SIVAAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM 10 – J K SIVAN

சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம் 10 – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

10 स्थित्वा स्थाने सरोजे प्रणवमयमरुत्कुम्भके (कुण्डले) सूक्ष्ममार्गे शान्ते स्वान्ते प्रलीने प्रकटितविभवे ज्योतिरूपेऽपराख्ये ।
लिङ्गज्ञे ब्रह्मवाक्ये सकलतनुगतं शङ्करं न स्मरामि क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्रीमहादेव शम्भो ॥ १०॥

Sthithwa sthane saroje, pranavamaya-marut-Kundale sookshma-marge, Shanthe swanthe praleene, prakatitha-vibhave, Jyothi rope parakhye,
Lingagne brahmavakye, sakala-thanu-gatham, Sankaram na smarami, Kshantavyo me aparaadhah, Shiva Shiva Shiva bho Shrii Mahaadeva Shambho., 10

ஸ்தித்வா ஸ்தானே ஸரோஜே ப்ரணவமய மருத்கும்பிதே ஸ¨க்ஷ்மமார்கே சாந்தேஸ்வாந்தே ப்ரலீனே ப்ரகடிதவிபவே திவ்யரூபே சிவாக்யே!
லிங்காக்ரே ப்ரஹ்மவாக்யே ஸகலதனுகதம் சங்கரம் ந ஸ்மராமி க்ஷந்தவ்யோமேsபராத:சவ சிவ சிவ போ: ஸ்ரீமஹாதேவ சம்போ!!

எத்தனையோ பேர் தினமும் கொஞ்சநேரமாவது தனிமையில் அமர்ந்து மனம் ஒடுங்கி பகவான் மேல் தியானம் பண்ணு என்று சொல்கிறார்கள், எழுதுகிறார்கள், உபதேசிக்கிறார், நாமும் அப்படிப் பண்ணலாமே என்று சில வினாடிகளாவது நினைக்கிறோம். ஆனால் அதை செயல்படுத்த ஏனோ முடியவில்லை.

அமர்வது என்பது சப்பணம் போட்டு இரு கால்களையும் மடக்கி முதுகு எதிலும் சாயாமல் நிமிர்ந்து தலைஉயர்த்தி கண் மூடி அசையாமல் உட்கார்ந்து பகவானை நினைப்பது.

ஆதி சங்கரர் எப்போதுமே அப்படி தியானத்தில் இருப்பவர் என்ன சொல்கிறார் பாருங்கள்.

”ப்ரணவ மயமான காற்றடைத்த சூக்ஷ்மமார்கத்தில் திவ்ய சிவஸ்வரூப நிலையில் மனம் ஒடுங்கி லிங்க ஸந்நிதியில் அனைத்து உயிரினத்திலும் ஊடுருவி நிற்கும் ஸ்ரீ சங்கரனை நான் நினைக்கவே இல்லையே ? இந்த அபராதத்தை பொருட்படுத்தாது என் மேல் அருள் கொண்டு என்னை மன்னிக்கவேண்டும் நீ பரமேஸ்வரா.”

உண்மையில் அவர் மன்னிப்பு கேட்பது அவருக்காக இல்லை. தவறு செய்யும் நமக்காக தான்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *