SUR SAGAR – J K SIVAN

ஸூர்ஸாகரம் – நங்கநல்லூர் J K SIVAN

எந்தனுள்ளம் தேடுதே..

இந்த பரந்த பூவுலகில் ஸ்வர்கபுரி ஏதாவது இருக்கிறதா? ஆஹா அப்படி ஒன்று இருந்தால் அது நிச்சயம் இந்த பிரிந்தாவனமாக தான் இருக்கவேண்டும். அதுவும் யமுனை நதிக்கரையில் இவ்வளவு பெரிய அடர்ந்த ஆலமரத்தின் அடியில் புல்லாங்குழல் ஊதிக்கொண்டிருக்கும் கண்ணன் அமரும் இடம் தான் அதன் சிகரமான இடம். வனம் என்றால் காடு என்று தானே அர்த்தம்? இந்த காட்டில் ஆனந்தம் தான் அடர்ந்து நிறைந்து காணப்படுகிறது. இந்த காட்டில் துள்ளித் திரிபவர்கள் ராதையும் மற்ற கோபியரும் தான். அவர்களோடு கை கோர்த்து நேரம் போவது தெரியாமல் ஆடுவது தான் ராஸலீலை, ராசா க்ரீடை. ஒரு நாள் தப்பினாலும் கிருஷ்ணனோடு ராஸக்ரீடை இல்லாமல் கோபியர்கள் புழுவாய் துடிப்பார்களே. அவர்களிடமிருந்து அவன் எப்படி தப்புவது? கண்ணனைக் காணாமல் கண்ணீரும் கம்பலையுமாக கோபியர்கள் மரமே நீ கண்டையோ? செடியே நீ பார்த்தாயோ? என்று பிரிந்தாவன அரண்யத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் கண்ணனைத் தேடுவார்கள். அவன் மாயா ஜாலக்காரன். எங்காவது சத்தம் போடாமல் ஒளிந்து கொண்டிருப்பவன். வழியில் எல்லாம் தேடுவார்கள். கோபியர்கள் பிரிவை கண்ணனாலும் தாங்க முடியாதே. ஸூர் தாஸ் பாடும் கருமை நிற ஷ்யாமகிருஷ்ணன் ”என் மனம்,என்னிதயம்,கோபியரையும், அவர்களோடு சேர்ந்து ஆடும் ராச க்ரீடையையும் நாடுகிறதே, தேடுகிறதே” என்று விம்முகிறது என்கிறான். ஆஹா என்ன அற்புதமான பக்தி ரஸனை ஸூர் தாஸருக்கு !

Kahan Sukh Vraj Ko So Sansar.
Kahan Sukhad Vanshivat Yamuna, Yah Man Sado Vichar. [1]
Kahan Banadham Kahan Radha Sang, Kahan Sang Vrajabam.
Kahan Ras Raas Bich Antar Sukh Kahan Naari Tan Taam. [2]
Kahan Lata Taru Taru Prati Bujhani, Kunj Kunj Nav Dham.
Kahan Virah Sukh Binu Gopin Sang, Surashyam Man Kam. [3]
– Shri Surdas

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *