VIVEKA CHOODAMANI – J K SIVAN

விவேக சூடாமணி – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

ஸ்லோகங்கள் 141-155
महामोहग्राहग्रसनगलितात्मावगमनो धियो नानावस्थां स्वयमभिनयंस्तद्गुणतया । नानावस्थाः अपारेसंसारे विषयविषपूरेजलनिधौ निमज्योन्मज्यायं भ्रमति कुमतिः कुत्सितगतिः ॥ १४१॥

mahāmōhagrāhagrasanagalitātmāvagamanō dhiyō nānāvasthāṃ svayamabhinayaṃstadguṇatayā । (pāṭhabhēdaḥ – nānāvasthāḥ)
apārē saṃsārē viṣayaviṣapūrē jalanidhau nimajyōnmajyāyaṃ bhramati kumatiḥ kutsitagatiḥ ॥ 141॥

மஹாமோஹக்³ராஹக்³ரஸநக³லிதாத்மாவக³மநோ தி⁴யோ நாநாவஸ்தா²ம் ஸ்வயமபி⁴நயம்ஸ்தத்³கு³ணதயா । நாநாவஸ்தா:² அபாரே ஸம்ஸாரே விஷயவிஷபூரே ஜலநிதௌ⁴ நிமஜ்யோந்மஜ்யாயம் ப்⁴ரமதி குமதி: குத்ஸிதக³தி: ॥ 141॥

மோகத்தில் மூழ்கியவன், புத்தியை புலன்களுக்கு அடகு வைத்தவன் ஞான சூன்யம், தனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதை உள்ளவன் ஆத்மாவை கிள்ளுக்கீரையாக நினைத்து, உடம்பு தான் அது என்ற அறியாமையில் துள்ளுகிறான். அவனது புத்தி அறிவு எல்லாமே அறியாமை எனும் சுறாமீனால் விழுங்கப்படுகிறது. அதன் விளைவாக சம்சார சாகரத்தில் திக்கு முக்காடி மேலும் கீழுமாக தூக்கி எறியப்படுகிறான். புலன்களின் ஆக்கிரமிப்பு விஷத்தை விட கொடியது.

भानुप्रभासञ्जनिताभ्रपङ्क्तिः भानुंतिरोधाय विजृम्भतेयथा । आत्मोदिताहङ्कृतिरात्मतत्त्वं तथा तिरोधाय विजृम्भतेस्वयम्॥ १४२॥

bhānuprabhāsañjanitābhrapaṅktiḥ bhānuṃ tirōdhāya vijṛmbhatē yathā ।
ātmōditāhaṅkṛtirātmatattvaṃ tathā tirōdhāya vijṛmbhatē svayam ॥ 142॥

பா⁴நுப்ரபா⁴ஸஞ்ஜநிதாப்⁴ரபங்க்தி: பா⁴நும் திரோதா⁴ய விஜ்ரு’ம்ப⁴தே யதா² । ஆத்மோதி³தாஹங்க்ரு’திராத்மதத்த்வம் ததா² திரோதா⁴ய விஜ்ரு’ம்ப⁴தே ஸ்வயம் ॥ 142॥

மேகங்கள் எங்கிருந்து உண்டாகிறது? சூரியனின் வெப்பத்தால் கடல் நீர் ஆவியாகி மேகமாகிறது. ஆனால் அது பறந்து திவலையாக சூரியனையே மேகம் மறைக்கிறது. அது போலவே ஆத்மாவினால், பிரம்மத்தல் சிருஷ்டிக்கப்பட்ட அஹம்பாவம் ஆத்மாவையே திரையாக மூடுகிறது. அதனால் ஆத்மா ஒளியை இழக்கவில்லை. வெளியே தெரியவில்லை அவ்வளவே.

कवलितदिननाथेदुर्दिने सान्द्रमेघैः व्यथयति हिमझञ्झावायुरुग्रो यथैतान्। अविरततमसाऽऽत्मन्यावृतेमूढबुद्धिं क्षपयति बहुदुःखैस्तीव्रविक्षेपशक्तिः ॥ १४३॥

kavalitadinanāthē durdinē sāndramēghaiḥ vyathayati himajhañjhāvāyurugrō yathaitān ।
aviratatamasā”tmanyāvṛtē mūḍhabuddhiṃ kṣapayati bahuduḥkhaistīvravikṣēpaśaktiḥ ॥ 143॥

கவலிததி³நநாதே² து³ர்தி³நே ஸாந்த்³ரமேகை:⁴ வ்யத²யதி ஹிமஜ²ஞ்ஜா²வாயுருக்³ரோ யதை²தாந் । அவிரததமஸாऽऽத்மந்யாவ்ரு’தே மூட⁴பு³த்³தி⁴ம் க்ஷபயதி ப³ஹுது:³கை²ஸ்தீவ்ரவிக்ஷேபஶக்தி: ॥ 143॥

மேக மூட்டம் கூடிய நாளன்று சூரியனை மேகங்கள் முழுதுமாக மறைத்து எங்கும் ஒளியின்றி இருள் சூழ வைக்கிறது. அதன் விளைவாக காற்று குளிர்ச்சி பெற்று குளிர் வாடைக் காற்று தோலைத் துளைக்கிறது. அது போலவே ஆத்மாவை அஞ்ஞானம், அறியாமை எனும் மேகங்கள் மூடிக்கொண்டு விக்ஷேப சக்தி குளிர் காற்று போல் முட்டாள் மனிதனை பல துன்பங்களுக்கு ஆளாக்குகிறது.

एताभ्यामेव शक्तिभ्यां बन्धः पुंसः समागतः । याभ्यां विमोहितो देहं मत्वाऽऽत्मानं भ्रमत्ययम्॥ १४४॥
ētābhyāmēva śaktibhyāṃ bandhaḥ puṃsaḥ samāgataḥ । yābhyāṃ vimōhitō dēhaṃ matvā”tmānaṃ bhramatyayam ॥ 144॥

ஏதாப்⁴யாமேவ ஶக்திப்⁴யாம் ப³ந்த:⁴ பும்ஸ: ஸமாக³த: । யாப்⁴யாம் விமோஹிதோ தே³ஹம் மத்வாऽऽத்மாநம் ப்⁴ரமத்யயம் ॥ 144॥
அஞ்ஞானம் மேலிட்டு அப்பாவி மனிதன் உடம்பை ஆத்மா என்று தவறாக எண்ணுகிறான். சம்சார சாகரத்தில் ஆழ்ந்து விடுகிறான். பல தேகங்கள் எடுக்க வேண்டி இருக்கிறது. அத்தனையும் அவன் துன்பங்களை சந்திக்கவே என்று அறியாத மூடன்.

बीजं संसृतिभूमिजस्य तुतमो देहात्मधीरङ्कुरो रागः पल्लवमम्बुकर्मतुवपुः स्कन्धोऽसवः शाखिकाः । अग्राणीन्द्रियसंहतिश्च विषयाः पुष्पाणि दुःखं फलं नानाकर्मसमुद्भवं बहुविधं भोक्तात्र जीवः खगः ॥ १४५॥

bījaṃ saṃsṛtibhūmijasya tu tamō dēhātmadhīraṅkurō rāgaḥ pallavamambu karma tu vapuḥ skandhō’savaḥ śākhikāḥ ।
agrāṇīndriyasaṃhatiścha viṣayāḥ puṣpāṇi duḥkhaṃ phalaṃ nānākarmasamudbhavaṃ bahuvidhaṃ bhōktātra jīvaḥ khagaḥ ॥ 145॥

பீ³ஜம் ஸம்ஸ்ரு’திபூ⁴மிஜஸ்ய து தமோ தே³ஹாத்மதீ⁴ரங்குரோ ராக:³ பல்லவமம்பு³ கர்ம து வபு: ஸ்கந்தோ⁴ऽஸவ: ஶாகி²கா: । அக்³ராணீந்த்³ரியஸம்ஹதிஶ்ச விஷயா: புஷ்பாணி து:³க²ம் ப²லம் நாநாகர்மஸமுத்³ப⁴வம் ப³ஹுவித⁴ம் போ⁴க்தாத்ர ஜீவ: க²க:³ ॥ 145॥
சம்சாரத்தை ஒரு விருக்ஷமாக உருவாகப் படுத்தினால் அதன் விதை அஞ்ஞானம். தேகத்தை ஆத்மா என்று அறியும் புத்தி தான் விருக்ஷத்தின் தண்டு, எண்ணற்ற பற்றுக்கள் ஆசைகள் தான் இலைகள், அவன் அதில் ஈடுபட்டு செய்யும் கர்மா தான் அந்த விருக்ஷம் வளர தேவையான நீர், உடம்பு தான் அடிமரத்தண்டு, ஐம்புலன்களின் பல்வேறு சேஷ்டைகள் தான் தந்துகிகள். புலன் துய்ப்பன எல்லாம் மலர்கள், அவன் அதனால் பெரும் பல்வேறு துன்பங்கள் அந்த விருக்ஷத்தின் காய் கனிகள். ஆத்மா அந்த மரத்தின் மேல் அமர்ந்து இதெல்லாம் வேடிக்கை பார்க்கும் பறவை. ஆதி சங்கரரின் கற்பனை உதாரணம் அபாரமாக இருக்கிறது அல்லவா?

अज्ञानमूलोऽयमनात्मबन्धो नैसर्गिकोऽनादिरनन्त ईरितः । जन्माप्ययव्याधिजरादिदुःख प्रवाहपातं जनयत्यमुष्य ॥ १४६॥ ajñānamūlō’yamanātmabandhō naisargikō’nādirananta īritaḥ । janmāpyayavyādhijarādiduḥkha- pravāhapātaṃ janayatyamuṣya ॥ 146॥

அஜ்ஞாநமூலோऽயமநாத்மப³ந்தோ⁴ நைஸர்கி³கோऽநாதி³ரநந்த ஈரித: । ஜந்மாப்யயவ்யாதி⁴ஜராதி³து:³க²ப்ரவாஹபாதம் ஜநயத்யமுஷ்ய ॥ 146॥

வாழ்க்கையில் ஒருவன் அனுபவிக்கும் பந்தம், கட்டு, அஞ்ஞானத்தால் அவனை பிணைக்கிறது. அவனே உண்டாக்கிக் கொள்வது. அதன் விளைவாக அவன் எண்ணற்ற பிறவிகள் எடுத்து உழல வேண்டி இருக்கிறது, வியாதி, ஜனன மரண சோக துயரங்களை அனுபவிக்கிறான்.

नास्त्रैर्नशस्त्रैरनिलेन वह्निना छेत्तुं न शक्यो न च कर्मकोटिभिः । विवेकविज्ञानमहासिना विना धातुः प्रसादेन शितेन मञ्जुना ॥ १४७॥

nāstrairna śastrairanilēna vahninā Chēttuṃ na śakyō na cha karmakōṭibhiḥ । vivēkavijñānamahāsinā vinā dhātuḥ prasādēna śitēna mañjunā ॥ 147॥
நாஸ்த்ரைர்ந ஶஸ்த்ரைரநிலேந வஹ்நிநா சே²த்தும் ந ஶக்யோ ந ச கர்மகோடிபி:⁴ । விவேகவிஜ்ஞாநமஹாஸிநா விநா தா⁴து: ப்ரஸாதே³ந ஶிதேந மஞ்ஜுநா ॥ 147॥

சம்சார பந்தத்தை எந்த ஆயுதத்தாலும் அழிக்கமுடியாது, காற்று ஜலம் அக்னி எதுவும் அதை அகற்றாது. ஞானம் என்ற கூறிய வாளால் மட்டுமே அதை துண்டிக்கமுடியும். அதற்கு பகவான் அருள் அவனுக்கு வேண்டும்.

श्रुतिप्रमाणैकमतेः स्वधर्म निष्ठा तयैवात्मविशुद्धिरस्य । विशुद्धबुद्धेः परमात्मवेदनं तेनैव संसारसमूलनाशः ॥ १४८॥

śrutipramāṇaikamatēḥ svadharma niṣṭhā tayaivātmaviśuddhirasya ।
viśuddhabuddhēḥ paramātmavēdanaṃ tēnaiva saṃsārasamūlanāśaḥ ॥ 148॥

ஶ்ருதிப்ரமாணைகமதே: ஸ்வத⁴ர்ம நிஷ்டா² தயைவாத்மவிஶுத்³தி⁴ரஸ்ய । விஶுத்³த⁴பு³த்³தே:⁴ பரமாத்மவேத³நம் தேநைவ ஸம்ஸாரஸமூலநாஶ: ॥ 148॥

148. எவனொருவன் வேத நூல்களில் சொல்லப்பட்டவற்றை அனுசரித்து அப்பியாசத்தில் கடைப்பிடிக்கிறானோ அவன் சுயதர்மத்தில் நிலையாக நிற்பவன். அவனது வைராக்கியம் புலன்களின் ஈர்ப்பு பற்றுக்களில் இருந்து அவனை தடுத்துக் காக்கிறது. அப்படிப்பட்ட பரிசுத்த மனத்தினன் பரமாத்மாவின் அனுக்கிரஹம் பெறுகிறான். ஞானியாகி சம்சார பந்தத்தை வேரோடு சுட்டெரிக்கிறான்.

कोशैरन्नमयाद्यैः पञ्चभिरात्मा न संवृतो भाति । निजशक्तिसमुत्पन्नैः शैवालपटलैरिवाम्बुवापीस्थम्॥ १४९॥
kōśairannamayādyaiḥ pañchabhirātmā na saṃvṛtō bhāti । nijaśaktisamutpannaiḥ śaivālapaṭalairivāmbu vāpīstham ॥ 149॥
கோஶைரந்நமயாத்³யை: பஞ்சபி⁴ராத்மா ந ஸம்வ்ரு’தோ பா⁴தி । நிஜஶக்திஸமுத்பந்நை: ஶைவாலபடலைரிவாம்பு³ வாபீஸ்த²ம் ॥ 149॥

149.ஆத்மாவை பஞ்ச கோசங்கள் எனும் திரைகள் ஒன்றன் மேல் ஒன்றாக மூடி மறைக்கிறது. எல்லாமே ஆத்மாவிலிருந்து ;உருவானவை தான். இதனால் திரைகளால் மறைக்கப்பட்ட ஆத்மா எதைப் போல் இருக்கிறதென்றால் ஒரு நீர் தொட்டி யில் உள்ள நீர் அந்த தொட்டியில் பூரா படர்ந்திருக்கும் பச்சை பசேலென்ற பாசியின் நிறத்தை தானும் பெற்று அழுக்கு நீர் போல் காணப்படுவதைப் போல் என்கிறார் ஆதி சங்கரர்

तच्छैवालापनयेसम्यक् सलिलं प्रतीयतेशुद्धम्। तृष्णासन्तापहरं सद्यः सौख्यप्रदं परं पुंसः ॥ १५०॥
tachChaivālāpanayē samyak salilaṃ pratīyatē śuddham । tṛṣṇāsantāpaharaṃ sadyaḥ saukhyapradaṃ paraṃ puṃsaḥ ॥ 150॥
தச்சை²வாலாபநயே ஸம்யக் ஸலிலம் ப்ரதீயதே ஶுத்³த⁴ம் । த்ரு’ஷ்ணாஸந்தாபஹரம் ஸத்³ய: ஸௌக்²யப்ரத³ம் பரம் பும்ஸ: ॥ 150॥

பாசி பூண்டுகளை அகற்றினால் தொட்டியில் உள்ள, குளத்தில் உள்ள நீர் சுத்தமாகி குடிக்க, தாகம் தீர்க்க மனதுக்கு மகிழ்ச்சி ஊட்டுவது போல் என்கிறார் சங்கரர்

मपि कोशानामपवादे विभात्ययं शुद्धः । नित्यानन्दैकरसः प्रत्यग्रूपः परः स्वयञ्ज्योतिः ॥ १५१॥
pañchānāmapi kōśānāmapavādē vibhātyayaṃ śuddhaḥ । nityānandaikarasaḥ pratyagrūpaḥ paraḥ svayañjyōtiḥ ॥ 151॥
பஞ்சாநாமபி கோஶாநாமபவாதே³ விபா⁴த்யயம் ஶுத்³த:⁴ । நித்யாநந்தை³கரஸ: ப்ரத்யக்³ரூப: பர: ஸ்வயஞ்ஜ்யோதி: ॥ 151॥

பஞ்ச கோசம் அகற்றப்பட்டால், திரை விலகினால் ஆத்ம ஜோதி பரிசுத்தமாக பளிச்சிடுகிறது. அஞ்ஞானத்திரை அகன்றால் ஒருவன் யோகி, ஞானியாகிறான். பிரம்மத்தை துய்க்கிறான்.

आत्मानात्मविवेकः कर्तव्यो बन्धमुक्तयेविदुषा । तेनैवानन्दी भवति स्वं विज्ञाय सच्चिदानन्दम्॥ १५२॥
ஆத்மாநாத்மவிவேக: கர்தவ்யோ ப³ந்த⁴முக்தயே விது³ஷா । தேநைவாநந்தீ³ ப⁴வதி ஸ்வம் விஜ்ஞாய ஸச்சிதா³நந்த³ம் ॥ 152॥

152. சம்சார பந்தம் விலக, முடிச்சு அவிழ, ஒருவன் ஆத்மா எது தேகம் எது, ரெண்டையும் எது செலுத்துகிறது என்ற ஆத்ம ஞான விசாரத்தில் ஈடுபட வேண்டும். எது சாஸ்வதம், எது அழிவது என்ற பேதம் வெளிப்படும். பற்றுகளை அகற்றி அவன் ஆத்ம ஒளி பெறுகிறான் ஆனந்தத்தில் மூழ்குகிறான்.

मुञ्जादिषीकामिव दृश्यवर्गात् प्रत्यञ्चमात्मानमसङ्गमक्रियम्। विविच्य तत्र प्रविलाप्य सर्वं तदात्मना तिष्ठति यः स मुक्तः ॥ १५३॥
muñjādiṣīkāmiva dṛśyavargāt pratyañchamātmānamasaṅgamakriyam ।vivichya tatra pravilāpya sarvaṃ tadātmanā tiṣṭhati yaḥ sa muktaḥ ॥ 153॥
முஞ்ஜாதி³ஷீகாமிவ த்³ரு’ஶ்யவர்கா³த் ப்ரத்யஞ்சமாத்மாநமஸங்க³மக்ரியம் । விவிச்ய தத்ர ப்ரவிலாப்ய ஸர்வம் ததா³த்மநா திஷ்ட²தி ய: ஸ முக்த: ॥ 153॥

153. புலன் உணர்வுகள் தான் ஒருவன் புத்தியை பேதலிக்க செயகிறது. அவனை வசமாக அடிமைப் படுத்துகிறது. ஆட்டி வைக்கிறது. அதை ஆராய்ந்து அவற்றுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்ற பேதம் அபேதம் தெரிந்தவன் புத்திசாலி. அவனது புத்தி விவேகத்தால் தெளிவாக பற்றுகளை அறவே ஒதுக்குகிறான். பூமிக்குயில் இருந்து ஒரு கீரைத்தண்டை பிடுங்குபவன் அதன் வேர்களிலிருந்து தண்டு வரை கீரை வரை உள்ள மண்ணை, தூசியை எல்லாம் அகற்றி சுத்தமாக கழுவி அதை உபயோகிக்க சுலபமாக்குவது போல என்கிறார் ஆதி சங்கரர்

154, देहोऽयमन्नभवनोऽन्नमयस्तु कोश- var कोशो श्चान्नेन जीवति विनश्यति तद्विहीनः । ह्यन्नेन त्वक्चर्ममांसरुधिरास्थिपुरीषराशिर्नायं स्वयं भवितुमर्हति नित्यशुद्धः ॥ १५४॥
dēhō’yamannabhavanō’nnamayastu kōśa- (pāṭhabhēdaḥ – kōśō) śchānnēna jīvati vinaśyati tadvihīnaḥ । (pāṭhabhēdaḥ – hyannēna)
tvakcharmamāṃsarudhirāsthipurīṣarāśi- rnāyaṃ svayaṃ bhavitumarhati nityaśuddhaḥ ॥ 154॥
தே³ஹோऽயமந்நப⁴வநோऽந்நமயஸ்து கோஶ- var கோஶோ ஶ்சாந்நேந ஜீவதி விநஶ்யதி தத்³விஹீந: । ஹ்யந்நேந த்வக்சர்மமாம்ஸருதி⁴ராஸ்தி²புரீஷராஶிர்நாயம் ஸ்வயம் ப⁴விதுமர்ஹதி நித்யஶுத்³த:⁴ ॥ 154॥

பஞ்சகோசத்தில் அன்னமய கோசம் என்பது முதலாவது திரை. உணவினால் ஜீவிப்பது. அது தான் தோல் சதை, ரத்தம், எலும்பு மலஜலம் என்பன. ஆத்மாவை அதால் நெருங்கவே முடியாது. மறைப்பது மாயை.

पूर्वंजनेरधिमृतेरपि नायमस्ति var जनेरपिमृतेरथ जातक्षणः क्षणगुणोऽनियतस्वभावः । नैको जडश्च घटवत्परिदृश्यमानः स्वात्मा कथं भवति भावविकारवेत्ता ॥ १५५॥

pūrvaṃ janēradhimṛtērapi nāyamasti (pāṭhabhēdaḥ – janērapimṛtēratha) jātakṣaṇaḥ kṣaṇaguṇō’niyatasvabhāvaḥ ।
naikō jaḍaścha ghaṭavatparidṛśyamānaḥ svātmā kathaṃ bhavati bhāvavikāravēttā ॥ 155

பூர்வம் ஜநேரதி⁴ம்ரு’தேரபி நாயமஸ்தி var ஜநேரபிம்ரு’தேரத² ஜாதக்ஷண: க்ஷணகு³ணோऽநியதஸ்வபா⁴வ: । நைகோ
ஜட³ஶ்ச க⁴டவத்பரித்³ரு’ஶ்யமாந: ஸ்வாத்மா கத²ம் ப⁴வதி பா⁴வவிகாரவேத்தா ॥ 155॥

155. இந்த அஞ்ஞானத்திரை இருக்கிறதே அது ஆரம்பத்தில் இல்லை, முடிவிலும் கிடையாது. நடுவே தோன்றி மறைவது. மாறுவது அதன் குணம். அதன் மாறுதல்கள் எண்ணற்றவை கணக்கற்றவை, அது தான் அதன் இயற்கை நிலை. மண் குடம் போன்றது. சாஸ்வதமற்றது.அது ஆத்மாவாகவே முடியாது. அது எவ்வாறு உள்ளே எல்லாவற்றுக்கும் சாக்ஷி பூதமாக நிற்கும்?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *