PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம் –  நங்கநல்லூர்   J K SIVAN
உயிர்ப்  பிச்சை 

இது கட்டுக்கதையோ  கற்பனையோ இல்லை.  மயிலாப்பூரில்  கபாலீஸ்வரர்  கோவில் கற்பகாம்பாள் சந்நிதியில் நடந்தது. 1950 ல்  மைலாப்பூரை சேர்ந்த  பக்தைகள்,  மைலாப்பூர், அதன்  சுற்றுப்புற பகுதிகளில் வாழ்ந்தவர்கள்,ஒரு லலிதா ஸஹஸ்ர பாராயண  சமிதி அமைத்தார்கள். ஆனந்தவல்லி அம்மாள் மிக்க பிரயா சைப் பட்டு இந்த குழுவை தொடர்ந்து முன்னின்று நடத்தில்  அவர்கள்  , தன்னையொத்த பெண்களுடன் ஒரு குழுவாக அமர்ந்து, அனுதினமும் லலிதா சஹஸ்ர நாம பாராயணம் செய்வது வழக்கம்.  இவர்களுக்கு  முத்துலட்சுமி அம்மையார்  தான்  குரு.  குரு பாட்டி என்று மரியாதை, மதிப்போடு அழைக்கப்பட்டவர் தான் தலைவி இந்த சமிதிக்கு.   இந்த  பெண்கள் குழு,  வெறும் பாராயணத்தோடு தமது சேவையை நிறுத்திக் கொள்ளாமல்  கோவிலின்  அநேக  உற்சவங்கள், விழாக்களிலும்  சிறப்பாக நடைபெற  தமது பங்கை தாமாகவே அளித்து  மகிந்ழ்தது.  விசேஷ தினங்களில் அவர்களின் பாராயணத்தோடு மற்ற  சேவா காரியங் களும் அற்புதமாக நடைபெற்று  எல்லா பக்தர்களும்  சந்தோஷமடைந்தனர்.   கற்பகாம்பாளுக்கு இந்த  குழந்தைகளை ரொம்ப பிடித்தது.  இருப்து வருஷங் களாக  இந்த அற்புத சேவை விடாமல்  தொடர்ந்தது. வளர்ந்தது. எல்லாவற்றுக்கும் காரணம்.   ஆனந்தவல்லி,  முத்துலட்சுமி ஆகியோரின் தன்னலமற்ற தூய பக்தியும்  எல்லோரிடக்கும்  சுமுகமாக   இனிமையாக  இணைந்து  புரிந்த சேவை.  அப்போது தான் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. 

1970-ல் ஒரு நாள் குரு பாட்டி, முத்து லக்ஷ்மியின்  கனவில்  கற்பகாம்பாள் தோன்றி  உரிமையோடு இப்படி கேட்டாள் :
 “முத்து,  நீயும் உனது கோஷ்டியும் தினமும் எனக்கு ஸஹஸ்ரநாம பாராயணம் பண்ணிண்டு  வருகிறீர்களே , காசி விசாலாட்சிக்கும்  காஞ்சி காமாட்சிக்கும் இருப்பது போல  இந்த  மயிலை  கற்பகத்துக்கும்    எப்போ, நீ தங்கத்துலே  ஸஹஸ்ர நாம காசு மாலை   பண்ணி போடப்போறே?”  

இப்படி ஒரு விஷயத்தை அம்பாளே கனவில்  வந்து   தன்னிடம் கேட்பாள் என்று எதிர்பாராத  குரு பாட்டி, பொழுது விடிந்ததும்   எல்லா  குழு அங்கத்தினர் களையும் கூப்பிட்டு கனவு பற்றி  சொன்னபோது  எல்லோரும் அதிர்ந்து போனார்கள்.  எல்லோருமே  அற்புதமான  அம்பாள் பக்தர்கள்.  நன்கொடை தந்து, வசூலித்து  எப்படியாவது வெகு சீக்கிரம் கற்பகாம் பாளுக்கு  தங்க காசுமாலை பண்ணி சாற்றுவது என்று இரவும் பகலும்  உழைத்தார்கள்.  லலிதாவின்  ஒரு  நாமம் ஒருபக்கம், மறுபக்கம் கபாலீஸ்வரரை மயில் பூஜை செய்வது, பின்னணியில் கற்பகாம்பாள் உருவம் முத்திரை போட முடிவானது.  இப்படி 108  காசுகள் மாலை பண்ண போதவில்லை.  இந்த  விஷயத்தை உடனே  காஞ்சிபுரத்தில் மஹா பெரியவாளிடம் தெரிவித்து அவர்  அனுக்ரஹம் பெற காஞ்சி மடத்துக்கு  சென்றார்கள்.   ஆனந்தவல்லி   நிர்வாகப் பொறுப்பில்  காரியங்கள் அற்புதமாக  வெற்றிகரமாக நடந்து கொண்டு வந்தது.
ஆனந்தவல்லி, குரு பாட்டி  அவர்கள் சமிதியை சேர்ந்தவர்கள் எல்லோரும் காஞ்சிபுரத்தில்   பெரிய வாளை தரிசிக்க சென்ற அன்று,  அங்கே  ஏதோ விசேஷம்.ஏராளமான பக்தர்கள் கூட்டம்.  ஒரு ஓரமாக கூட்டத்தில் தரிசனத்துக்கு காத்திருந்தார்கள்.   ஆச்சர் யமாக  ஒரு  மடத்து தொண்டர்  குரு பாட்டிஇருந்த இடத்துக்கு  வந்தார்.  “பெரியவா உங்களை உடனே வரச்சொன்னா; உள்ளே போங்கோ” மெஷின் மாதிரி அனைவரும் வேகமாக உள்ளே ஓடினார்கள். நமஸ்கரித்து பயபக்தியோடு எதிரே  நின்றார் கள். பெரியவாளின்  பார்வை  ஆனந்தவல்லி மேல் விழுந்தது.
”என்ன  காசுமாலைக்கு பணமும் பொருளும் இன்னும்  சேரலியா?” ‘
‘ஆஹா,  நாம்  எதற்காக இங்கே வந்து நம் குறையை பெரியவாளிடம் சொல்லி அவர்  அனுக்ரஹம் வேண்ட வந்தோமோ அதை பட்டென்று  தானே சொல்கிறாரே என்று  ஆச்சர்யம் அடைந்தார்கள். எப்படி சொல்வது, என்ன சொல்வது அவரிடம்?மஹா பெரியவா தானே  பேசினார்:“அம்பாள் தானே கேட்டா; அம்பாளே அதுக்கு அருள் கொடுப்பா; கவலைப் படவேண்டாம் .விசாலாட் சிக்கும் காமாட்சிக்கும் இருக்கறது பணக்கார காசு மாலை; ஆனா கற்பகாம்பாளுக்கு கிடைக்கப் போறது பக்தியால காசுமாலை”
ஆனந்தவல்லியை பார்த்து  மஹா பெரியவா:

“கற்பகம் சுவாசினி சங்கம் ன்னு பேர் வச்சு நிறைய சுவாசினி மற்றும் பாலா திருபுரசுந்தரி பூஜைகள் செஞ்சிண்டு வாங்கோ”

அனைவரையும்  வாழ்த்தி  பிரசாதம் அளித்து அனுப்பி னார் மஹா பெரியவா.
அப்புறம் என்ன.  ஆனந்தவல்லி  குருபாட்டி ஆகியோர்  மூலம் மகா பெரியவா யோசனைப்படி  சுவாசினி  சங்கம்  வளர்ந்து எண்ணற்ற  சுவாசினிகள் சேர்ந்தனர்.  பொன்னும் பொருளும் வந்து குவிந்தது.

1982-ல் காசு  மாலை செய்ய  உம்மிடி பங்காரு கண்ணன் முன் வந்தது. வேலை  துரிதமாக  நடந்து வந்தது.  நடுநடுவே   காஞ்சி மடம் மூலமாக மஹா பெரியவாளுக்கு ஏற்பாடுகள் நடப்பது பற்றி விவரங்கள் தெரிவிக்கப்பட்டது.   மஹா பெரியவா  மடத்தின் வேத பாடசாலை பண்டிதர்கள் சிலரை அனுப்பி வைத்து  காசுகளில் ஸஹஸ்ர  நாமாக்களின் சரியான பதிவு மற்றும் வரிசை மாறாதிருத்தல் ஆகியவற்றை  சரி பார்த்து ஆய்வு செய்ய அனுப்பி  வைத்தார்.  நல்ல காரியம் ஒன்று நடக்கும்போது எத்தனையோ முட்டுக் கட்டைகள், குறுக்கீடுகள், தொந்தரவுகள் வருமே. வந்தது. ஆனால்  மஹா பெரியவா அருளாசியினாலும், நிர்வாக அதிகாரி சுகவனேஸ்வரர்; தக்கார் குப்புசுவாமி; தலைமை அர்ச்சகர் விஸ்வநாத சிவாச்சாரியார்; வழக்கறிஞர் கிருஷ்ணஸ்வாமி ஆகியோர் உதவி செய்த தாலும்  108  காசுமாலை  வேலை நன்றாக  முடிந்தது. 

“அருள்மிகு கற்பகாம்பாளுக்கு லலிதா சஹஸ்ரநாம தங்க காசுமாலை சமர்ப்பண விழா”வை   26-2-1986 அன்று கொண்டாட முடிவாகி  விவேக் & கோ விழா அமைப்பாளராக நியமிக்கப்பட்டனர். 

சமிதி செயலாளர்  ஆனந்தவல்லிக்கு  ஒரு  சோதனை  உருவானது. துரதிர்ஷ்டவசமாக,  ஆனந்தவல்லியின்  கணவர் நோய்வாய்ப்பட்டு  கை கால்கள் செயலிழந்து பேச்சின்றி  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  மருத்துவர்களும் நம்பிக்கை  அளிக்கவில்லை.  அதிக பட்சம் 48 மணிகெடு. ஆனந்தவல்லி புழுவாய் துடித் தாள்.  நிர்க்கதியாக  மனமுடைந்து வீட்டின் பூஜை அறையிலேயே அடைந்து கிடந்தார்.  விடாமல் மனம் பெரியவாளையே வேண்டிக்கொண்டது.  குரு பாட்டி சங்க உறுப்பினர்களோடும், உம்மிடி கண்ணன் மற்றும் விவேக் ஆகியோருடன்   தயாரான தங்க  ஸஹஸ்ரநாம காசு மாலையோடு  மடத்திற்குச் சென்றார். பெரியவா எல்லோரையும் பார்த்தவர்
 “ஏன் உங்க செகரட்ரி  ஆனந்தவல்லி  வரலியா?”
என்று கேட்டார். நிலைமையை எடுத்து சொன்னார்கள்.  காசு மாலையை வாங்கி பார்த்தார் மஹா பெரியவா,

 “மாலை ரொம்ப நன்னா வந்திருக்கு; இந்த மாலையை கற்பகாம்பாளுக்கு போடும்போது  உங்க செகரட்ரி  ஆனந்தவல்லியும்  இங்கே  இருப்பா; கவலைப்படாம போயிட்டு வாங்கோ”

ஆசிர்வதித்து  பிரசாதங்கள் கொடுத்தார்.  எல்லோரும் நேராக ஆனந்தவல்லி வீட்டுக்கு சென்றார்கள்.  பெரிய வா ஆசிர்வாதம், பிரசாதம்  எல்லாம்   ஆனந்தவல்லிக் கு கிடைத்தது. 

 ”ஆஹா  இப்போது தான் மஹா பெரியவா  அதிசயம் நமக்கு புரியப்போகிறது.    டாக்டர்களால் கைவிடப் பட்ட ஆனந்தவல்லியின் கணவர் திடீரென்று ஆச்சர்ய மாக  நினைவு திரும்ப பெற்றார். உடல் நிலை சரி யானது. டாக்டர்களால் நம்பவே முடிய வில்லை.  ஏதோ அற்புதம்அதிசயம்  நடந்துள்ளது என்று மட்டும் தெரிந் தது. மறுநாளே  கணவர்  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு  ரெண்டு தெரு தள்ளி இருந்த  ஆஸ்பத்திரியிலிருந்து தானே  வீட்டுக்கு நடந்து வந்து விட்டார். 

26-2-1986 அன்று காசுமாலை சமர்ப்பண விழா ரொம்ப  GRAND ஆகி நடந்தது.வெகு விமரிசையாக நடந்தது. ஆனந்தவல்லி கணவரோடு விழாவில் கலந்து கொண்டார். அன்று காலையில் கற்பகாம்பாள்  தான் கேட்ட  காசுமாலையை கழுத்தில் அணிந்து அனைவ ருக்கும்  கருணையை வாரி வழங்கினாள்.  ஆனந்த வல்லியின் சுவாசினி   சங்கம்  காசு மாலை யைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள  கோவிலுக்கு ஒரு GODREJ கோத்ரேஜ்  பீரோ, ALMIRAH வை  வழங்கி யது. 

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், பௌர்ணமி அன்றும்  கற்பகாம்பாள்   ஸஹஸ்ரநாம காசுமாலை யோடு  நமக்கு காட்சி தருகிறாள். மஹா பெரியவா  பேசும் தெய்வம் என்றும்,  என்பதற்கு இதற்கு மேல் என்ன சான்று வேண்டும்? ATTACHED IS  THE LEGENDARY SIRPI’S  PAINTING  OF  MYLAPORE  GODDESS  KARPAGAMBAL.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *