SUR SAGARAM – J K SIVAN

ஸூர் ஸாகரம் – நங்கநல்லூர் J K SIVAN

வெள்ளம் வடிய நீ வா……

நமது பாரத தேசத்துக்கு தெற்கே மூன்று பக்கமும் சமுத்ரம், மேற்கே அரபிக்கடல், கிழக்கை வங்காள விரிகுடா, தெற்கு முனையில் ஹிந்து மஹா சமுத்திரம். வருஷா வருஷம் இந்த தேசத்துக்கு ரெண்டு பருவ மழைகள் தவறாமல் அளவற்ற நீரை பொழிந்து போஷிக்கின்றன. மேற்கே தென்மேற்கு பருவக்காற்று தரும் மழை, கிழக்கே வடகிழக்கு பருவ மழை தரும் பரிசு.
ஆனால் பிருந்தாவனத்தில், வ்ரஜபூமியில் தினமும் அளவற்ற மழை வெள்ளம். அட அப்படியா? என்று கேட்காதீர்கள். ஒவ்வொரு கோபியின் கண்ணிலும் கண்ணீர் வெள்ளம் எப்போதும் பொங்கி வழிகிறதே. ஏன்? ஷியாம் பிருந்தாவனத்தில் இல்லையே. வேறென்ன காரணம் வேண்டும்?
அவன் மதுராவுக்கு சென்று விட்டானே.
கண்ணீர் வெள்ளம் ஏன் கருப்பாக ஓடுகிறது?
ஓஹோ கண் மை கரைந்து தான் எல்லா பெண்கள் கண்ணிலும் கருப்பு நீரோ?
கண்ணீர் வழிந்து ஒவ்வொருத்தியின் கன்னமும் கரு நிறமாக காட்சி தருவதை பார்த்தீர்களா?
கன்னத்திலிருந்து வழிந்த நீர் வெள்ளம் அவர்கள் மேலாடையை எல்லாம் தொப்பலாக ஈரமாக நனைத்து, அவர்கள் எப்போதும் குளித்துக்கொண்டு இருக்கிறார்களே.
கால்கள் துவண்டு போய் நடக்கமுடியாமல் தள்ளாடுகிறார்களே.
வெள்ளத்தில் சிக்கினால் எப்படி நடக்கமுடியும்?

நான் ஸூர் தாஸ் கத்துகிறேனே காதில் விழுகிறதா?
வ்ரஜபூமி கொஞ்சம் கொஞ்சமாக கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டே வருகிறதே.
கிருஷ்ணா வா, வந்து எண்களைக் காப்பாற்று அப்பனே.
நீ வந்தால் தான் இந்த வெள்ளம் வடியும்,.. வா வா வா…

निसिदिन बरसत नैन हमारे।
सदा रहत पावस ऋतु हम पर, जबते स्याम सिधारे।।
अंजन थिर न रहत अँखियन में, कर कपोल भये कारे।
कंचुकि-पट सूखत नहिं कबहुँ, उर बिच बहत पनारे॥
आँसू सलिल भये पग थाके, बहे जात सित तारे।
‘सूरदास’ अब डूबत है ब्रज, काहे न लेत उबारे॥

Nis din barsat nain humare
Sada rehat paavas ritu humpe jabthe shyam sidhare
Anjan thir na rahath akhiyan mein, Kar kapol baye kare
Kannchuki pat sukhat nahi kabahum, Ur bich bahat panare
Ansoo salil bhaye pag thake Bahe jaath sith thaare
Surdas ab dubath hai braj Kahen na leth ubaare

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *