SURDAS – J K SIVAN

ஸுர் தாஸ்   –   நங்கநல்லூர்  J K   SIVAN
தீராத விளையாட்டு பிள்ளை.

ஸூர் தாஸுக்கு  தெரியாமல் பிருந்தாவனத்தில், கோகுலத்தில்,  எதுவும் நடந்து விட முடியாது. அத்தனையும் கண்ணால் படம் பிடித்து விடுவார்.  அவருக்கு தான் கண் பார்வை  பிறவியிலிருந்தே கிடையாதே என்று கேட்கவேண்டாம். அவர் காமிரா  அகக்கண்ணில் இருக்கிறது. அதன்  லென்ஸ் விலை மதிக்கமுடியாத சக்தி யுள்ள லென்ஸ். அதை எதுவும் ஏமாற்ற முடியாது.  வீடியோ காட்சிகள் தத்ரூபமாக  எடுக்கும்.  இதோ ஒரு வீடியோ காட்சி. 

பிருந்தாவனத்தில்  பெரிய  நந்தகோபன் அரண்மனையில்  யசோதை குமுறுகிறாள்.  கண்ணன் எவ்வளவு விஷமக்காரன் என்று முதலில் அனுபவித்தவள் யசோதை மட்டுமே. தாங்க  முடியாமல் ஓய்ந்து போய்  யசோதை  தோழிகளிடம் என்ன சொல்கிறாள் பாருங்கள். சூர் தாஸ் அதை கண்டு கேட்டு படம் பிடிக்கிறார்:
”இந்த  விஷமக்கார பயல் கிருஷ்ணனின் அம்மா தேவகிக்கு சேதி அனுப்புங்கள்.   என்னால் அவனை சமாளிக்க முடியவில்லை.  அவனுக்கு நான் வெறும் பால் கொடுக்கும் மெஷின், வேலைக்காரி,செவிலித்தாய்   மட்டும் தான்.  அவன் பண்ணும் விஷமங்களைப்  பற்றிய  விஷயங்களை லிஸ்ட் போட்டு கட்டுபிடி  ஆகாது.  குவா குவா பாபா  குளிக்க காசு கேப்பா  மாதிரி  அவனை குளிக்க வைக்க ரொம்ப சிரமப்படணும்.  அம்மா  தேவகி  உன்  ரௌடி பிள்ளை,  காலை விடிந்ததும் ரொட்டி  வெண்ணை எங்கே என்று தேடுவான்.  அவனைப் பிடித்து  தலையில் என்னை தடவி வாரி கொண்டை  போடலாம் என்று எண்ணெய்  சீப்பு கொண்டுவருவதைப் பார்த்ததும் ஒரே ஓட்டம் ஓடிவிடுகிறான்.  பல் தேய்க்க  பேஸ்ட்  என் கையில் தான் எப்போதும் இருக்கிறது. அவனைத்தேய்த்து  குளிப்பாட்ட வெந்நீர் பக்கெட்டில் நிரப்பி வைப்பதை பார்த்தால் போதும்.   நைசாக எங்கோ கண்ணுக்கு தெரியாமல் நழுவி விடுகிறான்.   சிட்டாக  பறந்துவிடுகிறான். இத்தனைக்கும் அவன் கேட்டதையெல்லாம் நான் உடனே கொடுத்து விடுகிறேன். அப்படியும் உன் பிள்ளை நான் சொன்னதைக்  கேட்பதில்லை.  ரொம்ப தாஜா  பண்ணி, ஒருவழியாக சமாளித்து  அவனை எப்படியாவது குளிக்க வைப்பதற்குள்  நான் படும் பாடு  எழுத்தில் எழுத முடியாது, சொல்ல வார்த்தையில்லை அம்மா தேவகி. ஒருவேளை அவனுக்கு குளிக்க வெக்கமா? என்று கேட்டால்  அதற்கும் பதில் தெரியாது எனக்கு.   அவன் வெட்கப்படும் ஆள்  இல்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் தேவகி அம்மா.  ஆமாம். கிருஷ்ணன் என் கண்ணின் மணி.  அந்த மோஹனனை பார்க்காமல் என்னால் ஒரு கணம் கூட இருக்க முடியவில்லை அம்மா..”

Tell my message to Devaki.I’ve been just a nursemaid
for your son, still,
keep me in favor.
Even though you may be now know his habits,
still I repeat.
Your son Kanha,
loves the bread and butter
in the morning.
He runs away if
he sights
oil, paste or warm water.
Whatever he demanded
I gdve him,
and only slowly, gradually,
could he be bathed.

0 traveller, listen, day and night
1 have great worry in my heart,
Mohan, the apple of my eye,
must be feeling very bashful.
So sings Surdas.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *