ATHMA VIDHYA VILASAM 21-25 – J K SIVAN

ஆத்ம வித்யா விலாசம் 21-25 – நங்கநல்லூர் J K SIVAN
ஸதாசிவ ப்ரம்மேந்திரா

21. तिष्ठन्परत्र धाम्नि स्वीयसुखास्वादपरवशः कश्चित् । क्वापि ध्यायति कुहचिद्गायति कुत्रापि नृत्यति स्वैरम् ॥ २१॥
tiShThanparatra dhAmni svIyasukhAsvAdaparavashaH kashchit | kvApi dhyAyati kuhachidgAyati kutrApi nR^ityati svairam || 21||
திஷ்ட²ந்பரத்ர தா⁴ம்நி ஸ்வீயஸுகா²ஸ்வாத³பரவஶ: கஶ்சித் । க்வாபி த்⁴யாயதி குஹசித்³கா³யதி குத்ராபி ந்ரு’த்யதி ஸ்வரம் ॥ 21॥
ப்ரம்மானந்தத்தில் ஆழ்ந்த ஞானி தன்னில் தானே லயித்துக்கொண்டிருப்பவன். தானே எங்கும் சுற்றுவான், பாடுவான், ஆடுவான், மற்றவரைப் பற்றியோ,உலகைப்பற்றியிவ் சிறிதும் நினவில்லாதவன். சிலநேரம் அசைவற்று தியானத்திலேயும் ஆழ்ந்து விடுவான்.

22. अगृहीताघकलङ्कः प्रशमितसङ्कल्पविभ्रमः प्राज्ञः । न्यक्कृतकार्यकलापस्तिष्ठत्यापूर्णसीमनि क्वापि ॥ २२॥
agR^ihItAghakala~NkaH prashamitasa~NkalpavibhramaH prAj~naH | nyakkR^itakAryakalApastiShThatyApUrNasImani kvApi || 22||
அக்³ரு’ஹீதாக⁴கலங்க: ப்ரஶமிதஸங்கல்பவிப்⁴ரம: ப்ராஜ்ஞ: । ந்யக்க்ரு’தகார்யகலாபஸ்திஷ்ட²த்யாபூர்ணஸீமநி க்வாபி ॥ 22॥
ஆத்ம ஞானியின் மனதில் எண்ணங்களே எதுவுமில்லை. மனோ நாசம் என்பார்களே மனத்தில் எதுவுமில்லாத நிலை அதை பூரணமாக அனுபவிப்பவன். எண்ணங்களற்று ஒரு வினாடி கூட நம்மால் வாழமுடியாது. அவன் பிரம்மமே வடிவானவன் என்பதால் ப்ரம்மம் ஒன்றே அவன் நினைவு. தியானம் விஞ்ஞானம் இரண்டிற்குமே அப்பாற்பட்ட ஒரு ஸ்திதி அவனுடையது. காட்சிக்கு சம்பந்தமில்லாத சாக்ஷி அவன்.

23. चपलं मनकुरङ्गं चारु गृहीत्वा विमर्शवागुरया । निगमारण्यविहारश्रान्तः शेते स्वधाम्नि कोऽप्येकः ॥ २३
chapalaM manakura~NgaM chAru gR^ihItvA vimarshavAgurayA | nigamAraNyavihArashrAntaH shete svadhAmni ko.apyekaH || 23||
சபலம் மநகுரங்க³ம் சாரு க்³ரு’ஹீத்வா விமர்ஶவாகு³ரயா । நிக³மாரண்யவிஹாரஶ்ராந்த: ஶேதே ஸ்வதா⁴ம்நி கோऽப்யேக: ॥ 23॥
சில மஹான்கள் மட்டுமே கொஞ்சம் கொஞ்சமாக மனதை வசியப்படுத்தி, கட்டுக்குள் கொண்டு வந்து, அதை ஆராய்ந்து எண்ணங்களை ஒவ்வொன்றாக அப்புறப்படுத்தி அதில் ப்ரம்மம் ஒன்றே நிறைந்திருக்க செய்ய வல்லவர்கள். இது தான் அவர்கள் தவம் எனப்படுகிறது. மனது என்பது எங்கும் சுற்றி தாவி திரியும் ஒரு துள்ளி ஓடும் மான். அதைக் கட்டிப்போடுவது எளிதல்ல. அதில் முயன்று வெற்றி பெற்றவனே ப்ரம்ம ஞானி.

24. दारुणचित्तव्याघ्रं धीरमनःखड्गधारया हत्वा । अभयारण्ये कोऽपि स्वैरविहारी जयत्येकः ॥ २४॥
dAruNachittavyAghraM dhIramanaHkhaDgadhArayA hatvA | abhayAraNye ko.api svairavihArI jayatyekaH || 24||
தா³ருணசித்தவ்யாக்⁴ரம் தீ⁴ரமந:க²ட்³க³தா⁴ரயா ஹத்வா । அப⁴யாரண்யே கோऽபி ஸ்வைரவிஹாரீ ஜயத்யேக: ॥ 24॥

மனத்தை குரங்கு என்கிறோம், மான் என்கிறோம், இப்போது ப்ரம்மேந்திரா அதை அடங்காத காட்டுப்புலி என்கிறார். ஞானம் எனும் கூரிய அம்பால் தான் வேடனாகிய நாம் அழிக்க முடியும். மனதை பரிசுத்தமாக்கிக்கொள்ள பாப கார்யங்கள், பாப எண்ணங்கள் விலகவேண்டும். அதற்கு தியானம் தவம் தேவை. ஐம்புலன்களின் ஈர்ப்புகல் நெருங்கக் கூடாது. அப்போது தான் ஜீவன் ஆத்மாவோடு இணைவான். பரிபூர்ண ஞானம் ஒன்றே மனதை, அதன் எண்ணங்களை நாசமாக்கும். ப்ரம்ம ஞானி பயமற்றவன். அபயம் என்பதே ப்ரம்மம் தானே. பிரபஞ்சத்தில் எங்கும் சுதந்திரமாக ப்ரம்ம ஞானி உலவுவான். ஜீவன் முக்தன்.

25. सज्जनहृदयसरोजोन्मीलनकरधीकरप्रसरः । एको यतिवरपूषा निर्दोषश्चरति चिद्गगने ॥ २५॥
sajjanahR^idayasarojonmIlanakaradhIkaraprasaraH |eko yativarapUShA nirdoShashcharati chidgagane || 25||
ஸஜ்ஜநஹ்ரு’த³யஸரோஜோந்மீலநகரதீ⁴கரப்ரஸர: । ஏகோ யதிவரபூஷா நிர்தோ³ஷஶ்சரதி சித்³க³க³நே ॥ 25॥

ப்ரம்ம ஞானியின் ஞானக்கதிர்கள் நல்லோரின் மேல் விழும்போது அவர்களை விழிப்புணர்வு பெறச் செயகிறது. மஹா பெரியவா ரமண மஹரிஷி போன்றோர் தரிசனம் நமக்கு எத்தனை பாக்யம் என்று இப்போது புரிகிறதா? பகலிரவு இல்லாத ஞான சூர்யன் அவர்கள். அவர்களை தரிசிப்பதும், அவர்கள் நடந்த பாதையில் பின் செல்வதும் எல்லோருக்கும் கிட்டுவதல்ல. நினைத்தாலே இனிப்பவர்கள்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *