SIVAAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM – J K SIVAN

சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம் 12 – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

12. चन्द्रोद्भासितशेखरे स्मरहरे गङ्गाधरे शङ्करे सर्पैर्भूषितकण्ठकर्णविवरे नेत्रोत्थवैश्वानरे । युगले
दन्तित्वक्कृतसुन्दराम्बरधरे त्रैलोक्यसारे हरे मोक्षार्थं कुरु चित्तवृत्तिमचलामन्यैस्तु किं कर्मभिः ॥ १२॥

Chandrod-bhaasita-shekhare smarahare gangaadhare shankare
Sarpair-bhuushhita-kantha-karna-yugale (vivare) netrottha-vaishvaanare
Dantitvak-krita-sundara-ambara-dhare trailokya-saare hare
Moksha-artham kuru chitta-vrittim-achalaam-anyaistu kim karmabhih., 12

சந்த்ரோத்பாஸிதசேகரே ஸ்மரஹரே கங்காதரே சங்கரே ஸர்ப்பைர் பூஷித கண்ட கர்ணவிவரே
நேத்ரோத்தவைச்வானரே!
தந்தித்வக்க்ருத ஸுந்தராம்பரதரே த்ரைலோக்யஸாரே ஹரே மோக்ஷ£ர்த்தம் குரு சித்த விருத்திமமலாம்
அன்யைஸ்து கிம் கர்மபி!!

என் அப்பனே, பரமேஸ்வரா, நீ பிறைசூடி, சந்திர சேகரன். உன் சாந்தமான தியானத்தில் ஒளிரும் முகத்துக்கு தலையில் உள்ள குளிர்ந்தகாரணங்களை வீசும் சந்திரன்… ஆஹா என்ன ஒரு அற்புத ஜோடி… நீயா மன்மதனை எரித்த கோப முகன். உன் கோபம் அடங்க தான் ஒரு பக்கம் குளிர்ந்த சந்திரன், இன்னொரு பக்கம் ஜில்லென்று பனி உருகி ஓடும் கங்கை. நீ கங்காதரன் அல்லவா? பக்தர்களுக்கு உன்னைகாட்டிலும் குளிர்ந்த அருள் தர முடியும்? உன்னை எவரும் அணுகமுடியாமல் உன் காதிலும் தலையிலும் கழுத்திலும் கையிலும், மார்பிலும் சுற்றிக்கொண்டிருக்கும் நாகங்களை நாகா பரணமாக அணிந்த நாகேஸ்வரன் நீ. நெற்றிக்கண்ணில் அக்னி முப்புரத்தையும் எரிக்க கூடிய சக்தி வாய்ந்தவன்.
யானைத்தோலை ஆடையாக இடையில் அணிந்த பொன்னார் மேனியனே, நீ புலித்தோலையும் மாற்றி மாற்றி அணிபவன். த்ரிலோகங்களுக்கும் அதிபதி நீ. உன்னை நினைக்காத எனக்கு எந்த வழியும் தெரியவில்லையே. வழிகாட்டப்பா வைத்தியநாதா. என் தவறுகளை மன்னித்து அருள் வாய்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *