VIVEKA CHOODAMANI 16-20 – J K SIVAN

விவேக சூடாமணி 16-20- நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

मेधावी पुरुषो विद्वानूहापोहविचक्षणः । अधिकार्यात्मविद्यायामुक्तलक्षणलक्षितः ॥ १६॥
medhāvī puruṣo vidvānuhāpohavicakṣaṇaḥ | adhikāryātmavidyāyāmuktalakṣaṇalakṣitaḥ || 16
மேதா⁴வீ புருஷோ வித்³வாநூஹாபோஹவிசக்ஷண: । அதி⁴கார்யாத்மவித்³யாயாமுக்தலக்ஷணலக்ஷித: ॥ 16॥

ஆத்மாவைப் பற்றி சிந்தித்து ஆத்ம விசாரம் செய்பவன் சாஸ்திரங்கள், வேதங்கள் சொல்வது சரியானது, நியாயமானது என்பதை உணர்ந்து அதை ஆதரிப்பவன். புத்தி கூர்மையானவன். அதை ஆதாரமில்லாமல் கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்களை சாடுபவன்.

विवेकिनो विरक्तस्य शमादिगुणशालिनः । मुमुक्षोरेव हि ब्रह्मजिज्ञासायोग्यता मता ॥ १७॥
vivekino viraktasya śamādiguṇaśālinaḥ |mumukṣoreva hi brahmajijñāsāyogyatā matā || 17 ||
விவேகிநோ விரக்தஸ்ய ஶமாதி³கு³ணஶாலிந: । முமுக்ஷோரேவ ஹி ப்³ரஹ்மஜிஜ்ஞாஸாயோக்³யதா மதா ॥ 17॥
ப்ரம்மம் என்பது நிரந்தரமான ஸாஸ்வதமான சத்யம் என்று உணர்ந்தவன், எது நிஜம், எது மாயை என்று அறிந்தவன், அமைதியாக, உணர்ச்சிகளின் வசப்படாதவன் முக்தியாய் நாடுபவன், பிரம்மத்தை அறிந்துகொள்ள ப்ரம்மத்தைஅனுபவிக்க தகுதி உடையவன்.

साधनान्यत्र चत्वारि कथितानि मनीषिभिः ।येषुसत्स्वेव सन्निष्ठा यदभावे न सिध्यति ॥ १८॥
sādhanānyatra chatvāri kathitāni manīṣibhiḥ ।yēṣu satsvēva sanniṣṭhā yadabhāvē na sidhyati ॥ 18॥
ஸாத⁴நாந்யத்ர சத்வாரி கதி²தாநி மநீஷிபி:⁴ । யேஷு ஸத்ஸ்வேவ ஸந்நிஷ்டா² யத³பா⁴வே ந ஸித்⁴யதி ॥ 18॥

மனிதனை பல வழிகளில் புத்தி, மனம், புலன்களின் சக்தியால் ஈர்க்கிறது. அதற்கு அடிமையானவர்கள் தான் ஏராளம். இது மாயை என்று உண்டர்ந்து அதனின்றும் விலகி சத்யம் எது, சாஸ்வதம் எது என்று அறிந்து கொண்டு திட மனதோடு ஆத்மாவைத் தேடுபவன் தான் வெற்றிபெறுகிறான். பிரம்மத்தை அனுபவிக்கிறான்.

19. आदौ नित्यानित्यवस्तुविवेकः परिगण्यते। इहामुत्रफलभोगविरागस्तदनन्तरम्। शमादिषट्कसम्पत्तिर्मुमुक्षुत्वमिति स्फुटम् ॥ १९॥
ādau nityānityavastuvivēkaḥ parigaṇyatē ।ihāmutraphalabhōgavirāgastadanantaram ।
śamādiṣaṭkasampattirmumukṣutvamiti sphuṭam ॥ 19॥

ஆதௌ³ நித்யாநித்யவஸ்துவிவேக: பரிக³ண்யதே । இஹாமுத்ரப²லபோ⁴க³விராக³ஸ்தத³நந்தரம் । ஶமாதி³ஷட்கஸம்பத்திர்முமுக்ஷுத்வமிதி ஸ்பு²டம் ॥ 19॥

ஒவ்வொரு கணமும் நம் வாழ்வில் பொய் நிஜமாக தோன்றி அநித்தியம் நிஜமாக, நித்தியமாக காட்சி தந்து நம்மை அடிமையாக்குகிறது. அதை புரிந்து கொள்ள முதலில் கவனம் வைப்போம். இதல்ல அதல்ல என்று ஒதுக்குவதிலேயே வாழ்க்கை முடிந்துவிடும். கர்ம பலன்களை அனுபவிப்பதில் பல ஜன்மங்கள் தீர்ந்து விடுகிறது. அமைதியான வாழ்க்கை தனிமையில் த்யானம் ஆகியவை, பெரிதும் முக்தியைத் தேடுவதற்கு உதவும்.

20. ब्रह्म सत्यं जगन्मिथ्येत्येवंरूपो विनिश्चयः । सोऽयं नित्यानित्यवस्तुविवेकः समुदाहृतः ॥ २०॥
brahma satyaṃ jaganmithyētyēvaṃrūpō viniśchayaḥ ।sō’yaṃ nityānityavastuvivēkaḥ samudāhṛtaḥ ॥ 20॥
ப்³ரஹ்ம ஸத்யம் ஜக³ந்மித்²யேத்யேவம்ரூபோ விநிஶ்சய: । ஸோऽயம் நித்யாநித்யவஸ்துவிவேக: ஸமுதா³ஹ்ரு’த: ॥ 20॥

20.எப்போது மனதில் நிச்சயமாக ப்ரம்மம் ஒன்றே சாஸ்வதம், பிரபஞ்சம் வெறும் நிழல் காட்சி, என்று பதிவாகிவிட்டதோ, அது தான் பண்பட்ட மனது. பொய்க்கும் நிஜத்துக்கும் வித்யாசம் அறிந்த மனது. சாதகன் அப்போது தான் ஆத்ம ஞானம் புரிந்து கொள்வான். ப்ரம்மம் அர்த்தமாகும்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *