VIVEKA CHOODAMANI SLOKAS 21-25 – J K SIVAN

விவேக சூடாமணி – ஸ்லோகங்கள் 21-25 – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

तद्वैराग्यं जिहासा या दर्शनश्रवणादिभिः । जुगुप्सा या देहादिब्रह्मपर्यन्ते ह्यनित्येभोगवस्तुनि ॥ २१॥
tadvairāgyaṃ jihāsā yā darśanaśravaṇādibhiḥ । (pāṭhabhēdaḥ – jugupsā yā) dēhādibrahmaparyantē hyanityē bhōgavastuni ॥ 21॥
தத்³வைராக்³யம் ஜிஹாஸா யா த³ர்ஶநஶ்ரவணாதி³பி:⁴ । ஜுகு³ப்ஸா யா தே³ஹாதி³ப்³ரஹ்மபர்யந்தே ஹ்யநித்யே போ⁴க³வஸ்துநி ॥ 21॥

21 மனிதன் மிருகமாக வாழ்வதிலிருந்து தப்ப உலகவாழ்க்கையின் இந்த துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும். அதற்கு தேவையானது அவற்றை திரஸ்காரம், தியாகம் பண்ணும் திட சித்தம். அதே நேரம் பிரம்மத்தில் நாட்டம். மனது எதையாவது ஒன்றை பிடித்துக் கொள்ளவேண்டும். குரங்கு கிளைக்கு கிளை தானே தாவும். மனம் பிரம்மத்தை, ஆத்மாவைத் தேட விருப்பம் கொண்டு அதை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொள்ளவேண்டும். இதற்கு குருவின் வழிகாட்டல் அவசியம்.

भोग्यवस्तुनि विरज्य विषयव्राताद्दोषदृष्ट्या मुहुर्मुहुः । स्वलक्ष्येनियतावस्था मनसः शम उच्यते॥ २२॥ भोग्यवस्तुनि विरज्य विषयव्राताद्दोषदृष्ट्या मुहुर्मुहुः । स्वलक्ष्येनियतावस्था मनसः शम उच्यते॥22 ॥

bhōgyavastuni, virajya viṣayavrātāddōṣadṛṣṭyā muhurmuhuḥ । svalakṣyē niyatāvasthā manasaḥ śama uchyatē ॥ 22॥

போ⁴க்³யவஸ்துநி விரஜ்ய விஷயவ்ராதாத்³தோ³ஷத்³ரு’ஷ்ட்யா முஹுர்முஹு: । ஸ்வலக்ஷ்யே நியதாவஸ்தா² மநஸ: ஶம உச்யதே ॥ 22॥

22. இப்படி மனது பாகத்திலிருந்து யோகத்துக்கு தாவ பிரம்மத்தை நாட, அது முதலில் புலன்களின் பிடியிலிருந்து விடுபடவேண்டும். ப்ரம்மம் ஆத்ம ஞானம் ஒன்றே லக்ஷியம் என்ற நோக்கம் எப்போதும் வேண்டும். இதற்கு ஷமா, .அலைபாயாத மன அமைதி என்று பெயர்.

23. विषयेभ्यः परावर्त्य स्थापनं स्वस्वगोलके । उभयेषामिन्द्रियाणां स दमः परिकीर्तितः । बाह्यानालम्बनं वृत्तेरेषोपरतिरुत्तमा ॥ 23॥

viṣayēbhyaḥ parāvartya sthāpanaṃ svasvagōlakē । ubhayēṣāmindriyāṇāṃ sa damaḥ parikīrtitaḥ ।
bāhyānālambanaṃ vṛttērēṣōparatiruttamā ॥ 23॥

விஷயேப்⁴ய: பராவர்த்ய ஸ்தா²பநம் ஸ்வஸ்வகோ³லகே । உப⁴யேஷாமிந்த்³ரியாணாம் ஸ த³ம: பரிகீர்தித: । பா³ஹ்யாநாலம்ப³நம் வ்ரு’த்தேரேஷோபரதிருத்தமா ॥ 23॥

23. இன்னொரு விஷயம். மனதை கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் ரெண்டிலிருந்தும் பிரித்து சுய கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு தமம் என்று பெயர். யோகத்தில் இது ஒரு முக்கியமான பயிற்சி. மனதை எந்த வகையிலும் வேறே எதிலும் நாட விடாமல் கெட்டியாக பிடித்து கட்டிப்போட்டு வைப்பது.(உபரதி என்று இதை யோகிகள் சொல்வார்கள்)

सहनं सर्वदुःखानामप्रतीकारपूर्वकम् । चिन्ताविलापरहितं सा तितिक्षा निगद्यते॥ 24॥
sahanaṃ sarvaduḥkhānāmapratīkārapūrvakam । chintāvilāparahitaṃ sā titikṣā nigadyatē ॥ 24॥
ஸஹநம் ஸர்வது:³கா²நாமப்ரதீகாரபூர்வகம் । சிந்தாவிலாபரஹிதம் ஸா திதிக்ஷா நிக³த்³யதே ॥ 24॥

24.பிறரின் எந்த செயலாலும், சொல்லாலும் பாதிப்பின்றி எப்போதும் நிரந்தரமனாக அமைதி, பொறுமை இன்முகத்துடன் காப்பது எல்லோராலும் முடியாத காரியம். அப்படி மனத்தை செம்மையாக வைப்பது திதிக்ஷா எனப்படுவது. எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் யோகிகளுள்ளே உரித்தானது.

शास्त्रस्य गुरुवाक्यस्य सत्यबुद्ध्यवधारणम्। सत्यबुद्ध्यावधारणा सा श्रद्धा कथिता सद्भिर्यया वस्तूपलभ्यते॥ 25॥

śāstrasya guruvākyasya satyabuddhyavadhāraṇam । (pāṭhabhēdaḥ – satyabuddhyāvadhāraṇā)
sā śraddhā kathitā sadbhiryayā vastūpalabhyatē ॥ 25॥

ஶாஸ்த்ரஸ்ய கு³ருவாக்யஸ்ய ஸத்யபு³த்³த்⁴யவதா⁴ரணம் । ஸத்யபு³த்³த்⁴யாவதா⁴ரணா ஸா ஶ்ரத்³தா⁴ கதி²தா ஸத்³பி⁴ர்யயா வஸ்தூபலப்⁴யதே ॥ 25॥

25. குருவின் சொல் தட்டாது, அதே சமயம் குருட்டுத்தனமாக நம்பாமல், ஆராய்ந்து சிந்தித்து, குருவின் சொல் உணர்த்தும் சத்யம், சாஸ்வதம் எதுவோ அதை புரிந்துகொண்டு அதை விட்டு மீறாமல் திட சித்ததோடு பின்பற்றுவது தான் ஸ்ரத்தை எனப்படுவது. மிகவும் கடினமான ஒரு கட்டுப்பட்டு இதற்கு அவசியம். யோகிகள், மஹான்கள் இதை அனுஷ்டிக்கிறார்கள்.
ஆறுவிதமான மேலே சொன்ன குணங்களையும் தான் ஷட் ஸம்பத் , எனும் ஆறுவித செல்வங்கள் என்பது. அவை, சம, தம, திதிக்ஷா, உபரதி , ஸ்ரத்தா, சமாதானம் எனப்படும்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *