VEMANA – J K SIVAN

தேனான  வேமனா  –  நங்கநல்லூர்  J K   SIVAN

வாசகர்களே, நீங்கள் தெலுங்கர்களா, அப்படியென்றால் உங்களுக்கு பக்த வேமனாவை  தெரிந்திருக்குமே?  இல்லையானால் கொஞ்சம் தெரிந்து  கொள்ளுங்கள்.
” ஓங்கோல்  தாலுக்காவில்,மூக சிந்தப்பள்ளி எனும் கிராமத்தில் கொண்டவீடு  என்ற சிற்றூர்,அதில் மேற்கு தெரு அவர் வாழ்ந்த  க்ஷேத்ரம்.   கண்டிகோடா  என்ற  அனந்தபூர்  க்ராமத்தியும் வாழ்ந்திருக்கிறார். 

கடப்பாவில் காதரப்பள்ளி என்ற ஊரில்  சமாதி அடைந்தவர்.    நாங்கள்  எல்லாம்  ரெட்டியார் ராஜ வம்சம்  என்று வேமனாவே  தனது பாடல்களில்  குறிப்பிடுகிறார். 

காகதீய  வம்ச ஆட்சிக்குப் பின்  ஆண்டவர்கள் ரெட்டியார்கள் .அட்டங்கி ,கொண்டவீடு,  ராஜமுந்திரி  என்ற ஊர்களில்  அவர்கள் ஆட்சி நிர்வாகம் தொடர்ந்தது. 

1950 ல் யாரோ  ஒரு வெள்ளையர்   எழுதிய ஒரு புத்தகம்  என்  வழியில் வந்தது.  அதைப் படிக்க   ஆரம்பித்தேன்.
நமது  நாட்டில்  ரிஷிகள்  எண்ணற்றவர்,  தவம் செய்  முனிவர்கள்  பலர், வேத சாஸ்திர விற்பன்னர்கள்
அனேகர்.  கற்றுணர்ந்த பண்டிதர்கள்   கணக்கற்ற வர்கள்.   இதில்  சேராத  இயற்கையிலேயே ஞானிகளாக  உலா  வந்தவர் விரல் விட்டு  எண்ணக்கூடியவர்கள். அவருள் பலரை  நாம்  முழுதும்   அறிந்து கொள்வதற்
குள் அவர்கள்  மறைந்து விட்டனர்.  அவர்களில்  ஒரே  ஒற்றுமை, அவர்கள்  முறைப்படி  கல்லாதவர்களோ  அல்லது  அன்றாட பேச்சு  வழக்கிலேயே மிக   உன்னத  தத்துவங்களை  உணர்த்தியவர்களோ   பலன்  எதுவும் எதிர்பாராமல்   விளம்பரம் தேடாமல்    அமைதியாக   நம்மில்  ஒருவராக  வாழ்ந்த வழி காட்டிகளோ,  பல  வேறு மொழிகளில்  தமது ஞானத்தை,  பொன் மொழிகளை,  தத்துவத்தை  சிந்தனை  முத்துக்களை   நமக்கு  ஊட்டியவர்கள்  என்ற  ஒன்றுதான்,    இருளைப்போக்கும் தீபங்கள்.  அவர்களில்  ஒருவரை   பற்றித்தான்  அந்த  புத்தகத்தில்  அறிந்தேன்  அதை  உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆவல்  அதிகரித்ததால்  இந்த செய்தி மடல் உங்கள்   கையில்.  

கிட்டத்தட்ட  700  ஆண்டுகளுக்கு முன்பு   வாழ்ந்த  ரெட்டியார்  வம்சத்தில்  உதித்த   பக்த வேமனா ஏறக்குறைய ஏழாயிரம் பாடல்களுக்கு   மேல் புனைந்தவர்  என்கிறார்கள்.  ஆனால்  கிடைத்தது  அவ்வளவு இல்லை.  எல்லாமே  எளிய அன்றாட,  கொச்சையான,  புரியும்படியான தெலுங்கில்,  வழக்கில்  உள்ளது.  லட்சோப லக்ஷம் தெலுங்கர்கள்,  படித்தவர்,  படிக்காதவர்  அனைவரின்  அன்றாட  வாழ்க்கையில்   பழமொழியாக,  வார்த்தைகளாக, சொல்லாக மிளிர்பவை வேமனாவின்  சொல்லோவி யங்கள்.    

 ஞானஸ்தர்களும் பண்டிதர்களும்   கூட கையாள விரும்புவது  இவையே.  இந்த  சிறு  சிறு   நல்வழிப்  பாடல்கள்  மக்களைத் திருத்தி  இறைவன் பால்  வழிகாட்டுபவனவாக  இன்றும்   நடைமுறையில் உள்ளதே  இவற்றின்  சிறப்பு .  

 கொண்டவீடு  என்ற  கிராமத்தில் ஜனனம்.   ரெட்டியார் கள் ஆண்ட காலம்.  அந்த   ராஜவம்சத்தைச் சேர்ந்தவரா யிருந்தாலும்   வேமனா ஒரு  எளிய  ஞானி.   மறைந்தது கத்தரப்பள்ளி  என்கிற ஊரில்.  அங்கு   வேமனாவின் சமாதி இன்னும்  உள்ளது.  ஒரு   தரம் அந்த  சமாதிமேல்  மின்னலோடு   இடி தாக்கி  சமாதியைப்  பிளந்தது.  அதிலிருந்து  வேமனா  ஒரு   பன்னிரெண்டு  வயதுள்ள பாலகனாக  தாக்கிய  இடி மின்னலைக் கையில்   பிடித்துக் கொண்டு  வெளிவந்து  மீண்டும்  அதனுள் ளேயே  சென்றார் என்று  ஒரு செய்தி  (நம்புவதா? வேண்டாமா?   என்பது உங்கள்  சித்தம்) . ஆனால்  பலர்  நம்புவதை நாமும்  நம்புவதால்  தவறு  ஒன்றுமில்லையே. மகான்களுக்கு எதுவும்  சாத்தியம்.  

வேமனாவின் பாடல்களில்   தர்ம  ஞாயம், நேர்மை,  வாழ்க்கை  நிலையில்லாமை,  பண்பாடு,  இடைவிடாத பக்தி,  உலக இயல், மக்களின்  எதிர்பார்ப்பு,  சகலமும்  அடங்கும்.   தூங்குபவனை  சாட்டையடி  கொடுத்து  எழுப்பி திசை திருப்புகிறதே  அவரது சக்தி  வாய்ந்த ரெட்டை  அடி கவிதைகள்!!  

ஒரு  ரெட்டை அடி  கவிதை  சொல்கிறது   “உன்னுள்ளே  இதயத்தில்  உயிரோட்டமுடன்  இருப்பவனை   எங்கோ சென்று  கல்லில்  தேடாதே.  அவன் உயிரில் இல்லாமல்  கல்லிலா இருக்க விரும்புவான்”  

 மற்றொன்று சொல்கிறேன்
” உள்ளத்தில்  மண்டிக்கிடக்கும் வண்டி  வண்டியான அழுக்கை நீக்காமல்  உ டலை வருத்தி  வாட்டி  யோகி யாவது   பாம்பை அடிக்கிறேன் என்று  புற்று மண்ணை  அடிப்பது போலவே”   

இன்னுமொன்று கூட  சொல்கிறேனே.

“இறைவா  உன்னைப்  பார்க்கையில் நான்  இல்லை.  என்னையே நினைத்துக் கொண்டு உன்னைப்  பார்க்கும்போது நீ  காணோம்.   எப்படி ஆற்றில்  ஒருகால் சேற்றில்  ஒருகாலாக  உன்னையும் என்னை யும்  நான்  ஒரு சேற  நான்  காண  இயலும்?”
 தர்மிஷ்டன்  யார்  என்று   சொல்கிறார்  ஒரு  ரெட்டை யடி  வாசகத்தில்.

” எவன்  கஷ்டப்பட்டு  தானியமெல்லாம்  பொருக்கி,  சேர்த்து, களைந்து,  இடித்து, பொடித்து,   சமைத்து , பசியோடு வாடுபவனுக்கு  உணவாக  போடுகிறானோ அவனைச்  சிவன்  என்றால் தப்பா”?

உப்பும்  கர்பூரமும்  பார்ப்பதற்குத்தான்  வெள்ளை.  அதனதன்  குணத்திலும் ருசியிலும் வடதுருவம்  தென் துருவம்  இல்லையோ? மக்களில் அவ்வாறே ஞானிகளும்  சூன்யங்களும்  வெளியே  பார்க்க ஒன்றாக இருப்பர்”
அருமையான தெலுங்கில்   சரளமாக இவற்றை  அனுப விக்க   நமக்கு தெலுங்கு   தெரியாதே!  பரவாயில்லை.  தெலுங்கை ருசிக்க முடியவில்லையானாலும்  அர்த்தத்தை   ரசிக்கலாமே   என்ற எண்ணத்தோடு   சிலவற்றை எனக்குத்  தெரிந்த எளிய   முறையில் எழுதியிருக்கிறேன்   ( மேலே கண்டவை போன்று)

 மேற்கொண்டு   நிறைய எழுத  வேமனாவின்  பொக்கிஷம்  அள்ள அள்ளக் குறையாது   கொட்டிக் கிடக்கிறதே.   தொடரட்டுமா?  தொடட்டுமா?
ஒவ்வொரு வருஷமும் புத்தாண்டில்  நிறைய பேர்  ஏதாவது  புதிதாக  ஒரு  பிரதிஞை எடுத்துக் கொள் வார்கள்.  இன்றிலிருந்து  மனைவியிடம்  அன்பாக  இருக்கிறேன்.என்று.  ரெண்டு நிமிஷம்  கூட   ஆகியிருக்காது  எலியும்  பூனையும் ஒன்றை  ஒன்று  விரட்டிக்கொண்டிருக்கும்.  சிகரெட் பிடிக்கமாட்டேன்,  சினிமா போக மாட்டேன்.  காலையில்  சீக்கிரம்  எழுந்து  கோவிலுக்கு  போவேன்,  

புத்தகத்தில் படித்தபடி மனைவி சமைத்த சமையல்  சரியில்லை என்றாலும்  முக மலர்ச்சியுடன்  உண்டு  வாழ்த்துவேன்.”.   இன்னும்  எத்தனை எத்தனையோ….   ஆனால்  இவை  யாவும்  பிரசவ  வைராக்கியம்,  ஸ்மசான  வைராக்கியம்  போல் என்றும்   நிறைவேறு வதில்லை .  வருஷங்கள்  தான்  வந்து போகும்.

நடுவில்  எத்தனையோ  வேறு  வேலைகளில் ஈடுபட்டி ருந்தாலும்  அடி மனத்தில்  வேமனாவை  விட்டு விட்டோமே  என்று உருத்திக் கொண்டே  இருந்தது. இன்று வடிகால் பிறந்து விட்டது. அவரைத் தேடி  கண்டுபிடித்து  சில  பொன் மொழிகளை  சம்பா திக்கவேண்டும்  அதை  பங்கிட்டுக்கொள்ள வேண்டும்  என்ற  அரிப்பு  இருந்து கொண்டே இருந்தது. சரி  கொஞ்சம்  ப்ரீ ஆனவுடன்  ஆரம்பிப்போம்  என்று ஒரு  எண்ணம். முயற்சி வீண் போகவில்லை.    

கரும்பு பற்றி  வேமனா  இனிப்பாக  சொல்வதிலிருந்தே  தொடங்குவோம்.

”அல்பபுத்திவானி   கதிகாரமிச்சின   தொட்டவாரி னெல்ல  தொலககொட்டு செப்பு  தினெடி குக்க  சிறகு  தீப்பெருகுனா விச்வதாபி ராம வினுர வேமா !

அல்பனுக்கு பிரியாணிக்கு ஆசைப்பட்டு ஓட்டு  போட்டு  அதிகாரம் கொடுத்தால்  அவனிடமிருந்து  என்ன  கிடைக்கும். தன போன்றோர்க்கே நிழல் கொடுப்பான்.  அறிவீர் சிறந்தவர்களின்  அனுபவஸ்தர்களை விரட்டி யடிப்பான்.  இது இதுபோல தெரியுமா?   கரும்பை பக்கத்தில் பார்த்தாலும் அதை ஒதுக்கி  கிழிந்த செருப்பை கண்டதும் சந்தோஷமாக கடித்து  மெல்லும்   சொறிநாயின்  தன்மை போல.

அவன்  வேறென்ன செய்வான் என்பதையும்  வேமனா சொல்கிறார்:

அல்படைனவானி  கைதிக பாக்யமுகலக   தொட்டவாரி  திட்டி  தொலக  கொட்டு
அல்பபுத்தி வாடதிகுலனெருகுனா விச்வதாபி ராம வினுர வேமா !

உயர்ந்த படிப்பு, பொறுப்பு, ஞானம் இல்லாத ஒரு  அல்பன் திடீர் பணக்காரனாகிறான்.  உடனே  கர்வம் மண்டைக்கேறிவிடுகிறது.  சுலபத்தில் அனைவரையும்  பகைத்துக் கொள்கிறான். பணத்தினால்  எடைபோட்டு  மிகுந்த  அறிவாளிகளையும் க்னானிகலையுமெ  ஏசுவான். அவமதிப்பான் . அவனைப்புகழும் அல்பர்களின் சகவாசமே  அவனுக்கு சுகமளிக்கும்.  விரைவில்  அழிவான்.

அலனு  புடக புட்டி நப்புடே  க்ஷயமவுனு  கலனு  காஞ்சு லக்ஷ்மி கனுடலேது
இலனு போகபாக்ய   மீ   தீரே   கானுரு   விச்வதாபி ராம வினுர வேமா !

கடலைப்பார்க்கிறோம் .  பெரிய  அலைகள்  ஒன்றன் மேல் ஒன்றாக  எகிறி எழும்புகிறது.  அவற்றின் மகுடமாக  வெள்ளை  நுரை.  பார்க்குமிடமெங்கும்  தோன்றும் அந்த  வெண்ணிற நுரை  எங்கே போச்சு? அலை திரும்ப  சாதுவாக  கடலை நோக்கி  ஓடும் முன்பே  நுரை காணாமல் போகிறது.  கனவில்  கார், பங்களா, ப்ளேன் எல்லாம்  வாங்குகிறோம்.  கண் மூடித் தூங்கும்பொது  கனவு காணும்போது  தான்  அந்த  ஐஸ்வர்யம்.   கண்ணைத் திறந்தால் பழைய ஏழ்மை நிலை தான். கனவில் கண்ட  செல்வம் எங்கே  போச்சு?  எனவே  தான்  கிடைத்தபோது செல்வத்தை  நாமும் உபயோகித்து  மற்றோர்க்கும்  அளிப்பது. இலையேல்  அது   நுரை, கனவில் வந்த  கார்  தான்!!

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *