VIVEKA CHOODAMANI SLOKAS 6-10 – J K SIVAN

விவேக சூடாமணி 6-10- நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

वदन्तु शास्त्राणि यजन्तु देवान् कुर्वन्तु कर्माणि भजन्तु देवताः । आत्मैक्यबोधेन विनापि मुक्तिः न सिध्यति ब्रह्मशतान्तरेऽपि ॥ 6 ॥
vadantu śāstrāṇi yajantu devān kurvantu karmāṇi bhajantu devatāḥ | ātmaikyabodhena vināpi muktiḥ na sidhyati brahmaśatāntare’pi || 6 ||
வத³ந்து ஶாஸ்த்ராணி யஜந்து தே³வாந் var பட²ந்து குர்வந்து கர்மாணி ப⁴ஜந்து தே³வதா: । ஆத்மைக்யபோ³தே⁴ந விநாபி முக்தி- var விநா விமுக்தி: ந ர்ந ஸித்⁴யதி ப்³ரஹ்மஶதாந்தரேऽபி ॥ 6॥

நமக்கு சாஸ்திரங்கள் சொல்வது, யாகங்கள் யஞங்கள் பண்ணுவதன் பலன், வழிபாட்டு முறை சடங்குகள் எல்லாம் தெரிந்திருந்தால் தான் முறையாக தொழவோ, வழிபடவோ, முடியும். முன்னோர்கள் அனைத்தையும் சொல்லித் தந்திருக்கிறார்கள். எந்த தெய்வத்துக்கு என்ன ப்ரீதி, எப்படிச் செய்யவேண்டும் என்று வழிமுறை இருக்கிறது. ஆத்மாவை உணராதவன் முக்தியை அடையவே முடியாது. நூறு பிரம்மாக்களின் ஆயுசு கிடைத்தாலும் ஆத்ம விசாரம், ஆத்ம ஞானம் இல்லாதவன் கரை சேர முடியாது. ஒரு ப்ரம்மாவின் ஒரு நாள் என்பது நமது கணக்கில் 432 மில்லியன் நாட்கள். நூறு ப்ரம்மா வயசு என்றால்???? எத்தனை சைபர் என்றே தெரியாது. அவ்வளவு ஆயுசு பிறவிகள் கொடுத்தான் தேறாதவனை என்ன வென்று சொல்வது?

अमृतत्वस्य नाशास्ति वित्तेनेत्येव हि श्रुतिः । ब्रवीति कर्मणो मुक्तेरहेतुत्वं स्फुटं यतः ॥7 ॥
amṛtatvasya nāśāsti vittenetyeva hi śrutiḥ | bravīti karmaṇo mukterahetutvaṃ sphuṭaṃ yataḥ || 7 ||
அம்ரு’தத்த்வஸ்ய நாஶாஸ்தி வித்தேநேத்யேவ ஹி ஶ்ருதி: । ப்³ரவீதி கர்மணோ முக்தேரஹேதுத்வம் ஸ்பு²டம் யத: ॥ 7॥

தன்னலம் கொஞ்சமும் இல்லாமல் செயகிற காரியத்தின் பலன், எதையும் எதிர்பார்த்து செய்யாத காரியத்தின் பலன், அதாவது கர்மம் தான் சித்த சுத்தத்தை தரும். ஜீவன் முக்தனாக வேண்டும் என்றால் த்யானம், நித்ய அநித்திய ஞானம், மாயப் பிரபஞ்சம் வசம் அகப்படாமல் ஒதுங்கும் பழக்கம் வைராக்கிய குணம் எல்லாம் வேண்டுமே. எங்கே போவது?

अतो विमुक्त्यै प्रयतेत्विद्वान्संन्यस्तबाह्यार्थसुखस्पृहः सन् ।सन्तं महान्तं समुपेत्य देशिकं तेनोपदिष्टार्थसमाहितात्मा ॥ ८ ॥
ato vimuktyai prayatetvidvān saṃnyastabāhyārthasukhaspṛhaḥ san | santaṃ mahāntaṃ samupetya deśikaṃ tenopadi ṣṭārtha
samāhitātmā || 8 ||
॥८॥
Therefore, the learned seeker should abandon his desire for pleasures from external objects and strive to gain liberation (from the cycle of births and deaths). To this end he must approach a saintly and generous Master and must lead a life reflecting and contemplating on the words of advice given by his spiritual guru

எனவே மானுடர்காள், மாயையில் உழன்று அழியும் உலக விவகார வஸ்துகளில் மனம் செலுத்தாதீர்கள். பிறவிப் பெருங்கடலை கடக்க , நல்ல ஒரு குருவை அடைந்து மோக்ஷ மார்கத்தை அறிந்து அவர் உபதேசத்தை அனுசரித்து, அதிலிருந்து பிரழாமல் விடாமல் எப்போதும் கடைப் பிடித்து வாழ்வீர். நல்லதும் கெட்டதும் நம் கையிலே தானே, நமது செயல்களின் பலனால் தானே. இது நினைவிருக்கட்டும். அதை உணர்வது தான் ஒருவன் கற்ற கல்விக்கழகு.

9. उद्धरेदात्मनात्मानं मग्नं संसारवारिधौ योगारूढत्वमासाद्य सम्यग्दर्शननिष्ठया ॥९॥
உத்³த⁴ரேதா³த்மநாऽऽத்மாநம் மக்³நம் ஸம்ஸாரவாரிதௌ⁴ । யோகா³ரூட⁴த்வமாஸாத்³ய ஸம்யக்³த³ர்ஶநநிஷ்ட²யா ॥ 9॥

எழுந்திரு,ஓடு,நேரம் வீணாக்காதே. உன்னைப் பிடித்து இழுக்கும் சம்சார சாகரத்திலிருந்து வெளியே வா. ஐம்புலன் வசம் சிக்காமல், தன்னடக்கம் கொள். நித்ய அநித்தியம் எது என்று உணர்ந்துவிடாமல் அதன் படி நடப்பாய். யோகியாகி விடுவாயே. ஜனன மரண பாதிப்புகளிலிருந்து விடுபடுவாய். எது நிஜம், எது மாயை என்று அறிந்து கொள்ள அப்போது உன்னால் முடியும்..

10.संन्यस्य सर्वकर्माणि भवबन्धविमुक्तये । यत्यतां पण्डितैर्धीरैरात्माभ्यास उपस्थितैः ॥10 ॥
saṃnyasya sarvakarmāṇi bhavabandhavimuktaye | yatyatāṃ paṇḍitairdhīrairātmābhyāsa upasthitaiḥ || 10 ||
ஸந்ந்யஸ்ய ஸர்வகர்மாணி ப⁴வப³ந்த⁴விமுக்தயே । யத்யதாம் பண்டி³தைர்தீ⁴ரைராத்மாப்⁴யாஸ உபஸ்தி²தை: ॥ 10॥

ஐயா, சாமி, ஒரு மூன்று முக்ய அரிய விஷயங்கள் இறைவனருளால் நேர்வதை தெரிந்து கொள்ளப்பா. ஒன்று இந்த மானுட பிறவி, ரெண்டாவது முக்தியில் நாட்டம், மூன்றாவது மகான்களை போற்றி வணங்கி சேவை செய்தல். இதை மறவாமல் நினைவில் கொண்டாலே உன் வாழ்வு பயனுள்ளது ஆகுமே. உனக்கு கிடைத்த இந்த மனுஷ பிறவி அரிதான அற்புதமான அதிர்ஷ்டம். கிடைத்த்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் அறிந்துகொள்ளவேண்டிய நல்ல விஷயங்களை தேடி பிடித்து கற்றுக்கொள். உன்னையே நீ அறிவாய் என்ற சிறந்த தத்துவத்தை துளியும் அலக்ஷியம் பண்ணாமல் கோட்டை விடாமல் ஆத்ம விசாரத்தில் ஈடுபடு. இதைக் கோட்டை விட்டவன் வடி கட்டிய முட்டாள். ஏற்கனவே இதை திரும்ப திரும்ப சொல்கிறேன். நிழலை நிஜமென்று தேடி ஓடாதே.. வேத சாஸ்திர ஞானம் இன்றி, ”தான்” யார் என்றே தெரியாமல் அறியாமல் நிழலை நிஜம் என்று தேடி ஓடி ஆடி மிருகமாக வாழ்கிறோம். நாம் மிருக வாழ்க்கையா, மெஷின் வாழ்க்கையா எதை வாழ்கிறோம்? வேதம் சாஸ்திரம் ஞானம் இதற்கெல்லாம் அர்த்தம் கூட தெரியாத போது அதை எப்போது எப்படி அறிவது? அறியவேண்டும் என்ற எண்ணமாவது மனதில் உண்டாகுமா? அந்த கேள்வி மனதில் எழுந்தால் அதுவே நல்ல அறிகுறி. அது போதுமே” என்கிறார் சங்கரர்

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *