ABEETHISTHAVAM SLOKAS 6-10 – J K SIVAN

ஸ்ரீ அபீtதி ஸ்தவம் ஸ்லோகங்கள் 6-10 – நங்கநல்லூர் J K SIVAN
ஸ்ரீ ஸ்வாமி தேசிகன்

स्थिते मनसि विग्रहे गुणिनि धातुसाम्ये सति स्मरेदखिलदेहिनं य इह जातुचित्त्वामजम् ।
तयैव खलु सन्धया तमथ दीर्घनिद्रावशं स्वयं विहितसंस्मृतिर्नयसि धाम नैःश्रेयसम् ॥ 6॥
|
sthithe manasi vigrahe guNini dhAtusAmye sati smaredakhiladehinaM ya iha jAtuchittvAmajam |
tayaiva khalu sandhayA tamatha dIrghanidrAvashaM svayaM vihitasaMsmR^itirnayasi dhAma naiHshreyasam || 6||

ஸ்திதே மனஸி விக்ரஹே குணிநி தாது சாம்யே சதி ஸ்மரேத் அகில தேகிநம் ய இஹ ஜாதுசித் த்வாம் அஜம் தயைவ கலு சந்த்யா தம் அத தீர்க்க நித்ரா வசம்ஸ்வயம் விஹித சம்ஸ்ருதி நயசி தாம நைஸ்ரேயசம்

பயமா அப்படின்னா என்ன? கேளு இப்படி தான் நீ கேக்கணும். நீ தான் அந்த மாதவனை, ரங்கநாதனை சரணடைந்து விட்டாயே. பின்னால் கண் பஞ்சடைமுன்னே, கடைவாயில் பால் வழியுமுன்னே, காதே கேலாமுன்னே, நினைவு தப்பும் முன்னே, வாய் பேசாமல் போகுமுன்னே, இப்போதே வாய் நிறைய , நா மணக்க நாராயணாய, ரங்கநாத என்று சொல்லிவிடு. அப்போதைக்கு இப்போதே சொன்னால் அந்திம காலத்தில் நம்மால் எதுவும் முடியாதபோது அந்த அரங்கன் நாம் இப்போது சொல்வதை நினைவுகொண்டு நம்மை ரக்ஷித்து மோக்ஷம் அளிப்பான். அப்புறம் என்ன பயம்?

रमादयित रङ्गभूरमण कृष्ण विष्णो हरे त्रिविक्रम जनार्दन त्रियुगनाथ नारायण ।
इतीव शुभदानि यः पठति नामधेयानि ते न तस्य यमवश्यता नरकपातभीतिः कुतः ॥ 7॥

ramAdayita ra~NgabhUramaNa kR^iShNa viShNo hare trivikrama janArdana triyuganAtha nArAyaNa |
itIva shubhadAni yaH paThati nAmadheyAni te na tasya yamavashyatA narakapAtabhItiH kutaH || 7||

ரமா தயித ரங்க பூ ரமண கிருஷ்ண விஷ்ணோ ஹரே த்ரிவிக்ரம ஜனார்த்தன த்ரியுக நாத நாராயண
இதி இவ சுப தாநி ய படதி நாமதே யாநி தே ந தஸ்ய யம வஸ்யதா நரக பாத பீதி குத

ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம் என்று ஒருவரா இருவரா , அடேயப்பா எத்தனை ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள், பக்தர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஸ்ரீரங்கத்தை மனதில் விரும்பி அவன் சந்நிதிக்கு சென்று கரம் குவித்து வணங்கி நமஸ்கரித்து பயனடைவோம். அவன் நாம சங்கீர்த்தனம் செய்வோம். அப்புறம் யமனுக்கு இங்கே என்ன வேலை. ஒரே ஓட்டம் ஓடிவிடுவானே.

कदाचिदपि रङ्गभूरसिक यत्र देशे वशी त्वदेकनियताशयस्त्रिदशवन्दितो वर्तते ।
तदक्षततपोवनं तव च राजधानी स्थिरा सुखस्य सुखमास्पदं सुचरितस्य दुर्गं महत् ॥ 8॥

kadAchidapi ra~NgabhUrasika yatra deshe vashI tvadekaniyatAshayastridashavandito vartate |
tadakShatatapovanaM tava cha rAjadhAnI sthirA sukhasya sukhamAspadaM sucharitasya durgaM mahat || 8||

கதாசித் அபி ரங்க பூ ரசிக யத்ர தேசே வசீ த்வத் ஏக நியத ஆசய த்ரிதச வந்தித வர்த்ததே
தத் அஷத தப வனம் தவ ச ராஜதாநீ ஸ்திதா ஸூ கஸ்ய ஸூ கம் ஆஸ்பதம் ஸீசரிதஸ்ய துர்க்கம் மஹத்

ஐம் புலன்களை அடக்கி மனதை அரங்கனிடம் வைத்தவனை சகல தேவர்களும் வணங்குவார்களே. அப்படிப்பட்ட பக்தன் இருக்கும் இடம் சிறந்த தவம் செய்ய தகுந்த இடம். ஸ்ரீ ஸ்ரீனிவாசன் இருவருமே நித்ய வாசம் செய்யும் ஸ்தலமாகவும் ஆகும் . சகல வைபோகங்களும் அவனைச் சேரும். அப்புறம் என்ன பயம்?

त्रिवर्गपथवर्तिनां त्रिगुणलङ्घनोद्योगिनां द्विषत्प्रमथनार्थिनामपि च रङ्गदृश्योदयाः ।
स्खलत्समयकातरीहरणजागरूकाः प्रभो करग्रहणदीक्षिताः क इह तेन दिव्या गुणाः ॥9 ॥

trivargapathavartinAM triguNala~NghanodyoginAM dviShatpramathanArthinAmapi cha ra~NgadR^ishyodayAH |
skhalatsamayakAtarIharaNajAgarUkAH prabho karagrahaNadIkShitAH ka iha tena divyA guNAH || 9|| (ka iva)

த்ரிவர்க்க பத வர்த்தி நாம் த்ரிகுண சங்கந உத்யோகி நாம் த்விஷத் ப்ரமதந அறத்திநாம் அபி ச ரெங்க த்ருச்ய உதயா ஸ்க்கலத் சமய காதரீ ஹரண ஜாகரூகா பிரபோ கர க்ரஹண தீஷிதா க இவ தே ந திவ்ய குணா

ஸ்ரீயப்பதே , ரங்கநாதா, ஆஹா உன்னுடைய ஒவ்வொரு திருக் கல்யாண குணங்களும், ஆயிரமாயிர நாமங்களை நினைக்க நினைக்க மனம் ஆனந்தத்தில் மூழ்குகிறது. தர்மம் அர்த்தம் காமம் எல்லாம் உதறிவிட்டு சொந்த பந்த உற்றார் தாயாதி பங்காளி, சகல விரோதிகளிடமிருந்தும் எம்மை நீக்கி எக்காலத்திலும் ரஷிக்க வல்லதல்லவோ அந்த மஹிமை. அப்புறம் எங்கிருந்து பயம் எம்மை அணுகும்?–

बिभेति भवभृत्प्रभो त्वदुपदेशतीव्रौषधात्- कदध्वरसदुर्विषे बडिशभक्ष्यवत्प्रीयते । (बलिश)
अपथ्यपरिहारधीविमुखमित्थमाकस्मिकी तमप्यवसरे क्रमादवति वत्सला त्वद्दया ॥ 10॥

bibheti bhavabhR^itprabho tvadupadeshatIvrauShadhAt\- kadadhvarasadurviShe baDishabhakShyavatprIyate | (balisha)
apathyaparihAradhIvimukhamitthamAkasmikI tamapyavasare kramAdavati vatsalA tvaddayA || 10||

பிபேதி பவப்ருத் பிரபோ தவத் உபதேச தீவ்ர ஔஷதாத் கதத்வ ரச துர்விஷே பளிச பஷவத் ப்ரீயதே
அபத்த்ய பரிகாரதி விமுகம் இத்தம் ஆகஸ்மிகீ தம அபி அவசரே க்ரமா தவதி வத்சலா த்வத் தயா

மீளாத எல்லையற்ற ஸம்சார துக்க சாகரத்தில் உழன்று விஷயாந்தரங்களில் சிக்கி உள்ள அனைவரையும் அரங்கா உனது தயை மிக்க காருண்ய குணம் மீட்டு என்றும் உன்னை சரணடைய ரக்ஷிக்க வல்லது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1399

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *