ATHMA VIDHYA VILASAM 36-40 – J K SIVAN

ஆத்ம வித்யா விலாசம் 36-40 – நங்கநல்லூர் J K SIVAN
ஸதாசிவ ப்ரம்மேந்திரா

36. विजननदीकुञ्जगृहे मञ्जुलपुलिनैकमञ्जुतरतल्पे । शेते कोऽपि यतीन्द्रः समरससुखबोधवस्तुनिस्तन्द्रः ॥ ३६॥

vijananadIku~njagR^ihe ma~njulapulinaikama~njutaratalpe | shete ko.api yatIndraH samarasasukhabodhavastunistandraH || 36||

விஜநநதீ³குஞ்ஜக்³ரு’ஹே மஞ்ஜுளபுலிநைகமஞ்ஜுதரதல்பே । ஶேதே கோऽபி யதீந்த்³ர: ஸமரஸஸுக² போ³த⁴ வஸ்துநிஸ்தந்த்³ர: ॥ 36॥

ஸர்வ ஸ்வதந்திரனான ப்ரம்ம ஞானிக்கு மற்றவர்கள் அஞ்சும் தனியான காட்டின் நடுவிலோ, நதிக்கரையிலோ, பரந்த மணல் திட்டிலோ, படுத்து ஆனந்தமாக இருக்க முடிகிறது. அவன் தன்னை உணர்ந்தவன். தன்னில் பரமனை அனுபவித் தவன், எங்கும் பரமனே, பரமனே பிரம்மம் என்று அறிந்தவன். ஞானி என்பதால் தான் தனித்து இல்லை. பரமனில் இணைந்தவன் என்று புரிந்தவன். அவனுக்கு காடும் மேடும், அரண்மனையும் குடிசையும் ஒன்றே. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று வாழ்பவன்.

37. भूतलमृदुतरशय्यः शीतलवातैकचामरः शान्तः । राकाहिमकरदीपो राजति यतिराजशेखरः कोऽपि ॥ ३७॥

bhUtalamR^idutarashayyaH shItalavAtaikachAmaraH shAntaH |rAkAhimakaradIpo rAjati yatirAjashekharaH ko.api || 37||

பூ⁴தலம்ரு’து³தரஶய்ய: ஶீதலவாதைகசாமர: ஶாந்த: । ராகாஹிமகரதீ³போ ராஜதி யதிராஜஶேக²ர: கோऽபி ॥ 37॥

37. துறவிகளுக்குள் வேந்தன் ஆகிய ப்ரம்ம ஞானிக்கு தென்றல் தான் aircondition, கட்டாந்தரையே சுகமான கட்டில் , தெளிவான மனமே சுகானுபவம், சந்திரன் நக்ஷத்ரங்களின் ஒளியே விளக்கு என்று வாழ்பவன். அவனே சிவன், அவனே சுக புருஷன். அவனே சித்தன்.

38. विपुलशिलातलफलके विमलसरिद्वारिपरिवृतोदारे । मन्दं मलयजपवने वाति प्रस्वपिति कोऽपि यतिराजः ॥ ३8॥

vipulashilAtalaphalake vimalasaridvAriparivR^itodAre |mandaM malayajapavane vAti prasvapiti ko.api yatirAjaH || 38||

விபுலஶிலாதலப²லகே விமலஸரித்³வாரிபரிவ்ரு’தோதா³ரே । மந்த³ம் மலயஜபவநே வாதி ப்ரஸ்வபிதி கோऽபி யதிராஜ: ॥ 38

சத்தியத்தை, பிரம்மத்தை உணர்ந்தவனுக்கு இனி அறிந்துகொள்வதற்கு எதுவுமே கிடையாது. சத் சித் ஆனந்தத்தை ருசிப்பவன். உலகமே அவன் ஊர். எங்கு வேண்டுமானாலும் அலைவான், திரிவான், தெளிந்த நீரே அவன் பருகும் அம்ருதம். தென்றல் காற்றே அவன் பிராணன். கற்பாறையே படுக்கை. முள்ளே போர்வை.

39. आन्तरमेकं किञ्चित्सन्ततमनुसन्दधन्महामौनी । करपुटभिक्षामश्नन्नटति हि वीथ्यां जडाकृतिः कोऽपि ॥ ३९॥

AntaramekaM ki~nchitsantatamanusandadhanmahAmaunI | karapuTabhikShAmashnannaTati hi vIthyAM jaDAkR^itiH ko.api || 39||

ஆந்தரமேகம் கிஞ்சித்ஸந்ததமநுஸந்த³த⁴ந்மஹாமௌநீ । கரபுடபி⁴க்ஷாமஶ்நந்நடதி ஹி வீத்²யாம் ஜடா³க்ரு’தி: கோऽபி ॥ 39

நாம் சிக்கிக்கொண்டு தவிர்க்க முடியாத பஞ்ச கோசங்கள் ஞானிக்கில்லை. ஸ்தூலத்தை உதறிவிட்டு சூக்ஷ்மத்தில் வாழ்பவன். வெளியே இருப்பதெல்லாம் உள்ளே காண்பவன். கையில் விழுவதே அவனுக்கு அடுத்த வேளை உணவு. உலக வாழ்க்கையில் அவன் ஒரு செத்த பிணம். சம்பந்தமில்லாதவன். ஆனந்தத்தில் அவன் உழல்வதை மற்றவர்கள் அறிய மாட்டார்கள். பிறருக்கு அவன் ஒரு பைத்தியமாக தோன்றுபவன். சேஷாத்ரி ஸ்வாமிகள் இப்போது புரிகிறாரா?

40. प्रविलाप्य जगदशेषं परिशिष्टाखण्डवस्तुपरतन्त्रः । प्राश्नाति कवलमास्ये प्राप्तं प्रारब्धकर्मणा कोऽपि ॥ ४०॥40

pravilApya jagadasheShaM parishiShTAkhaNDavastuparatantraH | prAshnAti kavalamAsye prAptaM prArabdhakarmaNA ko.api || 40||

ப்ரவிலாப்ய ஜக³த³ஶேஷம் பரிஶிஷ்டாக²ண்ட³வஸ்துபரதந்த்ர: । ப்ராஶ்நாதி கவலமாஸ்யே ப்ராப்தம் ப்ராரப்³த⁴கர்மணா கோऽபி ॥ 40॥

நாம் கயிறை பாம்பாகவும், இருளில் அசையும் மரத்தை பேயாகவும், கானல் நீரை நிஜமாகவும் நம்பி தவிப்பவர்கள். ஞானி இதைக் கடந்தவன். அறிவே வடிவானவன். பிரம்மத்தை எதிலும் காண்பவன். உணவுக்கு கையேந்தாதவன். அவன் கையில் எது விழுகிறதோ அதை மட்டுமே ஏற்பவன். கவலையே எதிலும் அற்றவன். பிரபஞ்சத்தில் அவன் ஒரு பொருட்டாகாமல், பிரபஞ்சமேபிரம்மத்தின் தோற்றம் என்று உணர்ந்தவன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *