VEMANA SATHAKAM – J K SIVAN

தேனான வேமனா – நங்கநல்லூர் J K SIVAN

பாரத தேசத்தில் பல பாகங்களில் பல விதமான மொழிகள் பேசப்படுகிறது. அது அத்தனையும் தெரிந்திருக்க ஞாயமில்லை. அதனால் ஒரு நஷ்டமுமில்லாத படி ஒரு பொது மொழியாக ஆங்கிலம் பல நூற்றாண்டுகளாக இயங்கி வருகிறதே. அதன் மூலம் மற்ற மொழி செல்வங்களை நாம் ஓரளவு அனுபவிக்கிறோம். அப்படித்தான் ஸூர்தாஸ், தாகூர்,புரந்தரதாசர் வேமனா, போன்ற பிறமொழி மகான்களை நாம் அனுபவிக்கிறோம்.

வேமனாவைப்பற்றி ஒரு வார்த்தை. அவர் சிவ பக்தர். பொய்மை வேஷம் கொண்ட பக்தர்களையோ சந்நியாசிகளையோ சாடுவதில் அவருக்கு நிகர் அவரே. ரெண்டே வரிகளில் பளிச்சென்று சொல்லிவிடுபவர். ஒவ்வொரு நீதியையும் சொல்லிவிட்டு கடைசி வரியில் தனக்குத் தானே “என்னடா வேமா சொல்கிறாய், சரிதானே?” என்பது போல் அவர் பாடல்கள் அமைந்துள்ளது

nIvu nilici yunDu nikhilambu niluvadu nilici yunDu enDu nIru valenu
nIvu niScayambu nikhilambu mAyayau viSvadAbhi rAma vinura vEma.

இந்த உலகமே பரமனின் அசைவில், இயக்கத்தில் தான் இயங்குகிறது, ஜீவிக்கிறது. அசைவு நின்றால்…….? ”நான் அசைந்தால் அசையும் இந்த அகிலமெல்லாமே அறிவாய் மனிதா” பாட்டு சிவாஜி கணேசன் கண்ணை உருட்டி விழித்து, அதை இரு ஓரங்களுக்கும் அசைத்து சிரிப்பாரே அது ….. அசைவு நின்றால் பிரபஞ்சம் ஸ்தம்பிக்கும். அதனால் தான் இறைவன் நடராஜன். ஆடிய பாதன், ஆடல் வல்லான். நீ ஒருவன் தான் அசைவில்லாத ஸாஸ்வதன். மற்றெல்லாம் அசையும் மாயை.

Pedavela joodu pendlamu gunamu……………….పేదవేళ జూడు పెండ్లము గుణము
Viswadhaabhuraama, Vinura Vema…………….విశ్వధాభిరామ, వినుర వేమ

கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் உனக்கு வரும் வேளையில் தான் உன்மேல் உன் பந்துக்களின் அக்கறை எவ்வளவு என்பது தெரிந்துகொள்வாய் . உன் எதிரிகளின் பலத்தை நீ பயத்தில் இருக்கும்போது புரிந்துகொள்வாய். நீ எல்லாம் இழந்து பரம ஏழையாகும்போது தான் உன் மனைவி யார் என்பது புரியும். ”இல்லானை இல்லாளும் வேண்டாள்” பாட்டு அர்த்தம் ”நச்” சென்று புரியும்.

அடேடே இந்த தெலுங்கு பட்டினத்தார் வேமனாவை நம் வாசகர்களுக்கு பிடிக்கிறதே. இந்த தத்துவங்கள் வேதாந்தங்கள் எல்லாம் ரசிக்கிறார்களே . நாம் நல்ல காரியம் தான் செய்த்திருக்கிறோம் என்று ஆத்ம திருப்தி ஏற்படுகிறது. மேற்கொண்டு சில பாடல்களை அறிவோம்:

வேமனா தன்னுடைய பாடல்களில், தத்துவங்களை தனக்கே சொல்லிக்கொள்வது போல் அமைந்திருக்கிறது. என்னடா வேமா, புரிகிறதா,தெரிந்துகொள்ளடா? என்கிற டைப்பில் பாடி இருக்கிறார்.

Anuvu gani chota Nadhikulamanaradu……………….అనువు గాని చోట అధికులమనరాదు
Kochmayina nadiyu kodava gadu……………………..కొంచమైన నదియు కొదవ గాదు
konda addamandu knochami undada……………….కొండ అద్దమందు కొంచమై ఉండదా
Viswadhaabhiraama, Vinura Vema……………………విశ్వధాభిరామ, వినుర వేమ

ஏண்டா, வேமா, நேரம் இடம் சரியில்லை என்றால் வெற்றி யேது நிம்மதியேது? அதனால் உன்னுடைய திறமை சக்தியெல்லாம் மட்டமாகி விடுமா? சின்னக் கண்ணாடியிலே பார்க்கும் போது பெரிய மலை கூட குட்டியாகத் தான் தெரியும். ஞாபகம் வைத்துக்கொள்ளடா”

எனது தெலுங்கு தெரிந்த நண்பர்களே, மற்றவர்களை விட உங்களுக்கு மிக்க பெருமை யளிக்கும் பதிவு இல்லையா இது? உங்களை விட வேறு யார் வேமனாவை ரசிக்க முடியும்.

உங்கள் அபிமான தத்துவஞானியைப் பற்றி எழுதப்ப ட்ட இந்த பதிவுக்கு உங்கள் ஆதரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். எனக்கு தெலுங்கு எழுதவோ, படிக்கவோ, அவ்வளவாக பேசவோ தெரியாது என்பதில் மிக வருத்தம். ஆங்கிலத்தில் யாரோ எழுதியதை வைத்துக்கொண்டு முடிந்தவரை தமிழில் தருகிறேன்.

வேமனாவைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லவேண்டுமே. அவர் சிவ பக்தர். பொய்மை வேஷம் கொண்ட பக்தர்களையோ சந்நியாசிகளையோ சாடுவதில் அவருக்கு நிகர் அவரே அதைப்பற்றி பாடுவதை நான் எழுதுகையில் கோபம் என்மீது திரும்ப வேண்டாம்.

தெலுங்கில் உள்ள அவர் பாடல்களில் முதல் அடி அவர் கருத்தைச்சொல்லும். அடுத்தது தன்னைத் தானே “என்னடா வேமா சொல்கிறாய், சரிதானே?” என்பது போல் அமைந்துள்ளது

Apadaina velanarasi bandhula joodu…………….ఆపదైన వేళ నరసి బంధుల జూడు
bhayamuvela joodu bantu tanamu……………….భయమువేళ జూడు బంటు తనము
Pedavela joodu pendlamu gunamu……………….పేదవేళ జూడు పెండ్లము గుణము
Viswadhaabhuraama, Vinura Vema…………….విశ్వధాభిరామ, వినుర వేమ

கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் உனக்கு வரும் வேளையில் தான் உன்மேல் உன் பந்துக்களின் அக்கறை எவ்வளவு என்பது தெரிந்துகொள்வாய் . உன் எதிரிகளின் பலத்தை நீ பயத்தில் இருக்கும்போது புரிந்துகொள்வாய். நீ எல்லாம் இழந்து பரம ஏழையாகும்போது தான் உன் மனைவி யார், அவளுக்கு உன்மேல் எவ்வளவு அக்கறை என்பது புரியும். ”இல்லானை இல்லாளும் வேண்டாள்” பாட்டு அர்த்தம் ”நச்” சென்று புரியும்.

Gangi govu paalu garitadainanu chaalu……………….గంగి గోవు పాలు గరిటడైనను చాలు
Kadivedainanemi kharamu paalu……………………….కడివెడైననేమి ఖరము పాలు
Bhakti kalugu koodu pattedainanu chaalu…………….భక్తి కలుగు కూడు పట్టెడైనను చాలు
Viswadhaabhiraama, Vinura Vema………………………విశ్వధాభిరామ, వినుర వేమ

“ஒரு உத்ரணி சுத்தமான காராம்பசுவின் பாலுக்கு ஒரு குடம் கழுதையின் பால் ஈடாகுமா? . அன்பாக உபசரித்து உண்மையான பாசத்தோடு ஒரு கரண்டி சாதம் போதுமே, “இந்தா கொட்டிக்கோ” என்று மனதில் நினைத்துகொண்டு ஒரு வாழை இலை நிறைய விருந்து வைப்பதை விட”

Atmasuddhi leni acharamadi ela……………….ఆత్మశుద్ధి లేని అచారమది ఏల
Bhandasuddhi leni pakamadi ela……………….భాండశుద్ధి లేని పాకమేల
Chittasuddi leni sivpujalelara……………………చిత్తశుద్ది లేని శివ పూజలేలర
Viswadhaabhiraama, Vinura Vema…………….విశ్వధాభిరామ, వినుర వేమ

ஆத்மாவில் சுத்தமில்லாமல் ஆச்சாரமாக மடியாக இருந்து என்ன பயன்? பாத்திரத்தை சுத்தமாக துலக்காமல் பாயசம் அதில் பண்ணி என்ன புண்ணியம்? சித்தத்தை அவன் பாலே வைக்காத சிவன் பூஜையால் யாருக்கு பலன் ?

Kaligi dharmam iiyan Kaanani vaaru nu Kaligi tinaka caala Kraagu vaaru Kalimin ecat`a cuud`an Kaanaka ced`uduru Vis`vada abhi raama Vinura Veema!

கலிகி தர்மம் லியன் காணனி வாறு னு களிக்க தினக சாலை கிராகு வாறு கலீமின் எக்கட்ட சூடான காணக சேடுரு விஸ்வாதாபி ராம வினுரா வேமா.

கடவுள் அருளால் நிறைய செல்வம் இருந்தும் அதை எப்படி தர்மம் செய்ய வேண்டும் என்று தெரியவும் மில்லை, அறியவும் இல்லை. செல்வம் எதற்காக தரப்பட்டுள்ளது? நாம் அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்றும் எவரும் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. இப்படிப்பட்டவனிடம் செல்வம் இருந்து என்ன பயன்.? அவனுக்கே அது பயனில்லை. அது அவனை விட்டு வெகு சீக்கிரம் நீங்கிவிடும் என்றும் அவன் அறியமாட்டான்.பாவம் ஏதோ கனவில் இருக்கட்டுமே. என்ன டா சொல்கிறாய் வேமா, சரிதானே.?

Taamu gad`ana seeyu Dhanamu tamadi ani Nammi umd`u verri Narulu bhuvi ni Taamu okarik iccu Dhanam imtiyee kaaka
Kad`amadi tana keela Kalugu Veema!

தாமு கடனதமது சீயு தனமு தமதி அணி நம்மி உண்டுவெர்ரி நருலு புவி நீ தாமு ஒக்கரிக்கிச்சு தானம் இமடியே காக கடமடி தான கீழ கலுகு வேமா.\

“அடே முட்டாளே , நன்றாக புரிந்துகொள். உன்னிடம் நிறைய பணம் இருக்கிறது. அதை நீ சம்பாதித்தது என்று மனப்பால் குடிக்காதே. வந்த வழியே அது செல்வதால் தான் அதற்கு “”செல்””வம் என்று பெயர். கடைசியில் உன்னிடம் மிஞ்சப்போவது நீ செய்த ( எந்த ஜென்மத்திலாவது கொஞ்சம் செய்திருந்தால்!!) அந்த தர்மத்தின் பலன் மட்டுமே. புரிகிறதாடா வேமா நான் சொல்வது?

Aakal anna vaanik Annambu pet`t`ina Harunak arpitamu gan Aaaragimcu
Dhara vihiinunakunu Daanamu at`u vale Vis`vada abhi raama vinura Veema!

“பசி காதடைக்க வயிறு ஒட்டி கண் பஞ்சடைந்து நிற்கிறானே அவனுக்கு சோறு போடு. அவன் சந்தோஷமாக சாப்பிடுவதைப்பார். உற்றுப்பார்த்தால் நீ அந்த பரம சிவனுக்கே அன்னமிட்டதை உணர்வாய். அதன் இணையற்ற பலனும் உன்னைச்சேரும்.

Taanu tinaka at`ula Dharmamu seeyaka Kod`ukulak ani dhanam Kuud`a pet`t`I
Teliya ceppa leeka Tiiri pooyina venka Sommu parula namdu Cuud`u Veema!

ராவும் பகலுமாக பணத்தைத் தேடி அலைவான். பணத்துக்காக எதையும் செய்வான். நிறைய பணம் சேர்ந்துவிட்டதே! தானமும் இல்லை தர்மமும் இல்லை. எங்கோ திருடனுக்கும் ராஜாவுக்கும் வரிக்கும் பயந்து சேமித்து புதைத்து வைத்திருப்பான். தனது பிள்ளை குட்டிக்கு என்று. அந்த பிள்ளை குட்டிக்கு அவன் தனது செல்வம் எங்கிருக்கிறது என்று சொல்வதற்குள் திடீர் என்று செத்தும் போவான். கடைசியில் யாருக்கோ ஒருவனுக்கு அது புதையலாக கிடைக்கும்! அப்படித்தானேடா வேமா?

Daana dharmamulunu Daya yu satyamu niiti Vinaya dhairya s`aurya Vitaran`amulu
Raaju paalit`iki ivi Raaja yogamulu Vis`vada abhi raama Vinura Veema.

ராஜா என்று பேருக்கோ அல்லது ராஜா என்ற பேரோடோ பணத்தை சுருட்டிக்கொண்டு ஒருவன் இருந்தால் எத்தகைய ராஜா அவன்?. ஒரு ராஜா எப்படியிருக்க வேண்டும் என்றால் வினயத்தோடு, தர்ம சிந்தனை யோடு, தயையோடு, தானத்தில் ஈடுபட்டுக்கொண்டு, வீரத்தோடு, தைர்யத்தொடு, விதரணையோடு இருந்தானானால் அவனுக்கும் அவனால் அந்த ஊருக்கே பெரும் புகழ் சேரும். இல்லையாடா வேமா, நீ என்ன சொல்கிறாய்?

kallu kumd`ak enni ghana bhooshan`amu lid`d`a amdulooni kampu cimdul id`ade?
tulava padavi konna toli gun`ameemagu? Vis`wadaabhi raama vinura Veema.

வீச்சம் என்றோ துர்கந்தம் என்றோ நாம் அடையாளம் காணும் ஒரு மொந்தை புளித்த கள்ளை அழகான தங்கக் குடுவையில் வைத்து மூடி அதன் மீது விலையுயர்ந்த ஆபரணங்களை போர்த்தி வைத்தாலும், அதிலிருந்து ஒரு துளி கள் எங்காவது வெளியே சிந்தினால் அதன் குணத்தைக்காட்டிவிடாதா? முழு முட்டாள், கொடியவன் மிக உயர்ந்த பெரிய பதவியில் இருந்தால் அவன் குணம் என்ன என்பது அவன் ஒரு செய்கையிலே, அவன் பேச்சிலேயே புரிந்துவிடுமே! நம் தான் தினமும் யூட்யூபில் பார்க்கிறோமே. சரியாத வேமா ?

Kooti pat`t`i tecci krotta put`t`amu kat`t`i komd`a mruccul ella kolicin at`lu
niiti hiinun odda nirbhaagyul umduru Vis`wadaabhi raama vinura Veema.

சிங்கவால் கருப்பு வாய் குரங்கு கூட்டம் ஒரு ராஜா இல்லையே என்று வேறு சாதாரண குரங்கை பிடித்து சாயம் பூசி துணி சுத்தி ராஜாவாக பண்ணினால் ராஜாவின் யோக்யதாம்சம் வந்துவிடுமா. பெரிய பொறுப்பில் அமர்ந்துகொண்ட தகுதியற்றவன் என்ன சாதிக்க முடியும்? நாம் தான் கண் கூடாக பார்க்கிறோமே உலகில் நடப்பதை எல்லாம். நீ என்னடா சொல்கிறாய் வேமா?

emta seeva ceesi yee paat`u pad`inanu raaca mooka nammaraadur anna
paamu tood`i pomdu padi veelak ainanu Vis`wadaabhi raama vinura Veema.

இந்தா பத்தாயிரம் பொற்காசு. இதோ இருக்கிறதே இந்த கரு நாகம். அதோ டு நட்பு கொண்டு வாழ் என்றால் யார் ஒப்புக்கொள்வான். சர்வாதிகாரியான ஒரு ராஜாவுடன் சிநேகமும் அவ்வாறே. நம்பமுடியாது எப்போது கழுத்துக்கு கத்தி என்று.

Gaali leeni diipa Kal`ika camdambunan Alalu sul`l`u leeni Jaladhi riiti
Nischala aatma unna Nirvikaarambuna Mukti amd`ru daani Mogini Veema!

காற்றின் அசைவு இன்றி தான் தீபம் ஒளிரும். அலையின் கொந்தளிப்பு இன்றிதான் கடலின் அமைதி காணப்படும். எண்ணங்களின் பிரதிபலிப்பு இன்றி தான் மனம் ஒருமைப்பட்டு இறைவனை அறியும் முக்தி கிடைக்கும். புரிகிறதா வேமா?

அரய நாஸ்தியனக யட்டு மாடாடக தட்டுவடக மதிநி தன்னுகோக
தனதி காதனுகொநி தா பெட்டுநனதேபெட்டு விஸ்வதாபி ராம வினுர வேமா ”

பார்க்கும்போதே தெரிகிறதே யாரோ ஒரு வயதான அதிதி பசியுடன் நம்பிக்கையுடன் நம்மை நோக்கி வருகிறார் என்று. அவர் வருவதற்குள்ளேயே போய் அவர் வாசலுக்குள் நுழையுமுன்னேயே ” ஒண்ணுமில்லை போ போ ” என்று விரட்டாமல் ஏதோ தம்மாலான ஒரு சிறு பொருளாவது யாசிப்பவனுக்கு அளிப்பது தான் உண்மையான தானம். காசு உண . வு எதுவுமே கொடுக்காமல் வந்தவர் மனதை நோகடிப்பதால் என்ன பயன்? இத்தகைய பணக்காரன் விரைவில் ஒட்டாண்டியாவான் என்கிறார் வேமனா.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *