GITA CH .11. VISWAROOPA DHARSANA YOGA. J K SIVAN

கீதை – 11வது அத்யாயம் – நங்கநல்லூர் J K SIVAN
விஸ்வரூப தரிசன யோகம் ஸ்லோகம் 1-20

‘கிருஷ்ணா போதும் போதும். பயமாக இருக்கிறது”

இந்த மா பெரும் ஜகம் ஒரு துக்குணி என்று எண்ணி பாருங்கள். அப்படி என்றால் இந்த அண்ட பகிரண்டம் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்று கற்பனை செய்யுங்கள். அதற்கு அளவோ கணக்கோ இல்லை. இடமும் காலமும் ஒன்றாக கலந்த சேர்க்கை. நம்மால் அதைக் காண வழியில்லை என்பதாலே தன்னை குறுக்கிக் கண்டு பகவான் காட்சி தருகிறான். பெரிதாய் இருந்தாலும் சிறிதாய் இருந்தாலும் அவன் சக்தி ஒன்றே.

ஒரு சொம்பு பாலும் ஒரு ஸ்பூன் பாலும் ஒரே ருசிதான் தரும் . ஆனால் ஒரு சொம்பு பால் அளிக்கும் சக்தியை ஒரு ஸ்பூன் பால் அளிக்குமா? அமிர்தம் அது போல இல்லை. ஒரு கடல் அளவுக்குள்ளும் ஒரு துளிக்குள்ளும் அதே சக்தி, ”நிரந்தரம்” சாஸ்வதம், சாகாவரம் அம்ருத்வம் தர வல்லது.

பெரியது சிறியது இரண்டுமே ஒன்று என்று புரிந்து கொள்ள ஒரு உதாரணம் தருகிறேன்.
ஒரு பெரிய பேன்னர் 20 அடி நீளம் 15 அடி அகலம் – அதில் சிரித்துக்கொண்டு நமது பிரதமர். அதையே ஒரு சிறு ஸ்டாம்ப் அளவு புகைப்படமாக காட்டினாலும் அவர் தான், அதே சிரிப்பு தான். துளியும் வித்தியாசம் இல்லாத உருவம். அளவில் தான் வித்யாசம்.

எதையுமே பெரியதாக இருப்பதை காணும்போது ஒரு பிரமிப்பு, பயம், நடுக்கம் உண்டாகிறது. சூரியனையும் சந்திரனையும், நக்ஷத்ரங்களையும் மேலே ஆகாயத்தில் சிறிதாக ஒளிர்பவையாக கண்டால் சந்தோஷம். அருகே சென்றால் அதன் வேகம், சுழற்சியின் சப்தம், உஷ்ணம், தாங்க முடியுமா? இதைதான் கிருஷ்ணன் அர்ஜுனனிடம் விளக்குகிறான். என்னை உன்னால் காண முடியாது என்று.

ஆண்டவன் வெவ்வேறு பொருளில், வெவ்வேறு உருவில் எங்கும் காணப்படுவதை அறிந்து கொள்ளவேண்டும். விராட் உருவாக எல்லாவற்றையும் அவனிலே காண நம்மால் முடியாது.

அதே போல் எல்லா நினைவுகளையும் நாம் பெறாமல் ரகசியமாக வைத்திருக்கிறான் கண்ணன். ஏன் நமக்கு சிறு வயது நினைவுகள் கூட சரியாக தோன்றவில்லையே. முற்பிறவிகள் அடையாளம் தெரிந்தாலோ, அடுத்து வரும் காலங்களைப் பற்றிய நிகழ்வுகள் நமக்கு தெரிந்தாலோ ஒரு கணமும் நம்மால் நிம்மதியாக இருக்கவே முடியாது. நிகழ் காலம் அதை பற்றி அறியும் முன்பே இறந்த காலமாக மாறுகிறதே. மரணம் பற்றிய உண்மைகளை அதனால் தான் ரகசியமாகவே வைத்திருக்கிறான். தெரிந்தால் நாம் ஒவ்வொரு கணமும் மரண பயத்தில் சித்ர வதை பட்டு துன்புறுவோம்.

அர்ஜுனன் கிருஷ்ணனை விஸ்வமாக கண்டான். சகலமும் அங்கே காணப் பட்டது. . எத்தனையோ சந்திரர்கள், சூரியர்கள், மலைகள், கடல்கள், ஆறுகள், ஏரிகள், வனங்கள், வனாந்திரங்கள்,மக்கள், மாக்கள், ரிஷிகள், தேவாதி தேவர்கள், எத்தனையோ மண்டலங்கள், ஏன் பீஷ்மன், துரோணர், கர்ணன் இவர்களைத் தவிர தன்னையே, தன் சகோதரர்களையே கூட அங்கே கண்டான். .

”போதும் கிருஷ்ணா, போதும், என்னால் தாங்க குடியவில்லை.பயமாக இருக்கிறது.நடுங்குகிறது என இரு கை கூப்பினான், மண்ணும் விண்ணுமாய் ,இடைவெளி இன்றி எல்லாவற்றையும் எல்லோரையும் உன்னில் கண்டேன். போதும். உள்ளம் நடுங்குகிறது. நா உலர்கிறது. நிகரற்ற தெய்வமே, உன்னை நமஸ்கரிக்கிறேன். மீண்டும் எப்போதும் போல் கிரீடமும், கதையும், சக்ரமும் சதுர் புஜமும் கொண்ட நாராயணனாகவே காட்சி தரவேண்டும்” என்றவுடன் கிருஷ்ணன் அவ்வாறே அருள் புரிகிறான்.

கிருஷ்ணா என் அறியாமையினால் உன்னை வா போ என்று கூப்பிட்டு என்னை உனக்கு சமானமாக நினைத்து நடந்து கொண்டுவிட்டேனே. மன்னித்து விடு என்று அலறுகிறான் அர்ஜுனன். கிருஷ்ணன் சிரிக்கிறான்.

”அர்ஜுனா என்னை யாருமே இப்படி கண்டதில்லை. இதோ பார், எதற்கு இதையெல்லாம் உனக்கு உணர்த்தினேன் தெரியுமா. ”எதையும் பகவானுக்கே என்று உன் கர்மத்தை செய். அடையும் நன்மையையும் பகவானே என்ற பக்தியோடு எந்த உயிரையும் பழிக்காமல் அன்போடு இரு. நீ என்னை அடைவாய்” இந்த அத்தியாயத்தில் மொத்தம் 55 ஸ்லோகங்கள். முதல் 20 மட்டும் சுருக்கமாக இதில் தருகிறேன். முழுதும் எழுதினால் இந்தப்பதிவே விஸ்வரூபம் எடுத்துவிடுமல்லவா? இது போதும்

1. मदनुग्रहाय परमं गुह्यमध्यात्मसञ्ज्ञितम् | यत्त्वयोक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम || 1||
arjuna uvācha mad-anugrahāya paramaṁ guhyam adhyātma-sanjñitam
yat tvayoktaṁ vacha
அர்ஜுன உவாச 1 | மத3னுக்3ரஹாய பரமம் குஹ்யமத்4யாத்1மஸஞ்ஞித1ம் | யத்1த்1வயோக்1த1ம் வச1ஸ்தே1ன மோஹோ‌யம் விக3தோ1 மம || 1 ||

”கிருஷ்ணா, நீ இதுவரை, சொன்ன ஆத்ம தத்தவத்தை கேட்டதில் ஓரளவு என் மதி மயக்கம் தீர்ந்தது. பிறப்பு இறப்பு பற்றி அறிந்தேன். உன் செயலால் எதும் ஆகும் என புரிந்து கொண்டேன். நீ யாதும் ஆகி யாவும் ஆனவன் என்றாயே அந்த உருவத்தை எனக்கு காட்டேன். என்னால் அதை காண முடியுமா என்று தெரியவில்லை.”

2. भवाप्ययौ हि भूतानां श्रुतौ विस्तरशो मया | त्वत्त: कमलपत्राक्ष माहात्म्यमपि चाव्ययम् || 2||
bhavāpyayau hi bhūtānāṁ śhrutau vistaraśho mayā tvattaḥ kamala-patrākṣha māhātmyam api chāvyayam
ப4வாப்1யயௌ ஹி பூ4தா1னாம் ஶ்ருதௌ1 விஸ்த1ரஶோ மயா | த்1வத்1த1: க1மலப1த்1ராக்ஷ மஹாத்1ம்யமபி1 சா1வ்ய்யம்

தாமரைக்கண்ணா, உன்னிடமிருந்து உருவாகும் அனைத்து உயிர்களின் தோற்றம், மறைவு மற்றும் உனது மஹத்வம் எல்லாம் கேட்டுணர்ந்தேன்.

3.एवमेतद्यथात्थ त्वमात्मानं परमेश्वर | द्रष्टुमिच्छामि ते रूपमैश्वरं पुरुषोत्तम || 3||
evam etad yathāttha tvam ātmānaṁ parameśhvara draṣhṭum ichchhāmi te rūpam aiśhwaraṁ puruṣhottama
ஏவமேத1த்3யதா2த்1த2 த்1வமாத்1மானம் ப1ரமேஶ்வர | த்3ரஷ்டு1மிச்1சா2மி தே1 ரூப1மைஶ்வரம் பு1ருஷோத்1த1ம ||3||
4. मन्यसे यदि तच्छक्यं मया द्रष्टुमिति प्रभो |योगेश्वर ततो मे त्वं दर्शयात्मानमव्ययम् || 4||
manyase yadi tach chhakyaṁ mayā draṣhṭum iti prabho yogeśhvara tato me tvaṁ darśhayātmānam avyayam
ஓ, பரந்தாமா, எனக்கு உனது தெய்வீக ப்ரபஞ்ச விஸ்வ ரூப வடிவத்தைக் காட்டுவாயா, என்னால் பார்க்க முடியுமா?”.

5 श्रीभगवानुवाच पश्य मे पार्थ रूपाणि शतशोऽथ सहस्रश: । नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि च ॥ ५ ॥
ஶ்ரீப4க3வானுவாச1 | ப1ஶ்ய மே பா1ர்த2 ரூபா1ணி ஶத1ஶோத2 ஸஹஸ்ரஶ: | நானாவிதா4னி தி3வ்யானி நானாவர்ணாக்1ருதீ1னி ச1 ||5||
அர்ஜுனா, இப்பொழுது நீ என்னுடைய நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான அற்புதமான தெய்வீக வடிவங்களை வெவ்வேறு அளவுகளிலும் பல வண்ண வடிவங்களிலும் காண்பாயாக.

6. पश्यादित्यान्वसून्‍रुद्रानश्विनौ मरुतस्तथा । बहून्यदृष्टपूर्वाणि पश्याश्चर्याणि भारत ॥ ६ ॥
ப1ஶ்யாதி3த்1யான்வஸூன்ருத்3ரானஶ்வினௌ மருத1ஸ்த1தா2 | ப3ஹூன்யத்3ருஷ்ட1பூ1ர்வாணி ப1ஶ்யாஶ்ச1ர்யாணி பா4ரத1 ||6||
அதிதியின் (பன்னிரண்டு) மகன்கள், (எட்டு) வஸூக்கள் (பதினொரு) ருத்ரர்கள், (இரண்டு) அஸ்வினி குமாரர்கள் மற்றும் அதுபோல் (நாற்பத்தொன்பது) மருதுகள் மற்றும் இதுவரை வெளிப்படுத்தப்படாத மற்ற அதிசயங்களை இப்பொழுது என்னில் பார்.

7. इहैकस्थं जगत्कृत्स्नं पश्याद्य सचराचरम् । मम देहे गुडाकेश यच्च‍ान्यद्‍द्रष्टुमिच्छसि ॥ ७ ॥
இஹைக1ஸ்த2ம் ஜக3த்1க்1ருத்1ஸ்னம் ப1ஶ்யாத்3ய ஸச1ராச1ரம் | மம தே3ஹே கு3டா3கேஶ யச்1சா1ன்யத்3த்3ரஷ்டு1மிச்1ச2ஸி ||7
முழுப் ப்ரபஞ்சமும், அசையும் மற்றும் அசையாத அனைத்தும், என் ப்ரபஞ்ச வடிவில் ஒன்று கூடியிருக்கிறது. நீ வேறு எதைப் பார்க்க விரும்புகிறாயோ, அதையெல்லாம் இந்தப் ப்ரபஞ்ச வடிவில் கவனி.

8.न तु मां शक्यसे द्रष्टुमनेनैव स्वचक्षुषा । दिव्यं ददामि ते चक्षु: पश्य मे योगमैश्वरम् ॥ ८ ॥
ந து1 மாம் ஶக்1யஸே த்3ரஷ்டு1மனேனைவ ஸ்வச1க்ஷுஷா | தி3வ்யம் த3தா3மி தே1 ச1க்ஷு: ப1ஶ்ய மே யோக3மைஶ்வரம்
” அர்ஜுனா, உன் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன். உன் கண்களால் என்னை காணமுடியாது. உனக்கு திவ்ய நேத்திரம் தருகிறேன். அதன் மூலம் மட்டுமே நீ என்னை காண இயலும்.’

10 & 11 अनेकवक्‍त्रनयनमनेकाद्भ‍ुतदर्शनम् ।अनेकदिव्याभरणं दिव्यानेकोद्यतायुधम् ॥ १० ॥
दिव्यमाल्याम्बरधरं दिव्यगन्धानुलेपनम् । सर्वाश्चर्यमयं देवमनन्तं विश्वतोमुखम् ॥ ११ ॥
aneka-vaktra-nayanam anekādbhuta-darśanam aneka-divyābharaṇaṁ divyānekodyatāyudham
divya-mālyāmbara-dharaṁ divya-gandhānulepanam sarvāścarya-mayaṁ devam anantaṁ viśvato-mukham

ஆஹா இதென்ன திடீரென்று பூதாகாரமாக உருவங்கள். நான் எங்கிருக்கிறேன்? எண்ணற்ற கண்கள், எண்ணற்ற வாய்கள், என்னன்னவோ காட்சிகள், சொல்லவொண்ணா ஆபாரணங்கள், ஆடைகள், உடைகள், ஆயுதங்கள் தாங்கிய எண்ணற்றகரங்கள், வித விதமான மலை போல் மாலைகள், நறுமண கந்தம் மயக்க மூட்டுகிறதே. இது என்ன உடம்பா ?ஏதோ ஒரு அளவற்ற வளர்ந்து கொண்டே வரும் அங்கங்கள். ஒளி கண்ணை கூசுகிறதே.
நாம் சாதாரணமாக ஒரு கண்ணாடி போட்டுக்கொண்டே 3D படம் பார்த்து ஆஹா ஊஹூ என்று வியக்கிறோம். கண்ணன் ஒரு திவ்ய கண்ணையே அர்ஜூனனுக்கு அளித்து ”என்னைப் பார்” என்கிறான். அர்ஜுனன் திகைக்கிறான்.

12. दिवि सूर्यसहस्रस्य भवेद्युगपदुत्थिता । यदि भा: सदृशी सा स्याद्भ‍ासस्तस्य महात्मन: ॥ १२ ॥
தி3வி ஸூர்யஸஹஸ்ரஸ்ய ப4வேத்3யுக3ப1து3த்1தி2தா1 | யதி3 பா4: ஸத்3ருஶீ ஸா ஸ்யாத்3பா4ஸஸ்த1ஸ்ய மஹாத்1மன: ||
இந்த ஒளியைக் காணும் அர்ஜுனனுக்கு ஆயிரக்கணக்கான சூரியன்கள் ஒரே நேரத்தில் வானத்தில் உதித்தாலும், அவைகள் அனைத்தின் ஒளியும் இறைவனின் திவ்யமான ஜொலிக்கும் இந்த விஸ்வரூப வடிவத்திற்குச் சமமாகாது என புரிகிறது.

13. तत्रैकस्थं जगत्कृत्स्नं प्रविभक्तमनेकधा । अपश्यद्देवदेवस्य शरीरे पाण्डवस्तदा ॥ १३ ॥
த1த்1ரைக1ஸ்த2ம் ஜக3த்1க்1ருத்1ஸ்னம் ப்1ரவிப4க்1த1மனேக1தா4 |
அப1ஶ்யத்3தே3வதே3வஸ்ய ஶரீரே பா1ண்ட3வஸ்த1தா3 ||13||
”அடாடா இந்த கிருஷ்ணன் உலகத்தில் இல்லவே இல்லை. அவனுள் தான் இந்த உலகம் மட்டும் அல்ல பிரபஞ்சமே நிலைத்திருக்கிறது !

14. तत: स विस्मयाविष्टो हृष्टरोमा धनञ्जय: । प्रणम्य शिरसा देवं कृताञ्जलिरभाषत ॥ १४ ॥
த1த1: ஸ விஸ்மயாவிஷ்டோ1 ஹ்ருஷ்ட1ரோமா த4னஞ்ஜய: | ப்1ரணம்ய ஶிரஸா தே3வம் க்1ருதா1ஞ்ஜலிரபா4ஷத1 ||14||
‘கிருஷ்ணா என்று தலை குனிந்து, மண்டியிட்டு அமர்ந்து, கூப்பிய கரங்களுடன் விழைகிறான் அர்ஜுனன்.
அர்ஜுன உவாச 1 |

15. अर्जुन उवाच पश्यामि देवांस्तव देव देहे सर्वांस्तथा भूतविशेषसङ्घान् । ब्रह्माणमीशं कमलासनस्थ- मृषींश्च सर्वानुरगांश्च दिव्यान् ॥ १५ ॥ப1ஶ்யாமி தே3வாந்ஸ்த1வ தே3வ தே3ஹே ஸர்வாந்ஸ்த1தா2 பூ4த1விஶேஷஸங்கா4ன் | ப்3ரஹ்மாணமீஶம் க1மலாஸ னஸ்த2ம்ருஷீந்ஶ்ச1 ஸர்வானுரகா3ந்ஶ்ச1 தி3வ்யான் ||15||
ஸ்ரீ கிருஷ்ணா, நான் எப்படி சொல்வேன் உன்னிடம். உன் உடலில், உடலா அது? கடலா? . அதில் இல்லாத தெய்வங்கள் இல்லை. எண்ணற்ற ஜீவராசிகளையும் பார்க்கிறேன். தாமரை மலரில் ப்ரஹ்மாவும்,கைலாயத்தில் சிவனையும், தேவலோகத்தில் அனைத்து தேவர்கள், முனிவர்கள் நாகலோகத்தில் பல்வேறு நாகங்களையும் பார்க்கிறேன்.

16.अनेकबाहूदरवक्‍त्रनेत्रं पश्यामि त्वां सर्वतोऽनन्तरूपम् । नान्तं न मध्यं न पुनस्तवादिं पश्यामि विश्वेश्वर विश्वरूप ॥ १६ ॥அநேக1பா3ஹூத3ரவக்1த்1ரனேத்1ரம் ப1ஶ்யாமி த்1வாம் ஸர்வதோ1‌னன்த1ரூப1ம் | நான்த1ம் ந மத்4யம் ந பு1னஸ்த1வாதி3ம் ப1ஶ்யாமி விஶ்வேஶ்வர விஶ்வரூப1 ||16||
”கிருஷ்ணா, ஐயோ, என்ன சொல்வேன். எப்படி சொல்வேன்? எண்ணற்ற கைகள், வயிறுகள், முகங்கள், கண்கள் கொண்ட உங்கள் எல்லையற்ற வடிவத்தை ஒவ்வொரு திசையிலும் காண்கிறேன். ப்ரபஞ்சத்தையே வடிவமாகக் கொண்ட ஒப்புயர்வற்ற ப்ரபஞ்சத்தின் கடவுளே, நான் உங்களில் எந்த ஆரம்பத்தையும், நடுவையும், முடிவையும் காணவில்லை

17. किरीटिनं गदिनं चक्रिणं च तेजोराशिं सर्वतो दीप्‍तिमन्तम् । पश्यामि त्वां दुर्निरीक्ष्यं समन्ता-द्दीप्‍तानलार्कद्युतिमप्रमेयम् ॥ १७ ॥
கி1ரீடி1னம் க3தி3னம் ச1க்1ரிணம் ச1 தே1ஜோராஶிம் ஸர்வதோ1 தீ3ப்தி1மன்த1ம் | ப1ஶ்யாமி த்1வாம் து3ர்னிரீக்ஷ்யம் ஸமன்தா1த்3 தீ3ப்1தா1னலார்க1த்3யுதி1மப்1ரமேயம் ||
‘ அடேயப்பா, எவ்வளவு பெரிய கிரீடம். மலைபோன்ற சங்கு, கதாயுதம் விண்ணையே சக்கரம் போல் ஆக்கிய ஆயுதங்களை ஏந்தி, பல்லாயிரம் சூரிய பிரகாசத்துடன் எங்கு நோக்கினும் எல்லாத் திசைகளிலும் வியாபித்துள்ள உருவமாக இருக்கிறாயே கிருஷ்ணா. உன்னை முழுதுமாக பார்ப்பது என்றைக்கு?

18. त्वमक्षरं परमं वेदितव्यं त्वमस्य विश्वस्य परं निधानम् । त्वमव्यय: शाश्वतधर्मगोप्‍ता सनातनस्त्वं पुरुषो मतो मे ॥ १८ ॥
த்1வமக்ஷரம் ப1ரமம் வேதி3த1வ்யம் த்1வமஸ்ய விஶ்வஸ்ய ப1ரம் நிதா4னம் | த்1வமவ்யய:ஶாஶ்வத1த4ர்மகோ3ப்1தா1 ஸனாத1னஸ்த்1வம் பு1ருஷோ மதோ1 மே ||18||
”ஹா. கிருஷ்ணா, நீ எவ்வளவு விசாலமான, உன்னதமானவன். நீ தான் வேதத்தால் அறியப்படும் இறுதி உண்மை. எல்லா படைப்புகளுக்கும் காரணம்,துணை நீயே. ஸனாதன தர்மத்தின் (நித்திய தர்மம்) நித்திய பாதுகாவலன் நீ என்று காட்டிவிட்டாய். உனது தெய்வீக ஆளுமை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

19. अनादिमध्यान्तमनन्तवीर्य- मनन्तबाहुं शशिसूर्यनेत्रम् । पश्यामि त्वां दीप्‍तहुताशवक्‍त्रं स्वतेजसा विश्वमिदं तपन्तम् ॥ १९ ॥
அனாதி3மத்4யான்த1மனன்த1வீர்ய மனன்த1பா3ஹும் ஶஶிஸூர்யனேத்1ரம் | ப1ஶ்யாமி த்1வாம் தீ3ப்த1ஹுதா1ஶவக்1த்1ரம் ஸ்வதே1ஜஸா விஶ்வமித3ம் த1ப1ந்த1ம் ||19||
”கண்ணா, நீயா இது, எது ஆரம்பம், நடு அல்லது முடிவு என்றே தெரியவில்லையே. பரமாத்மா உன் சக்திக்கு எல்லை ஏது ?மஹா பலம் பொருந்திய கரங்கள் எல்லையற்று பரந்து காண்கிறதே. சூரியனும் சந்திரனும் உன் கண்களா? அக்னி எரிமலைகள் உன் வாயா?உனது ஒளியின் உஷ்ணம் எங்கும் எதற்கும் சென்று சேர்கிறதே.

20. द्यावापृथिव्योरिदमन्तरं हि व्याप्‍तं त्वयैकेन दिशश्च सर्वा: । दृष्ट्वाद्‍भुतं रूपमुग्रं तवेदं लोकत्रयं प्रव्यथितं महात्मन् ॥ २० ॥த்3யாவாப்1ருதி2வ்யோரித3மன்த1ரம் ஹி வ்யாப்1த1ம் த்1வயைகே1ன தி3ஶஶ்ச1 ஸர்வா: | த்3ருஷ்ட்1வாத்3பு4த1ம் ரூப1முக்3ரம் த1வேத3ம் லோகத்1ரயம் ப்1ரவ்யதி2த1ம் மஹாத்1மன் ||20||
”உன்னைத்தவிர இந்த அண்டத்தில் எதுவுமில்லை. வானத்துக்கும் பூமிக்குமாக சகல திசைகளுக்கும் இடைப்பட்ட இடத்தையெல்லாம் நீ வியாபித்திருக்கிறாயே. உன்னிலே தான் சகலமும் தெரிகிறது. இந்த அதிசய, அற்புத. வடிவம் அச்சத்தை ஊட்டுகிறது. மூவுலகுக்கே பயத்தில் நடுங்குகிறதே .கிருஷ்ணா நீ ஒரு மஹா புருஷன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *