SRIMAD BHAGAVATHAM 12TH CANTO J K SIVAN

ஸ்ரீ மத் பாகவதம் – நங்கநல்லூர் J K SIVAN
”12 வது காண்டம் கலி காலம், 12.2.12- 12.2.20

क्षीयमाणेषु देहेषु देहिनां कलिदोषत: । वर्णाश्रमवतां धर्मे नष्टे वेदपथे नृणाम् ॥ १२ ॥
पाषण्डप्रचुरे धर्मे दस्युप्रायेषु राजसु । चौर्यानृतवृथाहिंसानानावृत्तिषु वै नृषु ॥ १३ ॥
शूद्रप्रायेषु वर्णेषुच्छागप्रायासु धेनुषु । गृहप्रायेष्वाश्रमेषु यौनप्रायेषु बन्धुषु ॥ १४ ॥
अणुप्रायास्वोषधीषु शमीप्रायेषु स्थास्नुषु । विद्युत्प्रायेषु मेघेषु शून्यप्रायेषु सद्मसु ॥ १५ ॥
इत्थं कलौ गतप्राये जनेषु खरधर्मिषु । धर्मत्राणाय सत्त्वेन भगवानवतरिष्यति ॥ १६ ॥ 12.2.12-2.16.
चराचरगुरोर्विष्णोरीश्वरस्याखिलात्मन: । धर्मत्राणाय साधूनां जन्म कर्मापनुत्तये ॥ 12.2.17 ॥

kṣīyamāṇeṣu deheṣu dehināṁ kali-doṣataḥ varṇāśramavatāṁ dharme naṣṭe veda-pathe nṛṇām pāṣaṇḍa-pracure dharme dasyu-prāyeṣu rājasu
cauryānṛta-vṛthā-hiṁsā-nānā-vṛttiṣu vai nṛṣu śūdra-prāyeṣu varṇeṣu cchāga-prāyāsu dhenuṣu gṛha-prāyeṣv āśrameṣu yauna-prāyeṣu bandhuṣu aṇu-prāyāsv oṣadhīṣu śamī-prāyeṣu sthāsnuṣu vidyut-prāyeṣu megheṣu śūnya-prāyeṣu sadmasu itthaṁ kalau gata-prāye
janeṣu khara-dharmiṣu dharma-trāṇāya sattvena avatariṣyati
carācara-guror viṣṇor īśvarasyākhilātmanaḥ dharma-trāṇāya sādhūnāṁ janma karmāpanuttaye

சுகப்பிரம்ம ரிஷி தொடர்கிறார்:

”பரீக்ஷித், சொல்கிறேன் கேள். தக்க நேரம் வந்தால்,கலி முற்றினால், துஷ்டர்களை அழிக்க, சிஷ்டர்களை பரிபாலனம் செய்ய, பாதுகாக்க, பராமரிக்க தாவர ஜங்கம ஜீவன்கள் அனைத்தையும் பாதுகாக்கும் பரந்தாமன், கலிகாலத்தில் அவதரிப் பார்.. ஒவ்வொரு யுகத்திலும் நிகழ்வது இது”

शम्भलग्राममुख्यस्य ब्राह्मणस्य महात्मन: । भवने विष्णुयशस: कल्कि: प्रादुर्भविष्यति ॥ १८ ॥ 12.2.18
śambhala-grāma-mukhyasya brāhmaṇasya mahātmanaḥ bhavane viṣṇuyaśasaḥ kalkiḥ prādurbhaviṣyati

கலியுகத்தில் பரந்தாமன் எப்படி அவதரிப்பார் என்ற விவரமும் தருகிறார் சுகர்:
”ஸம்பலா எனும் கிராமத்தில் (இது எங்கே இருக்கிறதோ, நமக்கு தெரியவில்லை ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பு சுகர் துல்லியமாக கணிக்கிறார்.) ஒரு முக்கிய வைஷ்ணவ ப்ராமண குடும்பத்தில் கல்கி என்ற நாமதேயத்தோடு நாம் எதிர்பார்க்கும் மஹா விஷ்ணு இதோ வருகிறார் கலியுகத்தில் கல்கி பகவானாக. இது தசாவதாரத்தில் 10வது அவதாரம். லோக சம்ரக்ஷணத்துக்காக மஹா விஷ்ணுவின் இந்த அவதாரம் விநோதமானானது. அவர் பிறக்கப்போவது எங்கே என்று கூட ஏற்கனவே ஸ்ரீமத் பாகவத்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே. ஒரு பிராமணர் . அவர் பெயர் விஷ்ணுயாஸர் , அவர் வசிக்குமிடம் சம்பாலா கிராமம். அது எங்கே என்று என்னை கேட்காதீர்கள். கலியுகம் இன்னும் நாலரை லக்ஷம் வருஷம் இருக்க போகிறது. ஒவ்வொரு நாளும் மாறுதல் இருந்து கொண்டே இருக்கும் இந்த உலகத்தில் அத்தனை வருஷம் கழித்து கலியுகம் முடியும் சமயம் கல்கி பகவான் அவதரிப்பார் என்றால் சம்பலா கிராமம் அப்போது எப்படி இருக்கும், எங்கே தோன்றும் என்று யாருக்கு தெரியும். நிச்சயம் பாரத தேசத்தில் இமயமலை பக்கம் எங்காவது என்று மட்டும் சொல்கிறார்கள். எனக்கு தெரிந்தவுடன் உங்களுக்கு ஏதாவது ஒரு ஜென்மத்தில் நான் மனிதனாக பிறந்தால் நிச்சயம் சொல்கிறேன். .

19-20: अश्वमाशुगमारुह्य देवदत्तं जगत्पति: । असिनासाधुदमनमष्टैश्वर्यगुणान्वित: ॥ 12.2.19 ॥
विचरन्नाशुना क्षौण्यां हयेनाप्रतिमद्युति: । नृपलिङ्गच्छदो दस्यून्कोटिशो निहनिष्यति ॥ 12.2.20 ॥

aśvam āśu-gam āruhya devadattaṁ jagat-patiḥ asināsādhu-damanam aṣṭaiśvarya-guṇānvitaḥ
vicarann āśunā kṣauṇyāṁ hayenāpratima-dyutiḥ nṛpa-liṅga-cchado dasyūn koṭiśo nihaniṣyathi

கலியுகம் முடியும் சமயம், எல்லா ஜீவராசிகளின் உடம்பும் ரொம்பவே குறுகி, சிறுத்து காணப்படும். பாரம்பரிய தெய்வ, மதநம்பிக்கை, கோட்பாடுகள், எல்லாம் சிதறிவிடும். வேதங்கள் புறக்கணிக்கப்படும். வேதம் காட்டும் வழி காற்றில் பறக்கும். நாஸ்திகம் தலை தூக்கி எங்கும் நாஸ்திகர்கள் தான் காணப் படுவார்கள். ராஜாக்கள், அரசாங்க தலைவர்கள் எல்லாம் திருடர்களாக மாறலாம். எங்கும் அராஜகம் தலை தூக்கும். பணமில்லாதவன் தான் தாழ் குலத்தான். பசுக்கள் ஆடு அளவுக்கு சுருங்கிவிடும். வேத ஆசிரமங்கள் வெறும் வீடுகளாகும். குடும்பம் சுருங்கி ரெண்டு பேர் தான் அதிகம் என்று ஆகிவிடும். தாவரங்களும் அளவில் சிறிதாகிவிடும். மேகங்கள் வெறுமே பளிச்பளிச் எனும் மின்னலாக மாறும். பக்தி காணாமல் போகும். மக்கள் கழுதைகளாவார்கள் என்று சொல்கிறார் சுக ப்ரம்ம ரிஷி. இப்படி நிலை ரொம்ப மோசமாக புகும் சமயம் தான் மீண்டும் விஷ்ணு அவதரிப்பார். கல்கி பகவான் தேவதத்தம் எனும் வேகமாக ஓடும் குதிரை மேல் ஏறிக்கொண்டு வருவார். கையில் கூரிய வாள் . ராஜா வேஷத்தை போட்டுக்கொண்டு மக்களை கொள்ளையடிப்பவர்கள் அத்தனைபேரையும் காலி பண்ணி விடுவார்.ராஜா தான் இல்லையே என்று கவலைப்படவேண்டாம். ராஜா என்றால் வெள்ளைச்சட்டை போட்டுக்கொண்டு பாக்கெட்டில் ஏதோ ஒரு பொம்மை வெளியே தெரியும்படி வைத்துக்கொண்ட வெள்ளை வேட்டிக்கார என்று அதிகாரத்தில் இருப்பவர்கள் என்று எடுத்துகொள்வோம். கல்கி பகவான் கலியுகத்தின் முடிவில் தான் வருவாரோ? கலியுகத்தில் முதல் பாதத்தில் தான் இப்போது இவ்வளவு அக்கிரமங்களை சகித்துக்கொண்டு வாழ்கிறோம். இன்னும் மூன்று பாகங்கள் இருக்கிறது. அதுபற்றி நமக்கு கவலை வேண்டாம். நிச்சயம் அத்தனை லக்ஷம் வருஷங்கள் நாம் இருக்கப் போவதில்லையே. அப்போதும் பிறவி எடுப்போம் என்றால் என்ன பிறவி கிடைக்குமோ?

கலியுகத்தில் சில நல்ல சேதிகளும் காதுக்கும் கண்ணுக்கும் கிடைக்கிறது. நமது பூமியை நாம் பூகோள புத்தகத்தில் கோடுகளாக பார்த்திருக்கிறோம், வரைபடங்கள் எனும் MAP இது தான் இந்தியா, ரஷ்யா அமேரிக்கா ஆஸ்திரேலிய கண்டங்கள் என்று வர்ணம் அடித்து காட்டுவது தெரியும். பூமி உருண்டை என்பதை சொல்லிக் கேட்டிருக்கிறோம். பூமியில் இருந்து கொண்டே பூமி உருண்டையாக நீலமாக ஜலங்களோடு ஆகாசத்தில் தெரிவதை இப்போது பார்க்க முடிகிறது. யு ட்யூபில் சந்திராயண விண்கலம் பிரக்யான் ரோவர் எல்லாம் படம்பிடித்து நமக்கு எவ்வளவு துல்லியமாக காட்டி இருக்கிறது. நிறைய தங்கப் பாறைகள் இருக்கிறதாம். சந்திரநில் திருடர்கள் கிடையாது என்பதால் ஜாக்கிரதையாக இருக்கிறது. GRT அங்கே போய் தங்க நகை கடை வைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை போலிருக்கிறது. நாமும் இன்ஸ்டால்மென்டில் தங்கம் வாங்கலாம். இப்படிப்பட்ட கலிகாலத்தை நன்றாக யோசித்து சுகப்பிரம்ம ரிஷி பரீக்ஷித் மகாராஜாவுக்கு சொல்வதை தான் நாம் ஸ்ரீமத் பாகவதத்தில் படிக்கிறோம்.

ஹிந்துக்களுக்கு மஹா பாரதம் ராமாயணம் ஸ்ரீமத் பாகவதம் எல்லாம் தெய்வீக நூல்கள் ..பாகவதம் அவற்றில் பெரியது 18000 ஸ்லோகங்களை கொண்டது. 355 அத்தியாயங்கள். காண்டங்கள் எனப்படுபவை. இவற்றில் எண்ணற்ற கதைகள் உண்டு. .

பாகவதத்தில் 10 வது காண்டம் கிருஷ்ணன் வாழ்க்கையை பற்றி சொல்கிறது. அதை ஒவ்வொரு பதிவாக போட்டுக்கொண்டு வருகிறேன்.

எல்லாவற்றிலும் நாராயணனின் அவதாரங்கள் பல வடிவங்களில் புராணங்களில் தலைவனாக அவனை காட்டுகிறது. பக்தர்கள் பாகவதர்கள் என்று பக்தி ஸ்வரூபிகளாக அறியப்படுகிறார்கள். பாகவதன் என்றால் அதிர்ஷ்டசாலி என்று பொருள். அதிர்ஷ்டம் என்றால் இங்கே உலகில் வாழ தேவையான பொருள்களை அடைவது அல்ல. உண்மையான செல்வம் என்பது நாம் செய்யும் சத்காரியம்,பக்தி, புண்யம், தானம், தர்மம், அன்பு அறிவு, ஞானம், பற்றின்மை ஆகியவை தான். நிரந்தர செல்வம். அவையே மோக்ஷமார்கத்துக்கு இட்டுச் செல்லும் படிக்கட்டுகள்.

ஸ்ரீமத் பாகவதத்தை பாரதத்தின் தொடர்ச்சியாக எழுதவேண்டுமானால் பாண்டவ வம்சத்திலிருந்து தான் தொடரவேண்டும். பாண்டவர்களுக்கு பின், வம்சம் அர்ஜுனன் பேரன் பரிக்ஷீத் மூலம் தான் தொடர்கிறது.
அவனும் சாபத்தில் ஏழு நாட்களில் மரணமடையும் நிலையில் சுகப்பிரம்ம ரிஷி ஏழு நாட்களில் அவன் முடியும் வரை பாகவதத்தை ஒரு சப்தாஹமாக சொல்வதாக அமைகிறது. ஸ்ரீமத் பாகவதம் மஹாபுராணம் எனப்படுவது. காலக்ரமத்தோடு வரிசையாக வரும் சரித்திர புத்தகமல்ல. கேள்விகளுக்கு பதிலாக வழங்கப்பட்டது. பிரபஞ்ச தோற்றத்திலிருந்து கலியுகம் வரை பாரதத்தில் இல்லாத சம்பவங்கள் தொடர்கிறது.

அருவத்தை நாம் உணரமுடியாது என்று அறிந்து மகோன்னதமான ஒரு கிருஷ்ணன் உருவத்தை
ஸ்ரீமத் பாகவதத்தில் அளித்து நாம் அவனை உணர்ந்து வழிபட வைத்த புண்யவான் வேதவியாசர்.
பாகவதத்தை ஸ்ரத்தை யோடு பக்தியோடு படிப்பவன், பாராயணம் செய்பவன் வேண்டியது எல்லாம் கேட்காமலேயே அடைவான்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *