VEMANA SATHAKAM – J K SIVAN

தேனான  வேமனா  –  நங்கநல்லூர்  J K   SIVAN
பாரத தேசம்  புண்ய பூமி.     இதில் ரிஷிகள் எண்ணற்றவர், தவ முனிவர்கள் பலர், வேத சாஸ்திர விற்பன்னர்கள் அனேகர். கற்றுணர்ந்த பண்டிதர்கள் கணக்கற்றவர்கள். இதில் சேராத, இயற்கையிலேயே ஞானிகளாக உலா வந்தவர்களோ சிலர் தான்.விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள். அவருள் பலரை நாம் முழுதும் அறிந்து கொள்வதற்குள் அவர்கள் மறைந்து விட்டனர்.   அவர்களுக்கிடையே நாம் காணும் ஒரே ஒற்றுமை, அவர்கள் முறைப்படி கல்லாதவர்களோ அல்லது அன்றாட பேச்சு வழக்கிலேயே மிக உன்னத தத்துவங்களை உணர்த்தியவர்களோ, பலன் எதுவும் எதிர்பாராமல் விளம்பரம் தேடாமல், அமைதியாக நம்மில் ஒருவராக வாழ்ந்த வழி காட்டிகளோ  வாழ்ந்தவர்கள் என்பது ஒன்றே தான். அவர்கள் அனைவருமே, பல வேறு மொழிகளில் தமது ஞானத்தை, பொன்மொழிகளை, தத்துவத்தை, சிந்தனை முத்துக்களை நமக்கு ஊட்டியவர்கள்.இப்படிப் பட்ட ஞானிகளின் வாக்குகள், வாசகங்கள் நம் வாழ்வின் இருளைப் போக்கும் தீபங்கள். இதை ஜப்பானிய மொழியிலோ,இத்தாலி பாஷையிலோ, தமிழிலோ அறிந்தாலும் உண்மை ஒன்றுதானே.. அவர் தான் பக்த வேமனா.
கிட்டத்தட்ட 700 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு ஆந்திரா என்ற பிரிவினை மனதில் தோன்றுமுன்பு வாழ்ந்த ரெட்டியார் வம்சத்தில் உதித்த பக்த வேமனா ஏறக்குறைய ஏழாயிரம் பாடல்களுக்கு மேல் புனைந்தவர் என்பது ஆச்சர்யத்தை தருகிறது
பக்த வேமனா ஒரு தெலுங்கு ரமணர், பட்டினத்தார் எனலாம்.
சந்தர்ப்பம், சூழ்நிலை, தகுதி இல்லாத இடத்தில் மகான்களைப் பற்றி பேசாதே. இத்தகைய இடத்தில் அறிமுகப்படுத் தாததால் மகான்களின் பெருமை குன்றாது. நாலே பேர் கூடினாலும் சத்சங்கம் தான் . அங்கே  நிறைய   வாய் விட்டு மனந்திறந்து  சத் விஷயங்களைப்   பேசலாமே. ஒரு பெரிய மலையைக்கூட ஒரு சிறு மொபைல் டெலிபோன் கேமரா படம் பிடிக்கிறதே. வேமனாவுக்கு மொபைல் தெரியாது. ஒரு தெலுங்கு பாடலில் சிறு கண்ணாடித்துண்டு என்றாலும் அதில் பெரிய மலையின் பிம்பம் தெரியுமே என்கிறார்.
வேமனாவைப் போல் இன்னும் இது போல் எண்ணற்ற தெய்வங்கள் எங்கிருந்தெல்லாமோ எந்தெந்த மொழிகளிலோ நமக்கு தந்ததை எல்லாம் நாம் இழந்து நிற்கிறோம். வெளியே வராதபோது எப்படி அறிந்து கொள்வது. தெரிந்து கொள்வது. புரிந்து கொள்வது.
வேமனா வார்த்தைகள் எல்லாமே எளிய அன்றாட, கொச்சையான, புரியும்படியான தெலுங்கில், வழக்கில் உள்ளது. லட்சோப லக்ஷம் தெலுங்கர்கள், படித்தவர், படிக்காதவர் அனைவரின் அன்றாட வாழ்க்கையில் பழமொழியாக, வார்த்தைகளாக, சொல்லாக மிளிர்பவை வேமனாவின் சொல்லோவியங்கள்.ஞானஸ்தர்களும் பண்டிதர்களும் கூட கையாள விரும்புவது இவையே. இந்த சிறு சிறு நல்வழிப் பாடல்கள் மக்களைத் திருத்தி இறைவன் பால் வழிகாட்டுபவனவாக இன்றும் நடைமுறையில் உள்ளதே இவற்றின் சிறப்பு .

வேமனாவின்  தனிச்சிறப்பு என்ன தெரியுமா?  சொல்லுங்கள்  என் அருமை தெலுங்கு தெரிந்த, படிக்கத் தெரிந்த நண்பர்களே, எங்கே உங்கள் ஒருவரையும் காணோம். என்னய்யா உங்கள் தத்வ ஞானி வேமனாவைப் பற்றி ஒரு வார்த்தை கூட மூச்சு விட வில்லை நீங்கள், ஒன்றுமே சொல்ல மாட்டேன் என்கிறீர்களே ? வேமனா வேறு யாருக்கும் உபதேசம் செய்யவில்லை, என்னடா  வேமா, நான் சொல்வது சரிதானே? என்று ஒவ்வொரு  பாட்டிலும்  கேட்டுக் கொள்கிறார்.  

Atmasuddhi leni acharamadi ela……………….ఆత్మశుద్ధి లేని అచారమది ఏల
Bhandasuddhi leni pakamadi ela……………….భాండశుద్ధి లేని పాకమేల
Chittasuddi leni sivpujalelara……………………చిత్తశుద్ది లేని శివ పూజలేలర
Viswadhaabhiraama, Vinura Vema…………….విశ్వధాభిరామ, వినుర వేమ
ஆத்மாவில் சுத்தமில்லாமல் ஆச்சாரமாக மடியாக இருந்து என்ன பயன்?  உள்ளம் பூரா  வண்டி அழுக்கை வைத்துக்கொண்டு மேலே  குழாய் நீரில்  குளித்து என்ன பயன். பாத்திரத்தை சுத்தமாக துலக்காமல் பாயசம் அதில் பண்ணி என்ன புண்ணியம்? சித்தத்தை அவன் பாலே வைக்காத சிவன் பூஜையால் யாருக்கு பலன் ?  என்னடா வேமா  நான் சொல்வது சரிதானே! –  வேமனா.

Veshabhashalerigi Kashayavastramul……………….వేషభాషలెరిగి ఖాషాయవస్త్రముల్
gattagane mukti galugabodhu………………………….గట్టగానె ముక్తి గలుగబోదు
talalu bodulina talapulu bodula………………………..తలలు బోడులైన తలపులు బోడులా
Viswadhaabhiraama, Vinrua Vema…………………..విశ్వధాభిరామ, వినుర వేమ
வேஷபாஷ லெரிகி காஷயவஸ்த்ரமுல் கட்டகானெ முக்தி கலுகபோது
தலலு போடுல்றுன தலபுலூ போடூலா விஶ்வதாபிராம வினுர வேமா 

வெறும் வேஷம் போட்டுக்கொள்வதால் நீ மதிக்கப்  படமாட்டாய். கதர் சட்டை தொப்பி ஒருவனை  நேரு  ஆக்காது. கதர் வேஷ்டி காமராஜாக்கி விடாது. முண்டாசு  பாரதி ஆக்காது . பேச்சின் தோரணை மாற்றிக் கொண்டதால் நீ உயர்ந்துவிட மாட்டாய். உன் காவியுடையும், மொட்டைத்தலையோ தாடியோ, ஜடாமுடியோ, உனக்கு மோக்ஷத்தை அளிக்காது. உன் எண்ணமும் செயலும் தான் உன் மதிப்பின் எடை கல்.   நான் சொல்வது சரியாடா  வேமா?-  வேமனா.

చంద మెరిగి మాట చక్కగా చెప్పిన ఎవ్వడైన మాట మరికేల పలుకు
చంద మెరింగి యుండు సందర్భ మెరుగుమీ విశ్వదాభిరామ వినుర వేమ.
candam erigi mATa cakkagA ceppina evvaDaina mATa mArikEla paluku
canda meringi yunDu sandarbha merugumI viSvada abhirAma vinura vEma.

யாருக்காவது ஏதாவது மனதில் உறைக்கும்படியாக உபதேசம் பண்ணவேண்டு மானால் அந்த உபதேசம், அறிவுரையானது, எளிமையாக, எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் குட்டியாக இருக்கவேண்டும். அப்போது தான் அவன் ”ஆஹா நான் இதை அறிந்துகொண்டேன். அப்படியே செய்வேன்” என்று ஏற்றுக்கொள்வான்.    இன்னொரு சமாச்சாரம். நீ யாருக்காவது அறிவுரை வழங்கும்போது அவன் அதை ஏற்றுக்கொள்ள, கேட்டுக்கொள்ளும் மன நிலையில் இருக்கிறானா, சந்தர்ப்ப சூழ்நிலைகள் உச்சிதமாக இருக்கிறதா என்று வேறு பார்க்கவேணும். அவசரமாக ஆபிஸ் லேட்டாகிவிட்டது என்று பஸ்ஸில் ஓடுபவனுக்கு கீதை ஞான யோகம் சொல்லட்டுமா என்றால்….!

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *