோக்ஷம் தரும் தீன பந்து, உன்னை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். நீயே ஏழைகள் எங்களது பெரும் செல்வம்,

தொடரும்

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *