ATHMA VIDHYAA VILASA – 6-10 SLOKAS – J K SIVAN

ஆத்ம வித்யா விலாசம் 6-10. – நங்கநல்லூர் J K SIVAN
சதாசிவ ப்ரம்மேந்திரா

मायावशेन सुप्तो मध्ये पश्यन्सहस्रशः स्वप्नान् । देशिकवचःप्रबुद्धो दीव्यत्यानन्दवारिधौ कोऽपि ॥ ६ 6 ॥

மாயாவஶேந ஸுப்தோ மத்⁴யே பஶ்யந்ஸஹஸ்ரஶ: ஸ்வப்நாந் । தே³ஶிகவச:ப்ரபு³த்³தோ⁴ தீ³வ்யத்யாநந்த³வாரிதௌ⁴ கோऽபி ॥ 6॥

6. மாயையின் பிடியில் வகையாக சிக்கி அல்லல் படுகிறோம். அஞ்ஞான மாயையில் மயங்கி கலர் கலராக கனவுகள் காண்கிறோம். எல்லாம் பொய் . இதில் சிக்காமல் ஒரு சிலர் மட்டுமே குரு தேசிகனின் உபதேசமொழிகளினால் கனவு நிலை கலைந்து விழிப்புணர்வு பெற்று ஆத்மானந்தத்தில் ஞான ஒளி வீசுகிறவர்கள்.

प्राकृतभावमपास्य स्वीकृतनिजरूपसच्चिदानन्दः ।गुरुवरकरुणापाङ्गाद्गौरवमासाद्य माद्यति प्राज्ञः ॥ ७7 ॥

ப்ராக்ரு’தபா⁴வமபாஸ்ய ஸ்வீக்ரு’தநிஜரூபஸச்சிதா³நந்த:³ । கு³ருவரகருணாபாங்கா³த்³கௌ³ரவமாஸாத்³ய மாத்³யதி ப்ராஜ்ஞ: ॥ 7॥

7. குருவின் அனுக்ரஹம் இல்லாமல் வாழ்வில் முன்னேற இயலாது. மேன்மையான குருவின் கடைக்கண் பார்வை தரும் கருணையினால், அஞ்ஞான போர்வை அளிக்கும் மாய ஸ்வபாவத்தை அகற்றி, ஒவ்வொருவரின் நிஜ ஸ்வரூபமான ஸத் (இருப்புண்மை) – சித் (பேருணர்வு) – ஆனந்தத்தை [மீண்டும்] உணர்ந்து கெட்டியாக பிடித்துக் கொண்டு அசாத்தியமான உயர்ந்த நிலையடைந்து, ஞானி போதக்களிப்பில் திளைக்கின்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். புத்திமான்கள்.

श्रीगुरुकृपया सच्चित्सुखनिजरूपे निमग्नधीर्मौनी । विहरति कश्चन विबुधः शान्ताहन्तो नितान्तमुदितान्तः ॥ ८ 8 ॥

ஶ்ரீகு³ருக்ரு’பயா ஸச்சித்ஸுக²நிஜரூபே நிமக்³நதீ⁴ர்மௌநீ । விஹரதி கஶ்சந விபு³த:⁴ ஶாந்தாஹந்தோ நிதாந்தமுதி³தாந்த: ॥ 8॥

8. குருவின் கிருபையினால், மெய்யறிவுற்ற ஒருவன், தனது நிஜ ஸ்வரூபமான ஸத் (இருப்புண்மை) – சித் (பேருணர்வு) – சுகத்தினில் தன் மனத்தை அமிழ்த்தி, அகங்காரத்தை முற்றிலும் சமனப்படுத்திவிட்டு, மௌனமாய் (மனச் சலனமற்று) அளவற்ற மகிழ்ச்சியில் திளைக்க முடிகிறது. அதற்கு அவன் முயற்சியே காரணம். இது எல்லோருக்குமே பொதுவான மார்க்கம். ஆனால் அநேகர் நாம் அதை லக்ஷியம் பண்ணுவதில்லை. மாயையில் கட்டுண்டு அல்லல் படுகிறோம். அருமையான பாதை எதிரே இருப்பதை அறிவதில்லை.

गुरुवरकरुणालहरीव्यतिकरभरशीतलस्वान्तः । रमते यतिवर एको निरुपमसुखसीमनि स्वैरम् ॥ ९ 9॥

கு³ருவரகருணாலஹரீவ்யதிகரப⁴ரஶீதலஸ்வாந்த: । ரமதே யதிவர ஏகோ நிருபமஸுக²ஸீமநி ஸ்வைரம் ॥ 9॥

9. குரு வின் கருணை வெள்ளத்தினால், பக்தனுடைய அந்தக்கரணங்கள் ஐம்புலன்களால் பிடிபட்ட தாபங்களிலிருந்து மீண்டு அவன் சத் சிதானந்த இன்ப ‘குளு குளு’ வில் சுகம் பெற்று இணையில்லாத ஆத்ம அனுபவ த்தில் மூழ்கி ஞான டு ஒளி வீசுகிறான்.

श्रीदेशिकवरकरुणारविकरसमपोहितान्तरध्वान्तः । विहरन्मस्करिवर्यो निरवधिकानन्दनीरधावास्ते ॥ १० 10॥

ஶ்ரீதே³ஶிகவரகருணாரவிகரஸமபோஹிதாந்தரத்⁴வாந்த: । ஆத்மவித்³யாவிலாஸ: விஹரந்மஸ்கரிவர்யோ நிரவதி⁴காநந்த³நீரதா⁴வாஸ்தே ॥ 10॥

10. ஸ்ரீ குருதேசிகரின் கருணை எனும் சூரிய ஒளி பிரகாசத்தினால் பக்தனின் மனத்தை காரிருளாக சூழ்ந்து கொண்டிருக்கும் அஞ்ஞானம் நீங்குகிறது. பல காலம் இருளில் மூழ்கியிருந்த ஒரு அரை தீபத்தின் ஒளியால் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒளி பெறுவதைப் போல, பக்தன் மாயை விலக்கப்பட்டு உலகின் பிடிப்புகளில் இருந்து விடுபட்டு எல்லை இல்லாத சத் சித்தானந்த கடலில் சுகிக்கிறான்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *