SIVAAPARAADHAKSHAMAAPANA STHOTHRAM. J K SIVAN

சிவாபராத க்ஷமாபணஸ்தோத்ரம்- நங்கநல்லூர் J K SIVAN
”நின்னை நினைக்காத என்னை மன்னித்து விடு”.
ஸ்லோகம். 1
ஆதி சங்கரரின் மனதில் சதா சர்வகாலமும் பகவான் குடியிருந்தார். உலக க்ஷேமம் ஒன்றே அவர் கோட்பாடு. கோரிக்கை. 32 வயதில் அவர் சாதித்ததை 300 ஜென்மத்திலும் எவராலும் நெருங்கக் கூட முடியாது. மகாதேவா, சம்போ, உன்னை நான் பிறந்தது முதல் நினைத்துப்பார்க்கவே இல்லையே, எத்தனையோ காரியங்கள் பண்ணினேன். என்னை மன்னித்து அருள்புரிவாயா என்று சில ஸ்லோகங்கள் . வெகு அற்புதமானவை. எத்தனை பேர் படித்திருக்கிறீர்கள்? படித்தவர்கள் இன்னொரு முறையும், படிக்காதவர்கள் என்னோடு சேர்ந்தும் படிக்க வாருங்களேன். கொஞ்சம் புண்யம் தேடிக்கொள்வோம்.

1. आदौ कर्मप्रसङ्गात्कलयति कलुषं मातृकुक्षौ स्थितं मां विण्मूत्रामेध्यमध्ये क्वथयति नितरां जाठरो जातवेदाः ।
यद्यद्वै तत्र दुःखं व्यथयति नितरां शक्यते केन वक्तुं क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्रीमहादेव शम्भो ॥ १॥

Aadau karmaprasangaat, kalayati kalushham, maatrikukshau-sthitam maam, Vin-muutraa-medhya-madhye, kathayati nitaraam, jaatharo jaatavedaah,
Yadyadvai tatra duhkham, vyathayati nitaraam, shakyate kena vaktum, Kshantavyo me aparaadhah, Shiva Shiva Shiva bho Shrii Mahaadeva Shambho., 1

1.ஆதௌகர்மப்ரஸங்காத் கலயதிகலுஷம் மாத்ருகுªக்ஷளஸ்திதம்மாம் விண் மூத்ராமேத்யமத்யே க்வதயதிநிதராம்ஜாடரோ ஜாதவேதா: !
யத்த்வை தத்ரது:கம் வ்யதயதி நிதராம்சக்யதேகேந வக்தும் க்ஷந்தவ்யோ மேsபராத:சிவ சிவ சிவ போ:ஸ்ரீமஹாதேவ சம்போ !!

மஹா தேவா, நான் ஒரு பெண்ணின் கர்ப்பத்தில் உருவானதே என் பூர்வ ஜென்ம கர்ம வினைப்பயன். மல ஜலங்கள் தாயின் வயிற்றில் இருந்தாலும் நானும் அதோடு தானே இருந்தேன். காரிருள். வெளிச்சமே இல்லாத நிலை. உஷ்ணம். ஜீரணசக்திக்காக கபகபவென்று என் தாயின் வயிற்றில் உஷ்ணம், அமிலங்கள், அதோடு நானும் 10மாதம் குடியிருந்தேன். நான் பட்ட கஷ்டங்களை கூறமுடியாத நிலை, கத்திகதறி நான் கூவினாலும் எவர் காதிலும் விழாத நிலைமை. பிறந்ததும் எல்லாவற்றிற்கும் சேர்த்து வைத்து அழுதேன். அது தான் என் முதல் வேலை. மகாதேவா, சம்போ, என் தவறுகளை பொருட் படுத்தாது,என்னைமன்னித்தருள் பகவானே.
TO CONTINUE

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *