VEMANA SATHAKAM .2 J K SIVAN

தேனான  வேமனா 2  –  நங்கநல்லூர்  J K   SIVAN தேனான  வேமனா  –  நங்கநல்லூர்  J K   SIVAN

நாம்  மறக்கக் கூடாத ஒரு  உண்மை  என்ன?  ஒரு தேசத்தின் முன்னேற்றத்துக்கு உயிர் நாடி அதன் கிராமங்கள். சில வசதிகளுக்காக ஏற்பட்டவை பட்டினங்கள். அங்கே வேலை, உத்யோகம், நீதி மன்றம், வங்கிகள், பெரிய பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் எல்லாம் ஒவ்வொன்றாக தோன்றின. இதெல்லாம் வெள்ளைக்காரர்கள் வந்த பிறகு வந்த மாற்றங்கள்.  நாம் நமது சௌகர்யங்களுக்காக  க்ராமங்களை விட்டு  பட்டணத்தில் பிழைப்பை தேடி வந்தவர்கள்.  

பட்டணங்கள்   தோன்று  முன்பு  நாடு முழுதுமே சில்லறை, நடுத்தர பெரிய க்ராமங்களாகத்தான் திகழ்ந்தன. வேண்டிய படிப்பு அங்கேயே கிடைத்தது. முக்கிய உத்யோகம் விளைச்சல், பயிர்த்தொழில், விவசாயம். அதுவே சுபிக்ஷத்தின் அறிகுறி. மற்றது அதற்கு மேல் தேவைப்பட்ட சௌகர்யங்கள். சோம்பேறித் தனத்தை வளர்த்தவை.

ஒவ்வொரு வீட்டிலும் கிராமத்தில் பெரிய நெல் குதிர்கள், களஞ்சியங்கள் இருக்கும். அதில் தான் அறுவடை, சாகுபடியான நெல்லை சேமித்து வருஷமுழுதும் உணவு எல்லோருக்கும் தாராளமாக கிடைத்தது. மின்சாரம் தேவைப்பட வில்லை. அதனால் நெல்லை உரலில் இடித்து உமி நீக்கி அரிசியாக முறத்தில் புடைத்து சமைத்தார்கள். கைக்குத்தல் அரிசி உடலுக்கு நல்லது என இன்று யாரோ ஒரு   வெள்ளை கோட்டு  டாக்டர் சொல்லி நாம் அறிகிறோம்.

நமது தமிழில் தவிர, பிறமொழிகளில் உள்ள அற்புத படைப்புகளை நான் நெல் களஞ்சியங் களாக அள்ள அள்ள குறை யாதவைகளாகக் கருதி இந்த கட்டுரை எழுதுகிறேன். இன்று ஒரு கைப்பிடி அதில் எடுத்து கொடுப்பது தான்  தேனான  வேமனா.  நமது இலக்கிய களஞ்சியத்தில் தமிழ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, சமஸ்க்ரிதம், ஆங்கிலம் எல்லாமே இருக்கும். எல்லாமே மணிகள். ஆகவே எப்போதாவது ஒரு கைப்பிடி எடுத்து அனுபவிக்கும் போது அது தமிழ் மணியாக த்தான் இருக்க வேண்டும் என்பதே இல்லை. ஆப்ரிக்க மொழிகளில் மணிகள் கிடைத்தாலும் நமது களஞ்சியத்தில் இடம் பெறும். இன்று தெலுங்கு சிக்கியது.தேனான வேமனா-வேமனா பாடியவைகளுள்  நாம்  இப்போது அறிவது வேமனாவின்  சாதகத்தில் 146  பாடல்களில்  சில முக்கியமானவை மட்டுமே.

Anagananaga raga matisayilluchunundu…………..ఆనగననగ రాగ మతిశయిల్లుచునుండు
thinaga thinaga vemu tiyyanundu……………………………తినగ తినగ వేము తియ్యనుండు
sadhanamuna panulu samakuru dharalona……………….సాధనమున పనులు సమకూరు ధరలోన
Viswadhaabhiraama, Vinura Vema………………………….విశ్వధాభిరామ, వినుర వేమ

அனக  னனக ராக மதி சயிலுச்சுனுண்டு தினக தினக  வேமுதீய நுண்டு
சாதனமுன பனுலு சமக்கூறு தரலோன விச்வதாபி ராம வினுர வேமா !

நானும் பாடுகிறேன் என்று திடீரென்று ஒருநாள் பாத்ரூமில் ஞானம் வந்து பாடமுடியாது. ” எவண்டி உன்னை பெத்தான், கையிலே கிடைச்சா செத்தான்” வேண்டுமானால் பாடவரும். கலிகால கவிஞனின் பாடல்கள் இவை. மஹான்கள் சிந்தனையே வேறு.   அது இசையில் இறைவனை காண வழி வகுக்கும். நாத உபாசனை. அப்படிப்பட்ட கீர்த்தனைகளை, பாடல்களை, பாசுரங்களை, மனம் கனிந்து பக்தியோடு கேட்டு பாடினால் தான் பாட வரும்.  பாடு பாடிக்கொண்டே  இரு.பழகப்  பழக  தான் ராகம். அப்போது தன   உனக்கு  ராகம்  பாடவரும்.  கசப்பான வேப்பிலையைக் கூட  கொஞ்சம் கொஞ்சமாக  விடாமல்  சாப்பிட்டுக்கொண்டே  வா.  வாயில் வைத்தாலே  குமட்டிக்கொண்டு வரும் அளவு கசப்பாக  தான் இருக்கும்.  பிறகு  சாப்பிட  அது  பழகிவிடும்  மட்டுமல்ல  இனிக்கவும்  ஆரம்பிக்கும். இது  எதுக்காக சொல்கிறார்  வேமனா தெரியுமா?  என்ன  கஷ்டமான  காரியமாக இருந்தாலும்  விடாமல்  செய்து வந்தால்  அது எளிதாகிவிடும். த்யானம்,  ஜபம், எல்லாம்  இதுபோல் தான்.  சாதகம்  தான் மனதில்  லட்சியமாக  இருக்கவேண்டும்  என்கிறாரோ?  பாடப் பாட தான் ராகம் வரும். கசப்பான வேப்பிலையைக்கூட மேலே மேலே மென்று தின்றால் அதுவே இனிக்கும் அல்லவா? அதுபோல தான் வாழ்க்கையிலும் விடாத சாதகத்தில் மெய்ப்பொருள் கைகூடும் என்கிறார் வேமனா.

Kanaka mrugamu bhuvini kadhu Ledhanakanu…..కనక మృగము భువిని కలదు లేదనకను
Tharuni veedi chaniye DhaasharathuDu…………………….తరుణి వీడి చనియె దాశరధుడు
Budhi Lenivaadu Dhevudetlaayaraa……………………….బుద్ధిలేనివాడు దేవుడెట్లాయెరా?
Viswadhaabhiraama, Vinura Vema………………………….విశ్వధాభిరామ, వినుర వేమ

“தங்கமான்  எங்கேப்பா இருக்கு? பாவம்  ராமன் மனைவியை   விட்டு  மானை  ஏன்  தேடினான். மாயை  எவ்வாறு  கஷ்டங்களை  எல்லாம்   அவனுக்கே  தந்தபோது  நாம் எங்கே தப்புவது?”

Gangi govu paalu garitadainanu chaalu……………….గంగి గోవు పాలు గరిటడైనను చాలు
Kadivedainanemi kharamu paalu……………………….కడివెడైననేమి ఖరము పాలు
Bhakti kalugu koodu pattedainanu chaalu…………….భక్తి కలుగు కూడు పట్టెడైనను చాలు
Viswadhaabhiraama, Vinura Vema………………………విశ్వధాభిరామ, వినుర వేమ

க³ங்கி³ கோ³வுபாலு க³ரிடடை³னநு சாலு கட³வெடை³னநு நேமி க²ரமுபாலு
ப⁴க்திகல்கு³கூடு³ பட்டெடை³னநு சாலு விஶ்வதா³பி⁴ராம வினுர வேம! ॥ 128 ॥

“ஒரு உத்ரணி சுத்தமான காராம்பசுவின் பாலுக்கு ஒரு குடம் கழுதையின் பால் ஈடாகுமா? . அன்பாக உபசரித்து உண்மையான பாசத்தோடு ஒரு கரண்டி சாதம் போதுமே, “இந்தா கொட்டிக்கோ” என்று மனதில் நினைத்துகொண்டு ஒரு வாழை இலை நிறைய விருந்து வைப்பதால் ஒரு பயனுமில்லை.  மனஸை  புண் படுத்தி  வயிற்றை நிரப்ப முடியுமா?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *