VIVEKA CHOODAMANI SLOKAS 81-95 – J K SIVAN

விவேக சூடாமணி – ஸ்லோகங்கள் 81-95 நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

विषमविषयमार्गैर्गच्छतोऽनच्छबुद्धेः var विषयमार्गेगच्छतो प्रतिपदमभियातो मृत्युरप्येष विद्धि । var प्रतिपदमभिघातो मृत्युरप्येष सिद्धः . हितसुजनगुरूक्त्या गच्छतः स्वस्य युक्त्या प्रभवति फलसिद्धिः सत्यमित्येव विद्धि ॥ 81॥

viṣamaviṣayamārgairgachChatō’nachChabuddhēḥ (pāṭhabhēdaḥ – viṣayamārgē gachChatō) pratipadamabhiyātō mṛtyurapyēṣa viddhi । (pāṭhabhēdaḥ – pratipadamabhighātō mṛtyurapyēṣa siddhaḥ) hitasujanagurūktyā gachChataḥ svasya yuktyā
prabhavati phalasiddhiḥ satyamityēva viddhi ॥ 81॥

81. விஷமவிஷயமார்கை³ர்க³ச்ச²தோऽநச்ச²பு³த்³தே:⁴ var விஷயமார்கே³ க³ச்ச²தோ ப்ரதிபத³மபி⁴யாதோ ம்ரு’த்யுரப்யேஷ வித்³தி⁴ । var ப்ரதிபத³மபி⁴கா⁴தோ ம்ரு’த்யுரப்யேஷ ஸித்³த:⁴ ஹிதஸுஜநகு³ரூக்த்யா க³ச்ச²த: ஸ்வஸ்ய யுக்த்யா ப்ரப⁴வதி ப²லஸித்³தி:⁴ ஸத்யமித்யேவ வித்³தி⁴ ॥ 81॥

81. இந்த உலகத்தில் தான் அனுபவிக்கும் அல்ப சுகங்களை சாஸ்வதம், அவை தான் வாழ்க்கை லட்சியமென்று என எண்ணுபவன் ஸர்வ முட்டாள். எந்த நேரமும் அவனை மரணம் இதிலிருந்து பிரித்துவிடும் என்று உணராதவன். குருவை நாடி, அவர் உபதேசத்தின் படி புலன்களையும் அவற்றால் விளையும் துன்பங்களையும் நன்கு அறிந்து திட சித்தத்துடன் சுயகட்டுப்பாட்டுடன் வாழ்பவன் புத்திசாலி. அவன் போகும் வழி நல்வழி, சுகத்தை அவன் தான் அடைபவன்.

82मोक्षस्य काङ्क्षा यदि वै तवास्ति त्यजातिदूराद्विषयान्विषं यथा । पीयूषवत्तोषदयाक्षमार्जव प्रशान्तिदान्तीर्भज नित्यमादरात्॥ 82॥
mōkṣasya kāṅkṣā yadi vai tavāsti tyajātidūrādviṣayānviṣaṃ yathā । pīyūṣavattōṣadayākṣamārjava- praśāntidāntīrbhaja nityamādarāt ॥ 82॥
மோக்ஷஸ்ய காங்க்ஷா யதி³ வை தவாஸ்தி த்யஜாதிதூ³ராத்³விஷயாந்விஷம் யதா² । பீயூஷவத்தோஷத³யாக்ஷமார்ஜவப்ரஶாந்திதா³ந்தீர்ப⁴ஜ நித்யமாத³ராத் ॥ 82॥

82. தம்பி, உனக்கு நற்கதி வேண்டுமா? மோக்ஷம் பெற விருப்பமா? எப்படி விஷத்தை கண்டால் தூர ஓடுவாயோ, அது போல் இந்த உலக வாழ்க்கை அல்பசுகங்களை காட்டி உன்னை ஈர்க்கும் புலன்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு. அவற்றை நெருங்க விடாதே. போதுமென்ற மனம், அன்பு, ஜீவராசிகளிடம் இரக்கம், கருணை, மறந்து மன்னிப்பது, நேர்மை, அமைதி, சுய கட்டுப்பாடு இவற்றை வளர்த்துக் கொள் . அப்புறம் என்ன. நீ தான் ராஜா.

83. अनुक्षणं यत्परिहृत्य कृत्यं अनाद्यविद्याकृतबन्धमोक्षणम् । देहः परार्थोऽयममुष्य पोषणे यः सज्जतेस स्वमनेन हन्ति ॥ 83॥
anukṣaṇaṃ yatparihṛtya kṛtyaṃ anādyavidyākṛtabandhamōkṣaṇam । dēhaḥ parārthō’yamamuṣya pōṣaṇē yaḥ sajjatē sa svamanēna hanti ॥ 83॥அநுக்ஷணம் யத்பரிஹ்ரு’த்ய க்ரு’த்யம் அநாத்³யவித்³யாக்ரு’தப³ந்த⁴மோக்ஷணம் । தே³ஹ: பரார்தோ²ऽயமமுஷ்ய போஷணே ய: ஸஜ்ஜதே ஸ ஸ்வமநேந ஹந்தி ॥ 83॥

83. ஆதி சங்கரர் ரொம்ப அழுத்தமாக தெளிவாக என்ன சொல்கிறார் தெரியுமா?
எவன் ஒருவன் எதை ஒருவன் அவசியம் தேடவேண்டுமோ, நாடவேண்டுமோ, அதை விட்டு விட்டு, அலக்ஷியத்தோடு, அதாவது அறியாமை, அஞ்ஞானத்திலிருந்து விடுபடவேண்டியதை விட்டுவிட்டு, இந்த உடம்பை பெரிதாக மதித்து, அது தான் நிஜம், சாஸ்வதம் என்று எண்ணி, நம்பி, அதை போஷாக்குடன் வளர்க்கிறானோ, அவன் தான் உண்மையில் பாவம், தற்கொலை செய்துகொள்கிறவன். என்கிறார்.

84. शरीरपोषणार्थी सन्य आत्मानं दिदृक्षति । दिदृक्षते ग्राहं दारुधिया धृत्वा नदीं तर्तुंस गच्छति ॥ ८४॥
śarīrapōṣaṇārthī san ya ātmānaṃ didṛkṣati । (pāṭhabhēdaḥ – didṛkṣatē)
grāhaṃ dārudhiyā dhṛtvā nadīṃ tartuṃ sa gachChati ॥ 84॥ (pāṭhabhēdaḥ – sa ichChati)ஶரீரபோஷணார்தீ² ஸந் ய ஆத்மாநம் தி³த்³ரு’க்ஷதி । தி³த்³ரு’க்ஷதே க்³ராஹம் தா³ருதி⁴யா த்⁴ரு’த்வா நதீ³ம் தர்தும் ஸ க³ச்ச²தி ॥ 84॥

84.இன்னொரு மறக்கமுடியாதபடி ஒரு உதாரணம் சொல்கிறார் சங்கரர். அப்படி உடம்பை சாஸ்வதமாக எண்ணி, ஞானத்தை அறிய முயற்சிக்காதவன், பாவம், வேகமாக ஓடும் நதியை கடக்க மரக்கட்டை என நினைத்து பசியோடு இருக்கும் முதலையின் வாலைப் பிடித்தவன் ” என்கிறார்.

85. स इच्छति मोह एव महामृत्युर्मुमुक्षोर्वपुरादिषु । मोहो विनिर्जितो येन स मुक्तिपदमर्हति ॥ ८५॥
mōha ēva mahāmṛtyurmumukṣōrvapurādiṣu ।
mōhō vinirjitō yēna sa muktipadamarhati ॥ 85॥
ஸ இச்ச²தி மோஹ ஏவ மஹாம்ரு’த்யுர்முமுக்ஷோர்வபுராதி³ஷு । மோஹோ விநிர்ஜிதோ யேந ஸ முக்திபத³மர்ஹதி ॥ 85॥

85. ஞானத்தை, பிரம்மத்தை தேடுகிறவனுக்கு இந்த உடம்பு, அது தேடும் உலக சுகம் எல்லாம் ப்ரயோஜனமற்றவை, மரணத்தை போன்றவை, என்று தெரிந்து விடும். சுதந்திரமாக அவனால் தனது பாதையில் முன்னேறமுடியும்.

86. मोहं जहि महामृत्युं देहदारसुतादिषु । यं जित्वा मुनयो यान्ति तद्विष्णोः परमं पदम्॥ ८६॥
mōhaṃ jahi mahāmṛtyuṃ dēhadārasutādiṣu । yaṃ jitvā munayō yānti tadviṣṇōḥ paramaṃ padam ॥ 86॥மோஹம் ஜஹி மஹாம்ரு’த்யும் தே³ஹதா³ரஸுதாதி³ஷு । யம் ஜித்வா முநயோ யாந்தி தத்³விஷ்ணோ: பரமம் பத³ம் ॥ 86॥

86. இதை உடம்பின் மீதுவைக்கும் பற்று இருக்கிறதே அது மரணத்துக்கு சமம். அதை வென்று, குழந்தை குட்டி, மனைவி குடும்பமென்றா அதன் அங்கங்களிலிருந்து விடுபடுபவன் சாக்சத் விஷ்ணுவின் திருப்பாதங்களை அடைபவன். ஞானிகள்,ரிஷிகள் மஹான்கள் அப்படி வெற்றி பெற்றவர்கள்.

87. त्वङ्मांसरुधिरस्नायुमेदोमज्जास्थिसङ्कुलम् । पूर्णं मूत्रपुरीषाभ्यां स्थूलं निन्द्यमिदं वपुः ॥ ८७॥
tvaṅmāṃsarudhirasnāyumēdōmajjāsthisaṅkulam ।pūrṇaṃ mūtrapurīṣābhyāṃ sthūlaṃ nindyamidaṃ vapuḥ ॥ 87॥ த்வங்மாம்ஸருதி⁴ரஸ்நாயுமேதோ³மஜ்ஜாஸ்தி²ஸங்குலம் । பூர்ணம் மூத்ரபுரீஷாப்⁴யாம் ஸ்தூ²லம் நிந்த்³யமித³ம் வபு: ॥ 87॥

87. இந்த உடம்பு உதாசீனப்படுத்தப்பட வேண்டியது. வெறும் தோல், நாற்றமெடுக்கும் சதை, ரத்தம், நரம்பு நாளங்கள், கொழுப்பு, ஜவ்வு, எலும்பு, மலஜல அருவருப்பு சீ. சீ இதற்கா இத்தனை மதிப்பு, துடைப்பக்கட்டைக்கு பட்டுக் குஞ்சலம்’ என்கிறார் ஆதி சங்கரர்.

88. पञ्चीकृतेभ्यो भूतेभ्यः स्थूलेभ्यः पूर्वकर्मणा । समुत्पन्नमिदं स्थूलं भोगायतनमात्मनः । अवस्था जागरस्तस्य स्थूलार्थानुभवो यतः ॥ ८८॥
pañchīkṛtēbhyō bhūtēbhyaḥ sthūlēbhyaḥ pūrvakarmaṇā । samutpannamidaṃ sthūlaṃ bhōgāyatanamātmanaḥ ।
avasthā jāgarastasya sthūlārthānubhavō yataḥ ॥ 88॥
பஞ்சீக்ரு’தேப்⁴யோ பூ⁴தேப்⁴ய: ஸ்தூ²லேப்⁴ய: பூர்வகர்மணா । ஸமுத்பந்நமித³ம் ஸ்தூ²லம் போ⁴கா³யதநமாத்மந: । அவஸ்தா² ஜாக³ரஸ்தஸ்ய ஸ்தூ²லார்தா²நுப⁴வோ யத: ॥ 88॥

88. கோபு, பாபு, ராமு என்று பெயர் கொண்டு, நாம் சீவி சிங்காரித்து, பட்டாடை உடுத்தி, பாதம் ஹல்வா சாப்பிடும் இந்த உடம்பு எப்போதோ செய்த்து நல்வினைப் பயனாக நமக்கு கிடைத்த அரிய பரிசு. நம் பூர்வ ஜென்மா கர்மங்களின் விளைவாக நம் உடல் நமக்கு அமைகிறது. உள்ளே இருக்கும் ஆத்மாவுக்கு உரை. விழிப்புநிலையில் நாம் காணும் மாயைகளை உண்மை என்று நம்புகிறோம்.

89. बाह्येन्द्रियैः स्थूलपदार्थसेवां स्रक्चन्दनस्त्र्यादिविचित्ररूपाम्। करोति जीवः स्वयमेतदात्मना तस्मात्प्रशस्तिर्वपुषोऽस्य जागरे॥ ८९॥
bāhyēndriyaiḥ sthūlapadārthasēvāṃsrakchandanastryādivichitrarūpām । karōti jīvaḥ svayamētadātmanā
tasmātpraśastirvapuṣō’sya jāgarē ॥ 89॥ பா³ஹ்யேந்த்³ரியை: ஸ்தூ²லபதா³ர்த²ஸேவாம் ஸ்ரக்சந்த³நஸ்த்ர்யாதி³விசித்ரரூபாம் । கரோதி ஜீவ: ஸ்வயமேததா³த்மநா தஸ்மாத்ப்ரஶஸ்திர்வபுஷோऽஸ்ய ஜாக³ரே ॥ 89॥

8. இந்த வகையில் உடம்பும் அதனுள் குடியிருக்கும் ஆத்மாவும் வெவ்வேறு. ஆத்மா ஜீவனாக ஸ்தூல சரீரம் அனுபவிக்கும் அல்ப சுகங்களை சாட்சியாக பார்த்துக் கொண்டிருக்கிறது. சந்தனக்குழம்பு, நறுமண மாலை அளிக்கும் சுகம் ஆத்மாவுக்கல்ல. அதற்கு இது தேவையுமில்லை. விழிப்புணர்ச்சியை மனிதன் நம்பி இருப்பது உடம்பைத்தான். அது தான் அவனை செலுத்துகிறது.

90, सर्वोऽपि बाह्यसंसारः पुरुषस्य यदाश्रयः । विद्धि देहमिदं स्थूलं गृहवद्गृहमेधिनः ॥ ९०॥
sarvō’pi bāhyasaṃsāraḥ puruṣasya yadāśrayaḥ ।
viddhi dēhamidaṃ sthūlaṃ gṛhavadgṛhamēdhinaḥ ॥ 90॥ஸர்வோऽபி பா³ஹ்யஸம்ஸார: புருஷஸ்ய யதா³ஶ்ரய: । வித்³தி⁴ தே³ஹமித³ம் ஸ்தூ²லம் க்³ரு’ஹவத்³க்³ரு’ஹமேதி⁴ந: ॥ 90॥

90. ஸ்தூல சரீரம் ஒரு வீடு. அதனுள் குடியிருப்பது ஆத்மா. வெளியுலக விஷயங்கள் அனைத்தும் உடம்பை தான் ஈர்க்கிறது.

91. स्थूलस्य सम्भवजरामरणानि धर्माः विवेकचूडामणिः ॥ स्थौल्यादयो बहुविधाः शिशुताद्यवस्थाः । वर्णाश्रमादिनियमा बहुधाऽऽमयाः स्युः पूजावमानबहुमानमुखा विशेषाः ॥ ९१॥
sthūlasya sambhavajarāmaraṇāni dharmāḥ sthaulyādayō bahuvidhāḥ śiśutādyavasthāḥ । varṇāśramādiniyamā bahudhā”mayāḥ syuḥ
pūjāvamānabahumānamukhā viśēṣāḥ ॥ 91॥
ஸ்தூ²லஸ்ய ஸம்ப⁴வஜராமரணாநி த⁴ர்மா: ஸ்தௌ²ல்யாத³யோ ப³ஹுவிதா:⁴ ஶிஶுதாத்³யவஸ்தா:² । வர்ணாஶ்ரமாதி³நியமா ப³ஹுதா⁴ऽऽமயா: ஸ்யு: பூஜாவமாநப³ஹுமாநமுகா² விஶேஷா: ॥ 91॥

91.பிறப்பு, உடலின் அழிவு, மரணம், இதெல்லாம் ஸ்தூல சரீரம் சம்பந்தமானவை மட்டுமே. அதில் தான் அவன் உடல் வளர்ச்சி, மாறுதல்கள், குழந்தை பருவம் போன்ற பல கால கட்டங்கள். இந்த உடம்பு தான் சகல வியாதிகளையும் அதன் உபாதைகளையும் அனுபவிக்கிறது. அது தான் வியாதி நிவாரணம், அவதூறு, தண்டனை , வழிபாடு போன்ற பல அனுபவங்களை பெறுகிறது.

92. बुद्धीन्द्रियाणि श्रवणं त्वगक्षि घ्राणं च जिह्वा विषयावबोधनात्। वाक्पाणिपादा गुदमप्युपस्थः var उपस्थं कर्मेन्द्रियाणि प्रवणेन कर्मसु॥ ९२॥
buddhīndriyāṇi śravaṇaṃ tvagakṣi ghrāṇaṃ cha jihvā viṣayāvabōdhanāt । vākpāṇipādā gudamapyupasthaḥ (pāṭhabhēdaḥ – upasthaṃ)
karmēndriyāṇi pravaṇēna karmasu ॥ 92॥ (pāṭhabhēdaḥ – pravaṇāni)பு³த்³தீ⁴ந்த்³ரியாணி ஶ்ரவணம் த்வக³க்ஷி க்⁴ராணம் ச ஜிஹ்வா விஷயாவபோ³த⁴நாத் । வாக்பாணிபாதா³ கு³த³மப்யுபஸ்த:² var உபஸ்த²ம் கர்மேந்த்³ரியாணி ப்ரவணேந கர்மஸு ॥ 92॥

92. காது, கண், சருமம், மூக்கு, நாக்கு இதெல்லாம் கருவிகள். விஷயானுபவங்களை உடம்பு அனுபவிக்க உதவுபவை. அதே போல் அவன் பேச்சு, கைகால்கள், அவன் செயல்களுக்கு காரணமானவை.

93. प्रवणानि निगद्यतेऽन्तःकरणं मनोधीः अहङ्कृतिश्चित्तमिति स्ववृत्तिभिः । मनस्तुसङ्कल्पविकल्पनादिभिः बुद्धिः पदार्थाध्यवसायधर्मतः ॥ ९३॥
nigadyatē’ntaḥkaraṇaṃ manōdhīḥ ahaṅkṛtiśchittamiti svavṛttibhiḥ । manastu saṅkalpavikalpanādibhiḥ buddhiḥ padārthādhyavasāyadharmataḥ ॥ 93॥
ப்ரவணாநி நிக³த்³யதேऽந்த:கரணம் மநோதீ:⁴ அஹங்க்ரு’திஶ்சித்தமிதி ஸ்வவ்ரு’த்திபி:⁴ । மநஸ்து ஸங்கல்ப விகல்ப நாதி³பி:⁴ பு³த்³தி:⁴ பதா³ர்தா²த்⁴யவஸாயத⁴ர்மத: ॥ 93॥

94. अत्राभिमानादहमित्यहङ्कृतिः । स्वार्थानुसन्धानगुणेन चित्तम्॥ ९४॥
atrābhimānādahamityahaṅkṛtiḥ ।svārthānusandhānaguṇēna chittam ॥ 94॥
த்ராபி⁴மாநாத³ஹமித்யஹங்க்ரு’தி: । ஸ்வார்தா²நுஸந்தா⁴நகு³ணேந சித்தம் ॥ 94॥

93-94. உடலுக்குள் இருக்கும் ஒரு சாதனம் தான் அந்தக்கரணம். அதை தான் மனது என்கிறோம். புத்தி, அகம்பாவம், சித்தம். என்று பல வித செயல்பாடுகளுக்கு காரணமாக இருப்பது .புத்தி என்பது தான் ஒவ்வொரு விஷயத்தின் நிலைப்பாட்டை நிர்ணயிக்கிறது. அகம்பாவம் என்பது உடலை முன்னிலைப்படுத்தி மனிதன் இயங்குவது. அதுவே தான் எல்லாம், என்று பொய்யாய் நிஜமாக காட்டுவது. சித்தம் என்பது எண்ணக்கோர்வை. எதிலெல்லாம் அவன் ஈர்ப்பு செல்கிறது என்று காட்டுவது.

95. प्राणापानव्यानोदानसमाना भवत्यसौ प्राणः । स्वयमेव वृत्तिभेदाद्विकृतिभेदात्सुवर्णसलिलादिवत् ॥ ९५॥
prāṇāpānavyānōdānasamānā bhavatyasau prāṇaḥ ।svayamēva vṛttibhēdādvikṛtibhēdātsuvarṇasalilādivat ॥ 95
ப்ராணாபாநவ்யாநோதா³நஸமாநா ப⁴வத்யஸௌ ப்ராண: । ஸ்வயமேவ வ்ரு’த்திபே⁴தா³த்³விக்ரு’திபே⁴தா³த்ஸுவர்ணஸலிலாதி³வத் ॥ 95॥

95. ப்ராணன் என்பது தான் மூச்சு காற்று. மனிதனின் இயக்கத்துக்கு காரணமானது. அது ஐந்து விதமான வாயுக்களாக செயல்படுவதில் முக்கியமானது. ப்ராணன் , அபானன், வியானன் உதானன், சமானன் என்று வெவ்வேறு செயல்பாடுகளை நிர்வகித்து இயங்குவது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *