VIGNANA NOUKA 3/9 – J K SIVAN

விஞ்ஞான நௌகா – 3/9 — நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

यदानन्दरूपं प्रकाशस्वरूपं निरस्तप्रपञ्चं परिच्छेदहीनम् ।
अहम्ब्रह्मवृत्त्यैकगम्यं तुरीयं परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ ३॥

Yad Aananda roopam prakasa swaroopam Nirastha prapancham parichcheda soonyam
Aham Brahmavruthyaikagamyam tureeyam Param Brahma nityam Tadevaaham asmi. 3

யத் ஆநந்த ரூபம் பிரகாச ஸ்வரூபம் நிரஸ்த ப்ரபஞ்சம் பரிச்சேத சூன்யம்
அஹம் ப்3ரஹ்மவ்ருʼத்யைககாம்யம் துரீயம் பரம் பிரம்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 3

தேஜஸ் ஓஜஸ் என்று சில வார்த்தைகளைச் சொல்கிறோமே. அது என்ன? தேஜஸ் என்பது வெளியே முகத்தில் காணும் ஒரு ஒளி. எவன் உள்ளே சுத்தமாக இருக்கிறானோ அந்த பளபளப்பு வெளியே அவன் முகத்திலும் பிரதிபலிக்கும். அகத்தின் அழகு முகத்தில் என்று பெரியோர்கள் சொல்வதின் பொருள் இது தான். ஓஜஸ் என்பது ஆத்ம ஒளி. அதை தேஜஸ் மிகைப்படுத்திக் காட்டும்.

ஞானி என்றென்றும் பேரின்பம் நிரம்பிய மகிழ்ச்சியின் வடிவத்தைக் கொண்டிருப்பவன் . உலக ஈர்ப்புகளை ஒதுக்கி தன்னில் தானாகிய ஆத்மாவை அனுபவிப்பவன். நம்மைப்போல் இல்லாமல் வர்ணிக்க இயலாத நாம் காணும் உலகை துறந்தவன். ஆத்ம ஞான தாகம் எப்போதும் கொண்டவன். அதனால் பேரின்பம் நிறைந்த நிலையில் காணப்படுபவன். ,பிரம்மத்தை துய்ப்பவன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *