PUDUKKOTTAI RAJAH COLLEGE ODAM SONG – J K SIVAN

புத்துக்கோட்டை  ராஜா  காலேஜ் ஓடப்  பாட்டு  –   நங்கநல்லூர்  J K  SIVAN 

(பிரம்மஸ்ரீ  வசிஷ்ட பாரதியார் எழுதியது)
2ம்  பதிவு  16–40  வரிகள்.

புதுகோட்டை  சமஸ்தானம் திவான்   சேஷய்யா பள்ளிக்கூடம், காலேஜ்  கட்ட ஏற்பாடு செய்துவிட்டார். பல இன்ஜினியர்கள் வரவழைக்கப்பட்டு  அவர்கள் பிளான் பரிசீலிக்கப்பட்டு  கட்டிடம் கட்ட ஆரம்பித்தாகிவிட்டது.  மேற்கொண்டு   எங்கள் தாத்தா   புராணசாகரம்  பிரம்மஸ்ரீ  வசிஷ்ட பாரதிகளின்  காலேஜ் ஓடம் எனும் நாட்டுப்பாடல் அப்புறம் நடந்தவைகளை தொடர்கிறது ரசிப்போம். 

16. செய்ததொரு வேலைகளைக் கண்டு  மனம் மகிழ்ந்தார்.  சேஷய்யா சாஸ்திரிகளை எல்லோ ரும்  புகழ்ந்தார்கள் 

17. கருங்கல்லின்மேலே செங்கல் சுவரடுக்கி  காரிரும்பு கம்பியால் பீம்ஸுகள் முடுக்கி

18, ஆங்காங்கே  மாடிப்படிக்கும்  ஆனபடி  வைத்தார்.
 அதற்குமேல் கண்ணாடியால் டாப் வைத்தார்

 19. வகுப்புக்கு ஒவ்வொரு ஹால்களும் விடுத்தார்.  வாத்தியார் ரெஸ்டுக்கு வேரிடம் கொடுத்தார்

 20. பல பாஷை புத்தகங்கள் பீரோவில் சேரும் பலமான லைபிரேரி ஹாலிதோ  பாரும்

21. பல வர்ண கண்ணாடி கலாக்ஸி    GALAXY  பார்பர் மனேன்ட் ஸ்டேஜ்  BarberManent  stage  (இது என்ன என்று தெரியவில்லை,  மேடைக்கு  யாரோ  ஒரு வெள்ளைக் காரர்  பெயராவது இருக்கும்)  தனில் வெகு குஷி. 

22. சுற்றிலும் கிரீனாக விளங்கிடச்   சோலை ஜில்லென்று கிணறுகளும் வாட்டரிங்   watering   ஸப்ளை.

23 இக் காலேஜுக்கு நிகரில்லை என்று கண்டார் இங்கு வந்து  படிக்க எல்லாரும் மனம் கொண்டார்.

24. சீர்மேவு கெஞ்சம், விசாகப்பட்டணம், டில்லி,  சிறப்பான  தஞ்சாவூர்,  திருச்சினாப்பள்ளி

25. மலபாரில் திருவாங்கூர் கொச்சி,திருசூரு,  மதுரை திருநெல்வேலி கோயம்புத்தூரு 

26. மாயவரம் கும்பகோணம் உடன் மன்னார்குடியும் பட்டுக்கோட்டை,  கண்டனூரு, காரைக்குடியும்
27. தொண்டி திருவாடானை, திருவேகம் பத்து துலங்கு நகரச்செட்டி பிள்ளைகளும்  ஒத்து 

28. காலேஜு  சீர்மைகளைக் கேட்டு மனமுவந்தார் கனமான புதுக்கோட்டை தனிலே வந்தார்.

29. நல்லூரு வைத்தாவின் ஹோட்டலைக் கண்டு நயமாக மாதம் ஆறரைச் சார்ஜ் சென்று

30. திட்டமாய் பேசியே ஆஸ்டலில்  hostel ரூமும் தேவையானது உண்டு இருப்போம்  நாமும்

31. என்று மகிழ்வாய் மஸ்லின் கிளாஸ்கோ மல் உடுத்தி இயல்பான ஸடிக் ஒன்று கைகளில் எடுத்து

32. காலினில் பூட்ஸுடன் ஆப்பாரம்   boots  half form மாட்டி  ‘கம் ஹலோ” come  hallo  என்று தன் பிரண்ட்ஸுகளைக் கூட்டி

33. போவாம் நாம் இன்று மார்னிங்வாக்  morning  walk  என்று புதுக்கொளம் ஷோரின்மேல் மகிழ்வாக நின்று

34. டூத்பவுடர் கொண்டு நன்றாக பல்லை விளக்கி தூசற்ற தண்ணீரினால் முகத்தை துலக்கி

35. ஜிஞ்சர் பிஸ்கோத்துடன் ரொட்டிகளைக் கடித்து தின்றதற்கு மேலாக திக் காப்பி  thick  coffee  குடித்து

36.எங்கும் ‘கம்’  என்றிடும் ஏராயில்  hairoil பூசி   இருக்கும்  பொழுதே சற்று  பாடம் படித்து 

37. பல்லவன் குளத்திலே நீஞ்சி  விளையாடி  பட்சமுடன் சந்தியா வந்தனம் கூடி 

38. சாந்தனாதீச்சுவரர் சந்நிதியில் நின்று சந்ததமும் ஸீனியர் பாஸாக என்று 

39. வேண்டியே எல்லோரும் ஓட்டலை அடுத்து  வெள்ளையாய் சலவை செய்த  கிளாத்துகள் clothes  உடுத்து 

40. கண்ணாடி பார்த்து சிறிதாய் சாந்து பொட்டு கரையாமல் இருக்க ஒரு நாழிமெனக்  கெட்டு….

புதுக்கோட்டை  காலேஜ்  ஓடம்  தொடரப்போகிறது.  இது வரை  நாம்  அறிந்தது, 200 வருஷங்களுக்கு முன்பு புதுக்கோட்டை காலேஜ் கட்டிடம் கட்டப்பட்ட விதம், வகுப்பறைகள்,  லைப்ரரி, காலேஜ் ஹால்,  ஸ்டேஜ்,  எங்கிருந்து எல்லாம் மாணவர்கள் வந்து தங்கினார்கள், அருகே  இருந்த நல்லூர்  வைத்தா அய்யர்  ஹோட்டலில்
 ரூம்  பிடித்தது.  மாதம்  வாடகை  ஆறரை ரூபாய் கொடுத்தது, மாணவர்கள்  glasgo mull  வேஷ்டி  உடுத்தது , கையில்  fancy  stick,  காலில் ஷூ. shoes  half  tr   ousers, அணிந்தது,  ஒருவரோடொருவர்  ஆங்கிலத்தில்  come  hallo  என்றெல்லாம்  பேசிக்கொண்டது,  புதுக் குளம் என்ற  நீர் நிலை கரையில் காற்று வாங்கி யது, பல்பொடியால்  பல் விளக்கியது,  காலையில்  ginger   biscuits,  bread  சாப்பிட்டு   degree coffee  குடித்தது. மாணவர்கள் அக்காலத்தில்  வாசனையான  hairoil   தடவிக்கொண்டு  தலையை படிய இடது பக்கம் கோணல் வகிடு எடுத்து வாரிக் கொண்டார்கள்.
காலை வேளையில் நேரம் இருக்கும்போதே பாடம் படித்தார்கள்.   பல்லவன்குளத்தில்  நீச்சலடித்தார்கள்.  ரெண்டு வேளையும்  சந்தியா வந்தனம் பண்ணினார்
கள்! மடியாக  சாந்திநாதேஸ்வரர் கோவில் சென்று paas  ஆகவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்களாம்.   நல்லூர்  வைத்தா அய்யர்  ஹோட்டலில் கண்ணாடி பார்த்து நெற்றிக்கு சாந்து பொட்டு  இட்டுக் கொண்டார் கள்…..

 இன்னும்  தாத்தா சுவாரஸ்யமாக சொல்லப்போகிறார்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *