VIVEKA CHOODAMANI – SLOKAS 51-65 – J K SIVAN

விவேக சூடாமணி – ஸ்லோகங்கள் 51-65 – நங்கநல்லூர் J K SIVAN

ऋणमोचनकर्तारः पितुः सन्ति सुतादयः । बन्धमोचनकर्तातुस्वस्मादन्यो न कश्चन ॥ 51॥
ṛṇamōchanakartāraḥ pituḥ santi sutādayaḥ । bandhamōchanakartā tu svasmādanyō na kaśchana ॥ 51॥
ரு’ணமோசநகர்தார: பிது: ஸந்தி ஸுதாத³ய: । ப³ந்த⁴மோசநகர்தா து ஸ்வஸ்மாத³ந்யோ ந கஶ்சந ॥ 51॥

51 உலகில் நம் ஒவ்வொருவருக்கும் அப்பா இருக்கிறார், அப்பாக்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். பித்ருக்களுக்கு இவ்வாறு கடமைகள் நிறைவேற்றப்பட்டு கடன்கள் தீர்க்கப்படுகிறதே, அந்த பழமனாதி , ஆதி அந்தமில்லாத, ஸ்வயம்புவுக்கு யார் அப்பா? அவன் தன்னுடைய கடன்களை தீர்த்து, நம் பந்தங்களையும் அல்லவோ தீர்க்கிறான்..

52. मस्तकन्यस्तभारादेर्दुःखमन्यैर्निवार्यते । क्षुधादिकृतदुःखं तुविना स्वेन न केनचित्॥ ५२॥
mastakanyastabhārādērduḥkhamanyairnivāryatē ।kṣudhādikṛtaduḥkhaṃ tu vinā svēna na kēnachit ॥ 52॥
மஸ்தகந்யஸ்தபா⁴ராதே³ர்து:³க²மந்யைர்நிவார்யதே । க்ஷுதா⁴தி³க்ரு’தது:³க²ம் து விநா ஸ்வேந ந கேநசித் ॥ 52॥
52. நம் தலையில் பெரிய பாரம் இருந்தால், மற்றவர்கள் அதை இறக்கி வைத்து உதவுவார்கள். ஆனால் பசி, தாகம், போன்ற உபாதைகளை அவனவன் தான் தீர்த்துக் கொள்ளவேண்டும் அல்லவா?

53. पथ्यमौषधसेवा च क्रियतेयेन रोगिणा । आरोग्यसिद्धिर्दृष्टाऽस्य नान्यानुष्ठितकर्मणा ॥ ५३॥
pathyamauṣadhasēvā cha kriyatē yēna rōgiṇā ।ārōgyasiddhirdṛṣṭā’sya nānyānuṣṭhitakarmaṇā ॥ 53॥
பத்²யமௌஷத⁴ஸேவா ச க்ரியதே யேந ரோகி³ணா । ஆரோக்³யஸித்³தி⁴ர்த்³ரு’ஷ்டாऽஸ்ய நாந்யாநுஷ்டி²தகர்மணா ॥ 53॥

53.ஒரு வியாதியால் பீடிக்கப்பட்டு தவிப்பவனுக்கு தக்க மருந்து, வேளா வேளைக்கு வைத்தியம் உபவாசம், ஒய்வு போன்றவையால் உடல் நலம் குணமாக முடியும். மற்றவர்கள் அனுஷ்டிப்பதன் மூலம் இவன் வியாதி தீருமா? வழி உண்டா?

वस्तुस्वरूपं स्फुटबोधचक्षुषा स्वेनैव वेद्यं न तुपण्डितेन । चन्द्रस्वरूपं निजचक्षुषैव ज्ञातव्यमन्यैरवगम्यतेकिम्॥ ५४॥
vastusvarūpaṃ sphuṭabōdhachakṣuṣāsvēnaiva vēdyaṃ na tu paṇḍitēna । chandrasvarūpaṃ nijachakṣuṣaivajñātavyamanyairavagamyatē kim ॥ 54॥
வஸ்துஸ்வரூபம் ஸ்பு²டபோ³த⁴சக்ஷுஷா ஸ்வேநைவ வேத்³யம் ந து பண்டி³தேந । சந்த்³ரஸ்வரூபம் நிஜசக்ஷுஷைவ ஜ்ஞாதவ்யமந்யைரவக³ம்யதே கிம் ॥ 54॥

54. ஒவ்வொரு வஸ்துவையும், அதன் தன்மையையும் ஒவ்வொருவனும் தானாகவே தான் கண்டு ஞானம் பெறமுடியும். எங்கோ ஒரு பண்டிதனால் அதை நமக்கு எடுத்துச் சொல்ல எப்படி முடியும்? மேலே தோன்றும் நிலாவை நமது கண்ணால் கண்டு தானே அனுபவிக்க முடியும், மற்றவன் கண்ணால் அதை அனுபவிக்க முடியுமா?

अविद्याकामकर्मादिपाशबन्धं विमोचितुम्। कः शक्नुयाद्विनाऽऽत्मानं कल्पकोटिशतैरपि ॥ ५५॥
avidyākāmakarmādipāśabandhaṃ vimōchitum ।kaḥ śaknuyādvinā”tmānaṃ kalpakōṭiśatairapi ॥ 55॥
அவித்³யாகாமகர்மாதி³பாஶப³ந்த⁴ம் விமோசிதும் । க: ஶக்நுயாத்³விநாऽऽத்மாநம் கல்பகோடிஶதைரபி ॥ 55॥

55. அவனவன் அஞ்ஞானத்தால், ஆசா பாசங்களால் கர்மாவினால் விளைந்த பலனை, பந்தத்தை அவனவன் தான் முட்டி மோதி அனுபவித்து தீர்த்துக் கொள்ளவேண்டும். சும்மா பல கோடி வருஷங்களானாலும் இது தானாகவே மாறப்போவதில்லை.

न योगेन न साङ्ख्येन कर्मणा नो न विद्यया । ब्रह्मात्मैकत्वबोधेन मोक्षः सिध्यति नान्यथा ॥ ५६॥
na yōgēna na sāṅkhyēna karmaṇā nō na vidyayā ।brahmātmaikatvabōdhēna mōkṣaḥ sidhyati nānyathā ॥ 56॥
ந யோகே³ந ந ஸாங்க்²யேந கர்மணா நோ ந வித்³யயா । ப்³ரஹ்மாத்மைகத்வபோ³தே⁴ந மோக்ஷ: ஸித்⁴யதி நாந்யதா² ॥ 56॥

56. யோகம், சாங்கியம் , கர்மம், வித்யை கற்பதால், பிரம்மத்தை , தனது ஆத்மாவை ஒருவன் அறியமுடியாது, அடைய முடியாது. அவனது ஆத்ம விசாரம், விடா முயற்சி, உறுதியான மனம் நம்பிக்கை, தியானம் மூலம் மட்டும் தானே அவன் ‘நான்” தான் அந்த ப்ரம்மம் என்ற ஆத்ம ஞானம் பெறமுடியும்?வேறே எந்த வழியுமில்லையே.

वीणाया रूपसौन्दर्यं तन्त्रीवादनसौष्ठवम्। प्रजारञ्जनमात्रं तन्न साम्राज्याय कल्पते॥ ५७॥
vīṇāyā rūpasaundaryaṃ tantrīvādanasauṣṭhavam ।prajārañjanamātraṃ tanna sāmrājyāya kalpatē ॥ 57॥
வீணாயா ரூபஸௌந்த³ர்யம் தந்த்ரீவாத³நஸௌஷ்ட²வம் । ப்ரஜாரஞ்ஜநமாத்ரம் தந்ந ஸாம்ராஜ்யாய கல்பதே ॥ 57॥

57. ரசிகர்கள் நிறைந்த ஒரு சபையில் ஒரு அழகான வீணையிலிருந்து இன்னிசை ஒலிக்கிறது. வாசிக்கும் வித்வான் திறமையையும், அந்த வீணையின் அழகும் தந்திகளிலிருந்து வெளிப்பதும் நாதமும் சிலரின் செவிக்கும் கண்களுக்கும் மட்டும் தானே இன்பம் தரும். அதனால் ப்ரம்ம ஞான, ஆத்ம ஞான பேரின்பம் கிடைக்குமா?

58. वाग्वैखरी शब्दझरी शास्त्रव्याख्यानकौशलम्। वैदुष्यं विदुषां तद्वद्भुक्तये न तुमुक्तये॥ ५८॥
vāgvaikharī śabdajharī śāstravyākhyānakauśalam ।vaiduṣyaṃ viduṣāṃ tadvadbhuktayē na tu muktayē ॥ 58॥
வாக்³வைக²ரீ ஶப்³த³ஜ²ரீ ஶாஸ்த்ரவ்யாக்²யாநகௌஶலம் । வைது³ஷ்யம் விது³ஷாம் தத்³வத்³பு⁴க்தயே ந து முக்தயே ॥ 58॥

58. அழகான அடுக்குச் சொல் பேச்சும், வாக் சாதுர்யமும், பல நூல்களை கற்றதை வெளிக்காட்டுவதாலும், தனது கல்வி ஞானத்தை பறை சாற்றுவதாலும் ஒரு ஆசாமிக்கு தற்காலிக பெருமையை மட்டுமே தரும். அதனால் ஆத்ம ஞானம், ப்ரம்ம ஞானம், முக்தியா பெறமுடியும்?.

अविज्ञातेपरेतत्त्वे शास्त्राधीतिस्तुनिष्फला । विज्ञातेऽपि परेतत्त्वे शास्त्राधीतिस्तुनिष्फला ॥ ५९॥
avijñātē parē tattvē śāstrādhītistu niṣphalā ।vijñātē’pi parē tattvē śāstrādhītistu niṣphalā ॥ 59॥
அவிஜ்ஞாதே பரே தத்த்வே ஶாஸ்த்ராதீ⁴திஸ்து நிஷ்ப²லா । விஜ்ஞாதேऽபி பரே தத்த்வே ஶாஸ்த்ராதீ⁴திஸ்து நிஷ்ப²லா ॥ 59॥

59 வேத சாஸ்த்ர நூல்களை கற்பதால் மட்டுமே மோக்ஷ ஞானம், ப்ரம்மம் அனுபவிக்கமுடியுமா, ப்ரம்மஞானிக்கு இந்த சாஸ்திர வேத நூல்களை கற்பதால் என்ன பயன்?.

शब्दजालं महारण्यं चित्तभ्रमणकारणम्। अतः प्रयत्नाज्ज्ञातव्यं तत्त्वज्ञैस्तत्त्वमात्मनः ॥ ६०॥
śabdajālaṃ mahāraṇyaṃ chittabhramaṇakāraṇam ।ataḥ prayatnājjñātavyaṃ tattvajñaistattvamātmanaḥ ॥ 60॥

ஶப்³த³ஜாலம் மஹாரண்யம் சித்தப்⁴ரமணகாரணம் । அத: ப்ரயத்நாஜ்ஜ்ஞாதவ்யம் தத்த்வஜ்ஞைஸ்தத்த்வமாத்மந:॥ 60॥

60. வேத சாஸ்த்ர நூல்களை உரக்க பாராயணம் செய்யும் சப்தம் என்பது ஒரு அடர்ந்த காடு போல. அதில் சுற்றி சுற்றி வரும் அலைச்சல் தான் மனதுக்கு கிடைக்கும். ஞானிகள் அதைக் கடந்து, தன்னுள் ஆராய்ந்து வைராக்கியத்தோடு தியானம் செய்து ஆத்மாவை தேடி, ப்ரம்ம ஞானம் பெற்றவர்கள்.

तत्त्वज्ञात्तत्त्व अज्ञानसर्पदष्टस्य ब्रह्मज्ञानौषधं विना । किमुवेदैश्च शास्त्रैश्च किमुमन्त्रैः किमौषधैः ॥ ६१॥
tattvajñāttattva ajñānasarpadaṣṭasya brahmajñānauṣadhaṃ vinā । kimu vēdaiścha śāstraiścha kimu mantraiḥ kimauṣadhaiḥ ॥ 61॥
தத்த்வஜ்ஞாத்தத்த்வ அஜ்ஞாநஸர்பத³ஷ்டஸ்ய ப்³ரஹ்மஜ்ஞாநௌஷத⁴ம் விநா । கிமு வேதை³ஶ்ச ஶாஸ்த்ரைஶ்ச கிமு மந்த்ரை: கிமௌஷதை:⁴ ॥ 61॥

61. அஞ்ஞானம், அறியாமை, என்பது ஒரு கொடிய விஷ சர்ப்பம். அது தீண்டியவனுக்கு நிவாரணி எது? ப்ரம்ம, ஆத்ம ஞானம் ஒன்று தானே. இதை விட்டு, வெறும் வேத சாஸ்த்ர நூல்களை , மந்திர தந்திரங்களை மனப்பாடம் செய்து கிளிப்பிள்ளை போல் ஒப்பிப்பதால் என்ன பிரயோஜனம்?

62. न गच्छति विना पानं व्याधिरौषधशब्दतः । विनाऽपरोक्षानुभवं ब्रह्मशब्दैर्न मुच्यते॥ ६२॥
na gachChati vinā pānaṃ vyādhirauṣadhaśabdataḥ ।vinā’parōkṣānubhavaṃ brahmaśabdairna muchyatē ॥ 62॥
ந க³ச்ச²தி விநா பாநம் வ்யாதி⁴ரௌஷத⁴ஶப்³த³த: । விநாऽபரோக்ஷாநுப⁴வம் ப்³ரஹ்மஶப்³தை³ர்ந முச்யதே ॥ 62॥
62 கடும் நோயால் ஒருவன் துடித்துக் கொண்டிருக்கிறான். அவன் அதை தீர்க்கும் மருந்துகளை தக்க நேரத்தில் தகுந்தபடி சாப்பிடாமல் அதன் பெயரை மட்டும் உரக்க சொன்னால் வியாதி குணமாகுமா? அதே போல் தான் பிரம்மத்தை அடைய, ஆத்ம ஞானம் பெற, கடுமையாக உழைத்து, ஆத்ம விசாரம் பண்ண வேண்டாமா? ப்ரம்மம் ஆத்மா என்று சொல்லிக்கொண்டே, எழுதிக் கொண்டே, இருந்தால் அதை அடையமுடியுமா? ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதே .

अकृत्वा दृश्यविलयमज्ञात्वा तत्त्वमात्मनः । ब्रह्मशब्दैः कुतो मुक्तिरुक्तिमात्रफलैर्नृणाम्॥ ६३॥
akṛtvā dṛśyavilayamajñātvā tattvamātmanaḥ ।brahmaśabdaiḥ kutō muktiruktimātraphalairnṛṇām ॥ 63॥
அக்ரு’த்வா த்³ரு’ஶ்யவிலயமஜ்ஞாத்வா தத்த்வமாத்மந: । ப்³ரஹ்மஶப்³தை:³ குதோ முக்திருக்திமாத்ரப²லைர்ந்ரு’ணாம் ॥ 63॥

63. உலகே மாயம், வாழ்வே மாயம். பிரபஞ்சமே மாயம், என்பதை உணர்ந்து அவற்றை விலக்காமல், ஆத்மாவை, பிரம்மத்தை பற்றி ஒன்றுமே தெரியாமல், எப்படியப்பா முக்தி அடையமுடியும்? எப்படி ஆத்ம தர்சனம் கிடைக்கும்? சும்மா வாய் வலிக்க ப்ரம்மம், ஞானம், ஆத்மா என்று கத்திக்கொண்டே இருந்தால் அதை அடையமுடியுமா? வெறும் பேச்சு, சப்தம் தானே அது.

बाह्यशब्दैः अकृत्वा शत्रुसंहारमगत्वाखिलभूश्रियम् । राजाहमिति शब्दान्नो राजा भवितुमर्हति ॥ ६४॥
bāhyaśabdaiḥ)akṛtvā śatrusaṃhāramagatvākhilabhūśriyam ; rājāhamiti śabdānnō rājā bhavitumarhati ॥ 64॥
பாஹ்யா சப்தை அக்ரு’த்வா ஶத்ருஸம்ஹாரமக³த்வாகி²லபூ⁴ஶ்ரியம் । ராஜாஹமிதி ஶப்³தா³ந்நோ ராஜா ப⁴விதுமர்ஹதி ॥ 64॥

64. ஒரு ராஜா, எதிரிகளை அடித்து விரட்டாமல், கொல்லாமல் , வெல்லாமல், ஒரு ராஜ்யத்தை விஸ்தரிக்க, பெருக்க முடியுமா, பெரிய சக்ரவர்த்தியாக முடியுமா? நான் தான் சக்ரவர்த்தி என்று குண்டுச்சட்டியில் இருந்து கொண்டே சொல்வதால் உண்மையில் சக்ரவர்த்தியாக இயலுமா? அப்படித்தான் ஆத்ம ஞானம், ப்ரம்ம ஞானம் பெறுவதும்.

आप्तोक्तिं खननं तथोपरिशिलाद्युत्कर्षणं स्वीकृतिं var परिशिलापाकर्षणं निक्षेपः समपेक्षतेन हि बहिःशब्दैस्तु निर्गच्छति । तद्वद्ब्रह्मविदोपदेशमननध्यानादिभिर्लभ्यते मायाकार्यतिरोहितं स्वममलं तत्त्वं न दुर्युक्तिभिः ॥ ६५

āptōktiṃ khananaṃ tathōpariśilādyutkarṣaṇaṃ svīkṛtiṃ (pāṭhabhēdaḥ – pariśilāpākarṣaṇaṃ)nikṣēpaḥ samapēkṣatē na hi bahiḥśabdaistu nirgachChati ।tadvadbrahmavidōpadēśamananadhyānādibhirlabhyatē māyākāryatirōhitaṃ svamamalaṃ tattvaṃ na duryuktibhiḥ ॥ 65॥s.

ஆப்தோக்திம் க²நநம் ததோ²பரிஶிலாத்³யுத்கர்ஷணம் ஸ்வீக்ரு’திம் var பரிஶிலாபாகர்ஷணம் நிக்ஷேப: ஸமபேக்ஷதே ந ஹி ப³ஹி:ஶப்³தை³ஸ்து நிர்க³ச்ச²தி । தத்³வத்³ப்³ரஹ்மவிதோ³பதே³ஶமநநத்⁴யாநாதி³பி⁴ர்லப்⁴யதே மாயாகார்யதிரோஹிதம் ஸ்வமமலம் தத்த்வம் ந து³ர்யுக்திபி:⁴ ॥ 65॥

65. ஒரு அற்புதமான விலையுயர்ந்த ஆபரணம் பூமியில் பல காலமாக புதைந்து கிடக்கிறது. அதை அடைய, பூமியை தோண்டி, தேடி, கண்டுபிடித்து, அதை சூழ்ந்திருக்கும் குப்பை, கூளம் , மண், கல், அழுக்கு எல்லாம் அகற்றி,கழுவி, தான் உண்மையான பிரகாசமான அந்த ஆபரணம் கண்ணுக்கு தெரியும். கைக்கு கிடைக்கும்.
அதற்கு தக்கவாறு பாடு படவேண்டாமா? மாயையில் மறைந்து, புலன்கள் ஈர்ப்பில் சுற்றப்பட்டு, உள்ளே கிடக்கும் ஆத்மாவை அறிய, புரிந்து கொள்ள, அடைய, ஒருவன் எவ்வளவு வைராக்கியத்தோடு தியானத்தோடு ஸ்ரத்தையுடன் அதை தேட வேண்டும், விசாரம் செய்யவேண்டும்? பிரம்மத்தை அடைவது அவ்வளவு சுலபமா ?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *