SUR SAGARAM – J K SIVAN

ஸூர் ஸாகரம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN

யாரப்பா  கண்ணப்பா நீ!

பிருந்தாவனத்தில் கோபியர்கள்  புடைசூழ  கண்ணன் விளையாடுகிறான்.  ஒருநாள் அவர்களில் சிலர் அவனை கேள்விகள் கேட்டகிறார்கள் அவன் பதில் சொல்கிறான்….கிருஷ்ணனுக்கு  ஆச்சர்யம்  மட்டுமில்லை ஆனந்தமும் கூட… ”அட  என்னைப்பற்றி எல்லாமே  தெரிந்திருக்கிறதே. ரஹஸ்யம் எப்படி  வெளியே இவ்வளவு சுலபமாக  எல்லோர்  காதையும்  அடைகிறது!ஸூரதாஸ் பாட்டு மூலம்  எப்படியோ பிரிந்தாவனத்தில் கிருஷ்ணனுக்கு அவன் யார், எங்கே பிறந்தவன், எங்கே வந்தவன், வளர்ந்தவன் என்றெல்லாம் விஷயம்  கசிந்து விட்டதை  அறிகிறோம்.   கிருஷ்ணன் காதுக்கும் அது எட்டி விட்டது. இப்போது கிருஷ்ணன்  சரமாரியாக  என்ன கேட்கிறான் பாருங்கள்  கோபியரிடம்.  ஸூர்தாஸ்  கற்பனை அபாரம்:
”ஓஹோ   உங்களுக்கு  என் அம்மா யார், அப்பா யார் என்று தெரியவேண்டுமா?
”நான்  எங்கே எப்போது பிறந்தேன் என்று நீங்கள்  கண்ணால் பார்த்தீர்களா?உங்கள் பேச்சு எனக்கு  விளையாட்டாக  தான் தோன்றுகிறது, சிரிப்பு வருகிறது.  நான் எங்கே என்று எப்போது எவரிடம்  வெண்ணெய்  திருடினேன்? தின்றேன்?
என் அம்மா என்னை கட்டிப்போட்டாள்  என்கிறீர்களே, அது எப்போது?  யார் என் தாய்?எந்த  பசுக்களை, எவருடைய பசுக்களை நான்  மேய்த்தேன்? பால் கறந்தேன்?எந்த பசுக்களிடம் பால் குடித்தேன்?என்ன சொன்னீர்கள்?  நான் நந்தகோபன் குமாரனா?? யார்  நந்தகோபன்?எங்கிருந்து வந்தவன்?நான் தான்  யாதுமானவனாயிற்றே. அழிவில்லாதவனாயிற்றே, என் மாயையால் சகலமும்  தோற்றமாக  காட்சியளிக்கிறது. இயங்குகிறது.   எல்லோரையும் மயங்கச் செயகிறது…..என்னைப்பற்றி எல்லா உண்மை விஷயங்களும் தெரிந்தவர்களா  நீங்கள்?

( கிருஷ்ணன் கேட்பது ரொம்ப சரி, ஆதி அந்தமில்லாதவனுக்கு யார்  தாய், யார் தந்தை,  எங்கே எப்போது பிறந்தான்? ஜனனம் மரணம் இல்லாதவன் எப்போது எங்கே பிறந்தான்?  எதற்கு  அவன் வெண்ணை திருடவேண்டும் திங்க வேண்டும், எல்லாமே அவனிடமிருந்து  விளைந்தது என்றபோது எவருடைய  வெண்ணையை  கிருஷ்ணன் திருடினான்?  பிரபஞ்சம் வானிலிருந்து உருவானது என்றபோது அந்த விஸ்வரூபனை எவர் கட்டிப்போட முடியும்…..)

கிருஷ்ணன் பேச்சை கேட்டு  கோபியர்கள்  விழுந்து விழுந்து சிரித்தார்கள்.  என்னமாக  நாம்  சொன்னதற் கெல்லாம் என்னென்னவோ உளறிக்கொண்டு ஒன்றுமே  தெரியாதவனாக  நடிக்கிறான்  பாரடி, இந்த கிருஷ்ணன். அவன் நடிப்பும் பேச்சும் கூட  நம்பும்படியாக  இருக்கும்படி  இருக்கிறதே. அதனால் தான் கிருஷ்ணன் மேல் அல்லது பிரியம் உண்டாகிறது.
”என்னடா  கிருஷ்ணா  அப்பா  அம்மாவையே  யார் அவர்கள், எந்த பசு, எங்கே மேய்த்தேன்  என்று எல்லாம் சிரித்து நடிக்கிறாய்.!” இன்றைய  விளையாட்டு ரொம்ப நன்றாக இருக்கிறது.நல்லபடியாக பொழுது போகிறது என்று மகிழ்ந்தார்கள்.
 ஸூர்தாஸ் பாடல்  யாருடைய  ஆங்கில மொழி பெயர்ப்பிலோ  தான் கிடைத்தது…

Who is my mother  and who is my father?
When did you see me being born?
I am amused at your prattle.
When did I steal the butter and eat it.
When did my mother tie me up?
Explain to me this.
Whose cows do I graze? Whose cows do I milk?
You say I am the son of Nanda, Where did Nanda come from?
I am Absolute, Unknowable, Indestructible
My maya deludes everyone.
Listening this all gopis smiled, amused.
 ‘Do you really know all these things? O Syam, how can you reject everyone
Even your father and your mother?’

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *